பண்டார் உத்தாமா டாமன்சாரா

ஆள்கூறுகள்: 3°8′36″N 101°36′41″E / 3.14333°N 101.61139°E / 3.14333; 101.61139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டார் உத்தாமா
புறநகர்
Bandar Utama
பண்டார் உத்தாமா
பண்டார் உத்தாமா
அடைபெயர்(கள்): BU
பண்டார் உத்தாமா is located in மலேசியா
பண்டார் உத்தாமா
பண்டார் உத்தாமா
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°8′36″N 101°36′41″E / 3.14333°N 101.61139°E / 3.14333; 101.61139
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
மாநகராட்சி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
அரசு
 • வகைஉள்ளாட்சி
 • நிர்வாகம்பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
 • மாநகர முதல்வர்முகமட் அசான் அமீர்
Mohamad Azhan Md. Amir
21 அக்டோபர் 2021
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு46xxx, 473xx, 474xx, 478xx, 52xxx
இணையதளம்mbpj.gov.my

பண்டார் உத்தாமா அல்லது பண்டார் உத்தாமா டாமன்சாரா (மலாய்: Bandar Utama Damansara (BU); ஆங்கிலம்: Bandar Utama Damansara; சீனம்: 万达镇); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், சுங்கை பூலோ முக்கிம் பகுதிக்குள் அமைந்து உள்ள பெரிய குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும்.

பண்டார் உத்தாமா டாமன்சாரா புறநகர்ப் பகுதி; அதன் அருகில் இருக்கும் கம்போங் சுங்கை காயு ஆரா (Kampung Sungai Kayu Ara) புறநகர்ப் பகுதி; ஆகிய இரு பகுதிகளும் இணைந்து, பெட்டாலிங் ஜெயாவில் PJU 6 (PJU 6 Section) எனும் நகர்ப் பிரிவை உருவாக்குகின்றன. பண்டார் உத்தாமா டாமன்சாரா, ஏறக்குறைய 1000 ஏக்கர் (4 கி.மீ²) பரப்பளவைக் கொண்டது.[1]

கிள்ளான் பள்ளத்தாக்கில் மிகவும் பிரபலமான 1 உத்தாமா வணிக மையம் (1 Utama Shopping Centre) இங்குதான் உள்ளது.[2] கோலாலம்பூரின் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலுக்கு எதிரே அமைந்து உள்ளது.[3]

பொது[தொகு]

பண்டார் உத்தாமா MRT நிலையத்திற்கு அருகில்

பண்டார் உத்தாமா டாமன்சாரா நகர்ப் பகுதியை எளிதில் அணுகுவதற்குச் சிறந்த நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள் உள்ளன. அவையாவன:

பேருந்துகள் மற்றும் சிற்றிடைப் போக்குவரத்துச் சேவைகள் (Shuttle Services) பண்டார் உத்தாமாவை கோலாலம்பூர்; கிளானா ஜெயா; மாண்ட் கியாரா; சைபர்ஜெயா; கோலாலம்பூர் நடுவண் தொடருந்து நிலையம் போன்ற பகுதிகளுடன் இணைக்கின்றன

அரசியல்[தொகு]

பண்டார் உத்தாமா நாடாளுமன்றத் தொகுதிக்கு பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) கூட்டணியைச் சேர்ந்த ஜ.செ.கயின் டோனி புவா (Tony Pua)); மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதிக்கு பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) கூட்டணியைச் சேர்ந்த ஜ.செ.கயின் சமாலியா சமாலுதின் (Jamaliah Jamaluddin) சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

வரலாறு[தொகு]

1990-களின் முற்பகுதியில் சி ஓய் சான் ஓல்டிங்ஸ் (See Hoy Chan Holdings Sdn. Bhd.) என்ற நிறுவனத்தின் கீழ் பண்டார் உத்தாமா டமன்சாராவின் கட்டுமானம் தொடங்கியது.

1991-ஆம் ஆண்டில், பண்டார் உத்தாமா டமன்சாரா பகுதி உருவாக்கப்படும் போது அங்கு 100 பேரைக் கொண்ட எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள் மட்டுமே இருந்தன.

அண்டையயல்[தொகு]

பண்டார் உத்தாமா வீட்டுவசதி மண்டலம் (Housing Zone); 12 ஒருங்கிணைந்த வீடுமனைத் தொகுதிகளைக் (Integrated Neighbourhoods) கொண்டுள்ளது. BU 1 முதல் BU 12 வரையிலான 12 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதியையும் செக்சன் (Section) என்று அழைக்கிறார்கள்.

இந்தத் தொகுதிகள் சாலைகள் மூலம் இணைக்கப் படுகின்றன, எ.கா. ஜாலான் BU2/5 (Jalan BU2/5); இதில் ஜாலான் எனும் மலாய்ச் சொல்லின் பொருள் சாலை ஆகும். BU2 (Bandar Utama 2) என்பது தொகுதி; மற்றும் 5 என்பது சாலையின் எண் ஆகும்.

பாதுகாப்பான நடை தூரம்[தொகு]

ஒவ்வோர் வீடுமனைத் தொகுதியும் (அண்டையயல் - Neighbourhood), 500 நவீன வீடுகளைக் கொண்டுள்ளது. சுற்றுப்புறத்தின் சமூக தொடர்புகளை வளர்ப்பதற்காக ஒவ்வோர் வீடுமனைத் தொகுதியிலும் அதிக அளவிற்கு வீடுகள் கட்டப்பட்டன.

ஒவ்வோர் வீட்டுமனைத் தொகுதியிலும் வசதியான விளையாட்டு மைதானம் உள்ளது; முக்கிய சாலைகளைக் கடக்காத நிலையில் அனைத்து வீடுகளில் இருந்தும் பாதுகாப்பான நடை தூரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

சமூகத் தொடர்புகள்[தொகு]

இந்த விளையாட்டு மைதானங்கள் சமூகத்தின் மையங்களாக மாறிவிட்டன; அண்டை வீட்டுமனைத் தொகுதிகளுக்கு இடையிலான பெரும்பாலான சமூகத் தொடர்புகள் இங்கு நடைபெறுகின்றன. ஒவ்வோர் அண்டைத் தொகுதியும்; 8 முதல் 10 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்ட தடுப்புச் சுவர்களுக்குள் கட்டப்பட்டுள்ளது.

முக்கியமான போக்குவரத்துச் சாலைகள் அண்டை வீட்டுமனைத் தொகுதிகளைக் கடந்து செல்வதை உறுதி செய்கின்றன. பாதசாரி நடைபாதைகளின் (Pedestrian Walkways) விரிவான வலையமைப்பு முழு நகரத்தையும் இணைக்கின்றது. இந்த நடைபாதைகள் குறுகிய தூர பயணத்திற்காக வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க உதவுகின்றன.

பண்டார் உத்தாமாவில் உள்ள வீடுகள் 1991-இல் விற்பனைக்கு வந்தன. 2000=-ஆம் ஆண்டுக்குள் 3000 வீடுகள் விற்கப்பட்டன. 2007-இல் 5,626 வீடுகள் விற்கப்பட்டன. இங்கு 300 கடைகளும் உள்ளன.[4]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]