கோலாலம்பூர் நடுவண் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 KA01  KJ15 MR1 ERL 
கோலாலம்பூர் சென்ட்ரல்
KL Sentral at Night.jpg
இடம் பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர், மலேசியா.
உரிமம் கெரெடாபி தனா மெலாயு, ராபிடு கேஎல், எக்ஸ்பிரஸ் தொடருந்து தனியார் நிறுவனம்
தடங்கள் இரவாங்-செரம்பன் மற்றும் செந்துல்-கிளாங் துறைமுகம் தடம் (2001 முதல் நடப்பில்)
வடக்கு-தெற்கு தடம் (கேடிஎம் இன்டர்சிடி) (2001 முதல் நடப்பில்)
கெலனா ஜயா தடம்
கேஎல்ஐஏ டிரான்சிட், கேஎல்ஐஏ எக்சுபிரசு (பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கான தொடருந்து தடங்கள்) (2002 முதல் நடப்பில்)
நடைமேடை 2 தீவு நடைமேடைகள் (கேடிஎம் கொமூட்டர்)
1 தீவு நடைமேடை (கேடிஎம் இன்டர்சிட்டி)
2 ஒருபக்க நடைமேடைகள் (கெலனா ஜெயா தடம்)
1 தீவு நடைமேடை (கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ்)
1 தீவு நடைமேடை (கேஎல்ஐஏ டிரான்சிட்)
இருப்புப் பாதைகள் 4 (கேடிஎம் கொமூட்டர்)
2 (கேடிஎம் இன்டர்சிட்டி)
3 (கேடிஎம் சரக்கு)
2 (கேலெனா ஜெயா தடம்)
2 (கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ்)
2 (கேஎல்ஐஏ டிரான்சிட்)
இணைப்புக்கள் பேருந்து மையம், ஒற்றைத் தண்டவாள தொடருந்து நிலையம், உணவு,சில்லறை வணிக வளாகம், மலேசிய தொடருந்து நிறுவன (கேடிஎம்) பராமரிப்பு பணிமனை.
கட்டமைப்பு
தரிப்பிடம் உள்ளது, கட்டணம்
மாற்றுத்திறனாளி அனுகல் Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KA01 (கேடிஎம் கொமூட்டர்), KJ15 (கேலெனா ஜெயா தடம்), MR1 (கேஎல் மோனோரெயில்)
வரலாறு
திறக்கப்பட்டது 2001 (கேடிஎம் கொமூட்டர், கேடிஎம் இன்டர்சிட்டி மற்றும் கேலெனா ஜெயா தடம்)
2002 (எக்சுபிரசு தொடருந்து இணைப்பு)
2003 (கேஎல் மோனோரெயில்)
சென்ட்ரல் நிலயத்தில் அலங்கார கூரை

கோலாலம்பூர் சென்ட்ரல் அல்லது சென்ட்ரல் கோலாலம்பூர் (Kuala Lumpur Sentral, KL Sentral) என்று அழைக்கப்படும் கோலாலம்பூர் நடுவண் தொடருந்து நிலையம் மலேசியத் தலைநகரம் கோலாலம்பூரின் முதன்மை தொடருந்து நிலையம் ஆகும். பல தடங்கள் ஒன்றிணையும் இந்நிலையம் ஏப்ரல் 16, 2001இல் திறக்கப்பட்டது. முன்னதாக பழைய கோலாலம்பூர் தொடருந்து நிலையம் நகரின் முதன்மை நகரிடை தொடருந்து மையமாக விளங்கியது. மலேசியாவின் மிகப்பெரும் தொடருந்து நிலையமாக கேஎல் சென்ட்ரல் விளங்குகின்றது.[1]

கோலாலம்பூர் நடுவண் நிலையம் இடைமுறைமை போக்குவரத்து அச்சாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரின் பெரும்பாலான பயணியர் தொடருந்து தடங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. மலேசியத் தீபகற்பத்திற்கும் சிங்கப்பூருக்கும் செல்லும் பல நகரிடை சேவைகள் இங்கிருந்து கிளம்புகின்றன. தொடருந்து இணைப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வணிக வளாகங்களும் அலுவகங்களும் அடுக்ககங்களும் திட்டமிட்டபடி முடிவுறவில்லை. இவை 2015இல் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகின்றன.[2] இது கோலாலம்பூரின் நிதி, வணிக மையமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]