நீலாய் கொமுட்டர் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KB11 

நீலாய் கொமுட்டர் நிலையம்
Nilai Komuter Station
பொது தகவல்கள்
அமைவிடம்நீலாய், சிரம்பான் மாவட்டம், நெகிரி செம்பிலான், மலேசியா
ஆள்கூறுகள்2°48′8″N 101°47′58″E / 2.80222°N 101.79944°E / 2.80222; 101.79944
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர்மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் கேடிஎம் கொமுட்டர்
மலாயா மேற்கு கடற்கரை
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KB11 
வரலாறு
திறக்கப்பட்டது KB11  1995
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்1995
சேவைகள்
முந்தைய நிலையம்   நீலாய் கொமுட்டர் நிலையம்   அடுத்த நிலையம்
பத்தாங் பெனார் நிலையம்
<<<
பத்துமலை நிலையம்
 

பத்துமலை
புலாவ் செபாங் வழித்தடம்
 
லாபு நிலையம்
>>>
புலாவ் செபாங் தம்பின்
அமைவிடம்
Map
நீலாய் நிலையம்


நீலாய் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Nilai Komuter Station; மலாய்: Stesen Komuter Nilai) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், நீலாய் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]

நீலாய் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், நீலாய் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது. 2015-ஆம் ஆண்டில் கேடிஎம் இடிஎஸ் சேவைகள் கிம்மாஸ் தொடருந்து நிலையம் வரை நீட்டிக்கப்பட்ட போது, இந்த நிலையம் கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) சேவைக்கு ஒரு நிறுத்தமாகச் செயல்பட்டது.

முன்பு சிரம்பான் வழித்தடம் என்றும்; காஜாங் வழித்தடம் என்றும் அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடத்தில் இந்த நிலையம் சேவையில் ஈடுபட்டுள்ளது.

பொது[தொகு]

இந்த நிலையம் பிரித்தானிய மலாயா காலத்தில் சிப்பாங் சாலையில் ஒரு நிறுத்தமாகத் தன் தொடக்கக்காலப் பணிகளைத் தொடங்கியது. மற்ற பெரும்பாலான நிலையங்களைப் போலவே இந்த நிலையமும் இரட்டை தடங்களைக் கொண்டுள்ளது.

தற்போது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்; மற்றும் சுற்றுவட்டாரக் கல்லூரிகளுக்கான ஓர் இணைப்பாக இந்த நிலையம் செயல்படுவதால், அதன் செயல்பாட்டு நேரங்களில், கணிசமான அளவிற்கு பயணிகளைப் பெறுகிறது.[2]

விரிவாக்கம்[தொகு]

தொடக்கத்தில் இந்த நிலையம் ஒரு சின்ன நிலையக் கட்டிடமாகத்தான் இருந்தது. ஒரு பயணச் சீட்டு வழங்கிடம்; மற்றும் இரண்டு பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்கள்; மூடப்பட்ட வழித்தடங்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தது. இருப்பினும், 2005-ஆம்; 2006-ஆம் ஆண்டுகளில், இந்த நிலையத்தில் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுமானங்கள் நடைபெற்று பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.[3]

முன்பு இந்த நிலையம் கேடிஎம் இடிஎஸ் சேவைக்கு ஒரு நிறுத்தமாகச் செயல்பட்டது. தற்போது அந்தச் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கான துரிதத் தொடருந்து இணைப்பு (Express Rail Link) தொடங்கப்படுவதற்கு முன்னர், இந்த நிலையம் மட்டுமே கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை இணைக்கும் தொடருந்து நிலையமாகவும் செயல்பட்டது.

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்[தொகு]

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் இங்கு உள்ளன. பொதுவாக நீலாய் நகரிலிருந்து வானூர்தி நிலையத்தை அடைய ஒரு மணிநேரம் பிடிக்கும்.

இந்த நிலையத்தில் 2 பக்க நடைமேடைகள்; 2 வழித்தடங்கள் உள்ளன. நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கிடம் மற்றும் மூன்று பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்களும் உள்ளன.[4]

மேலும் காண்க[தொகு]

நீலாய் நிலையக் காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Nilai KTM Komuter Station is a KTM Komuter train halt forms part of a common KTM Komuter railway line in Seremban Line. The Station was completed and opened to the public on 1995. It is situated close to and named after the old town of Nilai, Negeri Sembilan". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  2. "KTM Nilai - Nilai is known for its proximity to the Kuala Lumpur International Airport (KLIA)". transit-link.com. 22 May 2023. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  3. "Nilai KTM Station has since undergone significant improvements in 2005 and 2006 to support more passengers". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  4. "KTM Komuter - Nilai Train Station Facilities, Counter Operating Hours". MALAYSIA CENTRAL (ID). 21 December 2010. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.

வெளி இணைப்புகள்[தொகு]