மிட் வெளி கொமுட்டர் நிலையம்

ஆள்கூறுகள்: 3°7′6″N 101°40′43″E / 3.11833°N 101.67861°E / 3.11833; 101.67861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KB01 

மிட் வெளி கொமுட்டர் நிலையம்
Mid Valley Komuter Station
மிட் வெளி கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மிட் வெளி சிட்டி, லெம்பா பந்தாய், கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள்3°7′6″N 101°40′43″E / 3.11833°N 101.67861°E / 3.11833; 101.67861
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள்  பத்துமலை-புலாவ் செபாங் 
(கேடிஎம் கொமுட்டர்)
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்  KD01   KJ17  அப்துல்லா உக்கும் நிலையம் கேஎல் எக்கோ சிட்டி வழியாக பாதசாரி மேம்பாலம்
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KB01 
வரலாறு
திறக்கப்பட்டது23 ஆகத்து 2004
சேவைகள்
முந்தைய நிலையம்   மிட் வெளி கொமுட்டர் நிலையம்   அடுத்த நிலையம்
கோலாலம்பூர் சென்ட்ரல்
>>>
பத்துமலை கொமுட்டர் நிலையம்
 

புலாவ் செபாங் வழித்தடம்
 
செபுத்தே கொமுட்டர் நிலையம்
>>>
புலாவ் செபாங் தம்பின்
அமைவிடம்
Map
மிட் வெளி கொமுட்டர் நிலையம்

மிட் வெளி கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Mid Valley Komuter Station; மலாய்: Stesen Komuter Mid Valley) என்பது மலேசியா, கோலாலம்பூர், லெம்பா பந்தாய் (Lembah Pantai) புறநகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் நிலையமாகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தில், கேடிஎம் கொமுட்டர் தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது. [1]

இந்த நிலையம் RM 12.2 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, ஆகத்து 2004-இல் பொதுமக்களின் பயணங்களுக்கு திறக்கப்பட்டது. கேஎல் சிட்டி நகர மையத்திற்கு ஒரு பாதசாரி மேம்பாலம் 14 நவம்பர் 2019-இல் திறக்கப்பட்டது.

பொது[தொகு]

கேஎல் சிட்டி நகர மையத்திற்கான பாதசாரி மேம்பாலம் மூலமாக மிட் வெளி நிலையத்திலிருந்து  KD01   KJ17  அப்துல்லா உக்கும் நிலையத்திற்குக்கு பாதசாரிகள் செல்ல முடியும். அப்துல்லா உக்கும் நிலையத்தில் இருந்து கிள்ளான் துறைமுக வழித்தடம் மற்றும் கிளானா ஜெயா வழித்தடம் ஆகிய தடங்களில் செல்லும் தொடருந்துகளை அணுகலாம்.[2][3]

2021-இல், இந்த மிட் வெளி நிலையத்தின் ஒரு பகுதி மேம்படுத்தும் பணிகளுக்காக மூடப்பட்டது. தெற்கு நோக்கி காஜாங் மற்றும் சிரம்பான் செல்லும் தொடருந்துகளுக்காக நிலையத்தின் ஒரு பகுதி மட்டுமே திறந்திருந்தது.

சிரம்பான் வழித்தடம்[தொகு]

சிரம்பான் வழித்தடம் அல்லது சிரம்பான் தொடருந்து வழித்தடம் (Seremban Line) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.

இந்தச் வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. பத்துமலை; புலாவ் செபாங்; தம்பின் ஆகிய மூன்று நகரங்களை இந்தச் சேவை இணைக்கின்றது.

ரவாங் தம்பின் இணைப்பு[தொகு]

இந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் சிரம்பான் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன.

15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை கோலாலம்பூர் ரவாங் நகரங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "The Mid Valley KTM Komuter Station is a KTM Komuter train halt forms part of a common KTM Komuter railway line in Seremban Line. The Station was completed and opened to the public on August 2004". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 11 August 2023.
  2. "The Mid Valley KTM Komuter station was completed at a total cost of RM12.2 million, and opened to the public on August 2004". பார்க்கப்பட்ட நாள் 11 August 2023.
  3. "KTM train station called Mid Valley Megamall which stops you right outside our doors! A great option if you're coming from or heading to KL Sentral, KLIA". www.midvalley.com.my. பார்க்கப்பட்ட நாள் 11 August 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]