உள்ளடக்கத்துக்குச் செல்

புலாவ் செபாங்

ஆள்கூறுகள்: 2°28′0″N 102°14′0″E / 2.46667°N 102.23333°E / 2.46667; 102.23333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலாவ் செபாங்
மலாக்கா
Pulau Sebang
புலாவ் செபாங் is located in மலேசியா மேற்கு
புலாவ் செபாங்
புலாவ் செபாங்
புலாவ் செபாங் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°28′0″N 102°14′0″E / 2.46667°N 102.23333°E / 2.46667; 102.23333
நாடு மலேசியா
மாநிலம்மலாக்கா
தொகுதிஅலோர் காஜா மாவட்டம்
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாடு இல்லை)
மலேசிய அஞ்சல் குறியீடு
78000
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்M

புலாவ் செபாங் என்பது (மலாய்: Pulau Sebang; ஆங்கிலம்: Pulau Sebang; மலேசியா, மலாக்கா மாநிலத்தில், அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமப்புற நகரம்.

நெகிரி செம்பிலான், தம்பின் மாவட்டம், தம்பின் நகரின் எல்லையுடன் இணைந்து உள்ளது. மலாக்கா நகரில் இருந்து 32 கி.மீ.; அலோர் காஜா நகரில் இருந்து 9 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.

வரலாறு[தொகு]

1905 முதல் 1942 வரை, புலாவ் செபாங் நகரில் இருந்து மலாக்கா நகருக்கு இரயில் பாதை இருந்தது, ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானியர்களால் அந்த இரயில் பாதை பெயர்க்கப்பட்டது.

சயாம் மரண இரயில்பாதை போடப் படுவதற்காக, புலாவ் செபாங் நகரில் இருந்து மலாக்கா நகர் வரையிலான இரயில் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டன.[1]

இரயில் பாதை வழித் தடங்கள்[தொகு]

முந்தைய இரயில் பாதை வழித் தடங்கள்; மற்றும் ஆற்றின் குறுக்கே போடப்பட்ட இரயில் பாலங்கள் இன்றும் உள்ளன. மலாக்கா நகரத்திற்கான இரயில் பாதையை மீண்டும் திறக்க மலாக்கா அரசாங்கம் திட்டம் வகுத்து உள்ளது.

மலாக்கா மாநிலத்தில் இப்போது, இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே, இரயில் வண்டிச் சேவைகள் உள்ளன. அவற்றுள் புலாவ் செபாங் ஓர் இடமாகும்.[2]

புலாவ் செபாங் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

மலாக்கா; அலோர் காஜா மாவட்டம், புலாவ் செபாங் பகுதியில் இரு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 146 மாணவர்கள் பயில்கிறார்கள். 25 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
MBD0064 புலாவ் செபாங் SJK(T) Ladang Gadek[4] காடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73000 தம்பின் 37 10
MBD0068 புலாவ் செபாங் SJK(T) Pulau Sebang[5] புலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி 73000 தம்பின் 109 15

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pulau Sebang - Melaka". www.heritagemalaysia.my. பார்க்கப்பட்ட நாள் 21 January 2022.
  2. "Pulau Sebang / Tampin KTM Station – klia2.info". பார்க்கப்பட்ட நாள் 21 January 2022.
  3. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
  4. "காடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG GADEK". mbd0064.blogspot.com (in ஆங்கிலம்). Archived from the original on 28 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  5. "புலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி - SJK(T) PULAU SEBANG". sjktpulausebang.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலாவ்_செபாங்&oldid=3910027" இலிருந்து மீள்விக்கப்பட்டது