கெப்போங் கொமுட்டர் நிலையம்

ஆள்கூறுகள்: 3°12′10″N 101°38′15″E / 3.20278°N 101.63750°E / 3.20278; 101.63750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KA06 

கெப்போங் கொமுட்டர் நிலையம்
Kepong Commuter Station
கெப்போங் கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்52000, கெப்போங், கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள்3°12′10″N 101°38′15″E / 3.20278°N 101.63750°E / 3.20278; 101.63750
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் கிள்ளான் துறைமுக வழித்தடம்
கேடிஎம் கொமுட்டர்
நடைமேடை2 நடை மேடை
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KA06 
வரலாறு
திறக்கப்பட்டது1892
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்1995
சேவைகள்
முந்தைய நிலையம்   கெப்போங்   அடுத்த நிலையம்
கெப்போங் சென்ட்ரல் <<< தஞ்சோங் மாலிம்
 
கிள்ளான் துறைமுக வழித்தடம்
 
சிகாம்புட் >>> கிள்ளான் துறைமுகம்
அமைவிடம்
Map
கெப்போங் கொமுட்டர் நிலையம்


கெப்போங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Kepong Commuter Station மலாய்: Stesen Komuter Kepong); சீனம்: 甲洞通勤站) என்பது மலேசியா, கோலாலம்பூர், பெட்டாலிங் மாவட்டம், கெப்போங் நகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் 1892-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. நவம்பர் 1995-இல் மீண்டும் கட்டப்பட்டு மின்மயமாக்கப்பட்டது.[1]

இந்த நிலையம் கெப்போங் நகரின் மையப் பகுதியில், தாமான் கெப்போங் (Taman Kepong) எனும் வீட்டுமனைப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கெப்போங் நகரத்தின் பெயர் இந்த கொமுட்டர் நிலையத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.[2]

பொது[தொகு]

கெப்போங் கொமுட்டர் நிலையம், கெப்போங் புறநகர் பகுதியில் அதிகரித்து வந்த போக்குவரத்தை நிவர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது. கெப்போங் சென்ட்ரல் நிலையம், அதே பகுதியில் சேவை செய்கிறது. கெப்போங் சென்ட்ரல் நிலையம், கெப்போங் கொமுட்டர் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[3]

2006-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி திறக்கப்பட்ட கேடிஎம் கொமுட்டர் சேவைக்கு இந்த நிலையம் புதிய கூடுதல் சேவையை வழங்குகிறது.[4]

பெரிய வாகன நிறுத்துமிடம்[தொகு]

கேடிஎம் கொமுட்டர் தவிர வேறு எந்த தொடருந்து அமைப்புகளும் இங்கு இயங்காததால், இந்த தொடருந்து நிலையத்தில் குறிப்பிட்ட நேரங்களில் பயணிகளால் நிரம்பியிருக்கும். 2013-ஆம் ஆண்டில், பயணிகள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு வசதியாக ஒரு பெரிய வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டது.

அதற்காக அங்கு இருந்த ஒரு பசுமை பூங்காவின் நிலம் பயன்படுத்தப்பட்டது. அதனால் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலரின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை (Damansara-Puchong Expressway), கூச்சிங் சாலை, கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (Kuala Lumpur Middle Ring Road 2) (MRR2), ஈப்போ சாலை ஆகியவை முக்கியமான அணுகல் சாலைகள். ரேபிட் கேஎல் பேருந்து மற்றும் மெட்ரோ பேருந்துகள் இங்கு போக்குவரத்தை வழங்குகின்றன.

கெப்போங் நகரம்[தொகு]

கெப்போங், (Kepong) நகரம் கோலாலம்பூர் கூட்டாட்சி நிலப்பகுதியில் அமைந்து உள்ள ஒரு பெருநகரம். ’கெப்போங்’ என்பது ஒரு மலாய்ச் சொல். "சூழ்" அல்லது "சுற்று" என்று பொருள். இந்த நகரம் ஒரு மலைத்தொடரால் சூழப்பட்டு உள்ளது. அதனால் அந்தப் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம்.

கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 12 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் இந்த நகரம் அமைந்து உள்ளது. இந்த நகரத்திற்கு அருகாமையில் டாமன்சாரா (சிலாங்கூர்), கெப்போங், குவாங் மற்றும் கோலா சிலாங்கூர் நகரங்கள் உள்ளன.

பொது[தொகு]

2015-ஆம் ஆண்டில் இருந்து, கெப்போங் நிலையத்திற்கு கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் வழியாக, கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் சேவைகள் செய்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டில், ரவாங் - கிள்ளான் துறைமுக வழித்தடம்; ரவாங் - தஞ்சோங் மாலிம் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டது.[5]

அடிப்படை வசதிகள்[தொகு]

கெப்போங் கொமுட்டர் நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகளும் (Ticketing Facilities) உள்ளன. மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாக பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் (Kiosks); போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.[6]

சேவைகள்[தொகு]

கெப்போங் கொமுட்டர் நிலையம், கெப்போங் நகரத்திற்கும், அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் மற்றும் கெப்போங் நகரத்திற்கு அருகிலுள்ள புறநகர் வீடுமனைப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. கெப்போங் நகருக்கான இந்தப் புதிய தொடருந்து நிலையம் 1995-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் கெப்போங் நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.

கெப்போங் கொமுட்டர் நிலைய காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Kepong KTM Komuter Station (formerly Kepong railway station) is a KTM commuter train station located in the northern area of Kuala Lumpur along the Port Klang Line. The Station was exist as early as 1892 and was rebuilt and electrified on November 1995". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 3 August 2023.
  2. "The KTM Kepong Railway Station (Stesen Keretapi) is served by commuter services (KTM Komuter) on the Tanjung Malim to Port Klang Route (Laluan) and is located in northern Kuala Lumpur between Kepong Sentral and Segambut stations". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 3 August 2023.
  3. "The Kepong KTM Komuter station is a commuter train station located in the northern area of Kuala Lumpur along the KTM Komuter's Rawang – Seremban Route". பார்க்கப்பட்ட நாள் 3 August 2023.
  4. "Sri Damansara Timur". MRT Corp (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  5. "On April 21, 2007, a shuttle service between Rawang and Rasa was launched. The service, which extends the KTM Komuter network by 22 km, covers three new stations, namely Serendah, Batang Kali and Rasa". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 29 July 2023.
  6. "KTM Komuter - Kuang Train Station Facilities, Counter Operating Hours". MALAYSIA CENTRAL (ID). 21 December 2010. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]