சிகாமட் தொடருந்து நிலையம்
கேடிஎம் இண்டர்சிட்டி | |||||||||||||||||||||
சிகாமட் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | சிகாமட், சிகாமட் மாவட்டம் ஜொகூர் | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 2°30′25″N 102°48′51″E / 2.50698°N 102.81412°E | ||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||
தடங்கள் | மலாயா மேற்கு கடற்கரை | ||||||||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட, இரட்டை வழித்தடம் | ||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||
நிலை | மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் புதிய நிலையம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் காரணங்களால் இன்னும் திறக்கப்படவில்லை. | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1909 | ||||||||||||||||||||
திறந்தது | சூலை 2023 | ||||||||||||||||||||
மூடப்பட்டது | 28 ஏப்ரல் 2021 | (பழைய நிலையம்)||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 1 சூன் 2023 | (திறக்கப்படவில்லை)||||||||||||||||||||
மின்சாரமயம் | உண்டு | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
சிகாமட் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Segamat Railway Station மலாய்: Stesen Keretapi Segamat); சீனம்: 昔加末火车站) என்பது தீபகற்ப மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சிகாமட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிகாமட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line) முக்கிய நிலையங்களில் ஒன்றான சிகாமட் நிலையம் 1909-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கியது. ஜொகூர் மாநிலத் தலைநகர் ஜொகூர் பாரு நகரத்தில் இருந்து 172 கி.மீ. வடக்கே உள்ளது.
பொது
[தொகு]இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி தொடருந்து சேவைகளையும் வழங்குகிறது. இந்த தொடருந்து நிலையத்தை ஒட்டி பேருந்து மற்றும் வாடகை வாகனங்களின் முனையமும் உள்ளது.
வரலாறு
[தொகு]இந்த நிலையம் முதன்முதலில் 1909-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1924-ஆம் ஆண்டில், அதே இடத்தில் ஒரு பெரிய கட்டிடத்துடன் இந்த நிலையத்தின் தலைமைக் கட்டிடம் புனரமைப்பு செய்யப்பட்டது.
இருப்பினும் இந்த நிலையம் 28 ஏப்ரல் 2021-இல் தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது; அத்துடன் தற்காலிகமாக 3.7 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்ட சிகாமட் தற்காலிக தொடருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
கிம்மாஸ்-ஜொகூர் பாரு இரட்டை கண்காணிப்பு மற்றும் மின்மயமாக்கல் திட்டத்தின் (Gemas-Johor Bahru Double Tracking and Electrification Project) ஒரு பகுதியாக, தற்போது ஒரு புதிய நிலையம் கட்டப் படுவதால் பழைய நிலையம் விரைவில் இடிக்கப்படலாம் என்றும் அறியப்படுகிறது.[1]
புதிய நிலையம்
[தொகு]ஜூன் 2023 நிலவரப்படி, புதிய நிலையம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. தற்போது நிலையம் உள் மற்றும் வெளிப்புற விளக்கு அமைப்பு, பயணிகள் அறிவிப்பு அமைப்பு, தகவல் அமைப்பு மற்றும் சமிக்ஞை அமைப்பு ஆகியவற்றிற்காக சோதிக்கப்பட்டு வருகிறது.
எவ்வாறாயினும், தற்போது மின்மயமாக்கப்பட்ட இரட்டைப் பாதை திட்டத்தின் ஒப்பீட்டளவில் மெதுவான முன்னேற்றம் காரணமாக, புதிய நிலையத்தின் திறப்புவிழா ஜூலை 2023 வரை தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுவட்டார இடங்கள்
[தொகு]- சிகாமட் மாவட்ட தகவல் அலுவலகம் (Segamat District Information Office)
- கிலோமீட்டர் 0 (KM0) சிகாமட் நினைவுச்சின்னம் (Kilometre Zero (KM0) Monument of Segamat)
- சிகாமட் வட்டச்சுற்று வழி (Segamat Roundabout)
- சிகாமட் பேருந்து முனையம் (Segamat Bus Terminal)
- சிகாமட் வாடகை உந்து வண்டி முனையம் (Segamat Taxi Terminal)
- சிகாமட் பெரும் சந்தை (Segamat Bazaar)
- சிகாமட் மத்திய கடைவளாகம் (Segamat Central Mall)
சிகாமட் நகரம்
[தொகு]சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்; ஜொகூர் மாநிலத் தலைநகரமான ஜொகூர் பாருவில் இருந்து 172 கி.மீ. வடக்கே உள்ளது. நெகிரி செம்பிலான், பகாங் ஆகியவை இந்த நகரத்தின் எல்லை மாநிலங்களாக அமைந்துள்ளன.[2]
இந்த நகரம் வேளாண்மைத் தொழிலைச் சார்ந்த நகரம் ஆகும். சுற்றியுள்ள நிலப் பகுதிகளில் (இ)ரப்பர், செம்பனை உற்பத்தி செய்யப் படுகின்றன. டுரியான் எனும் முள்நாறிப் பழத்திற்கு இந்த நகரம் பெயர் போனது.
கோலாலம்பூர், ஜொகூர் பாரு, சிங்கப்பூர் ஆகிய மூன்று மாநகரங்களுக்கும் நடு மையத்தில் சிகாமட் நகரம் அமைந்து இருக்கிறது. சிகாமட் மாவட்டத்தின் பொருளாதார முன்னோடியாக விளங்குவது வேளாண்மை. சிகாமட் மாவட்ட மக்களில் 61.8 விழுக்காட்டினர் வேளாண்மையை நம்பி வாழ்கின்றனர்; தொழில் துறையில் 13.1 விழுக்காட்டினரும் அரசாங்கப் பணிகளில் 12.2 விழுக்காட்டினரும் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zain, Nabilah (3 May 2021). "Operasi Stesen Keretapi Segamat Ditamatkan" இம் மூலத்தில் இருந்து 22 அக்டோபர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211022193856/https://sintoknews.com/operasi-stesen-keretapi-segamat-ditamatkan/.
- ↑ http://www.correctplace.com/