குரூண் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 5°49′11″N 100°28′42″E / 5.819722°N 100.478333°E / 5.819722; 100.478333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரூண் தொடருந்து நிலையம்
Gurun Railway Station
குரூண் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்குரூண், கெடா
ஆள்கூறுகள்5°49′11″N 100°28′42″E / 5.819722°N 100.478333°E / 5.819722; 100.478333
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள்தீபகற்ப மலேசியா மேற்கு கரை வழித்தடம்
நடைமேடை2 தீவு மேடைகள்
இருப்புப் பாதைகள்5
இணைப்புக்கள்உள்ளூர் போக்குவரத்து
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
வரலாறு
திறக்கப்பட்டது1915
மறுநிர்மாணம்2014
மின்சாரமயம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   குரூண்   அடுத்த நிலையம்
கோபா
 
பாடாங் பெசார் வழித்தடம்
  சுங்கை பட்டாணி
அலோர் ஸ்டார்
 
  Gold  
  சுங்கை பட்டாணி
அமைவிடம்
Map
குரூண் தொடருந்து நிலையம்


குரூண் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Gurun Railway Station மலாய்: Stesen Keretapi Gurun); சீனம்: 古伦火车站) என்பது தீபகற்ப மலேசியா, கெடா மாநிலத்தின் குரூண் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் குரூண் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), கெடா மாநிலத்தின் குரூண் நகரில் இந்த நிலையம் உள்ளது.

பொது[தொகு]

சூலை 2016-இல் கேடிஎம் கொமுட்டர் சேவையின் வடக்குப் பகுதியின் வடக்கு முனையமாக பாடாங் பெசார் நிலையத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பாக குரூண் தொடருந்து நிலையம் தான் வடக்குப் பகுதியின் வடக்கு முனையமாக இருந்தது.

ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக குரூண் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 11 சூன் 2014 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது. மரத் தூண்களால் கட்டப்பட்ட பழைய நிலையம் இடிக்கப்பட்டு விட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The KTM Gurun Railway Station (Stesen Keretapi Gurun) is located in Kedah state in Malaysia, on the KTMB North - South Line that runs from Padang Besar in the north, to Johor Bahru and Singapore in the south". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 18 July 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]