புக்கிட் தெங்கா தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 5°21′52″N 100°25′17″E / 5.3645°N 100.4215°E / 5.3645; 100.4215
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புக்கிட் தெங்கா தொடருந்து நிலையம்
Bukit Tengah Railway Station
புக்கிட் தெங்கா தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்புக்கிட் தெங்கா, பினாங்கு
ஆள்கூறுகள்5°21′52″N 100°25′17″E / 5.3645°N 100.4215°E / 5.3645; 100.4215
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள்மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
 1  பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி)
 2  பாடாங் பெசார் வழித்தடம் (கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி)
நடைமேடை2 தீவு மேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
வரலாறு
மின்சாரமயம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   புக்கிட் தெங்கா   அடுத்த நிலையம்
பட்டர்வொர்த்
 
பாடாங் ரெங்காஸ் வழித்தடம்
  பாடாங் ரெங்காஸ்
புக்கிட் மெர்தாஜாம்
 
பாடாங் பெசார் வழித்தடம்
 
பட்டர்வொர்த்
அமைவிடம்
Map
புக்கிட் தெங்கா தொடருந்து நிலையம்


புக்கிட் தெங்கா தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Bukit Tengah Railway Station மலாய்: Stesen Keretapi Bukit Tengah); சீனம்: 武吉登雅火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டம், புக்கிட் தெங்கா நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் புக்கிட் தெங்கா மற்றும் அதன் சுற்றுப் புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பினாங்கு மாநிலத்தின் புக்கிட் தெங்கா நகரில் இந்த நிலையம் உள்ளது.[2]

பொது[தொகு]

ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், புக்கிட் தெங்கா நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது. கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகள் இந்த நிலையத்தில் நிற்பது இல்லை.[1]

புக்கிட் தெங்கா நகரம்[தொகு]

புக்கிட் தெங்கா (Bukit Tengah) பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District) உள்ள ஒரு தொழில்துறை நகரம். கம்போங் புக்கிட் தெங்கா (Kampung Bukit Tengah) எனும் கிராமத்தின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது.

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம் E1  (North–South Expressway Northern Route) (E1) இந்த நகரத்திற்கு மிக மிக அருகில் உள்ளது.[3]

புக்கிட் தெங்கா சாலை[தொகு]

புக்கிட் மெர்தாஜாம் (Bukit Mertajam) பெரிய நகரத்தின் 14000 எனும் அஞ்சல் குறியீட்டைப் பகிர்ந்து கொள்ளும் எல்லைக்குள் இந்த நகரம் அமைந்துள்ளது. புக்கிட் தெங்காவில் உள்ள பண்டார் பாரு (Bandar Baru) எனும் சிறுநகரம் இப்போது ஐகான் சிட்டி (Icon City) என்று அழைக்கப்படுகிறது.

புக்கிட் தெங்கா சாலை (Bukit Tengah Road), நகரின் மையப்பகுதி வழியாக செல்லும் முக்கிய கூட்டரசு சாலையாக அமைகிறது.


இந்தச் சாலை வடமேற்கில் செபராங் பிறை (Seberang Perai), பட்டர்வொர்த் (Butterworth), பிறை (Perai) நகரங்கள்; கிழக்கில் புக்கிட் மெர்தாஜாம் (Bukit Mertajam) நகரம்; தெற்கில் ஜூரு (Juru) சிம்பாங் அம்பாட் (Simpang Ampat) போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The KTM Bukit Tengah Raiilway Station (Stesen Keretapi Bukit Tengah) is a small stop located along the branch line between Butterworth and Bukit Mertajam in the state of Penang, Malaysia. Currently the only trains that stop here are the KTM Komuter services that started operating in early 2016. All the fast Electric Train Services (ETS) only stop at the nearby stations of Butterworth and BM". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 19 July 2023.
  2. "Bukit Tengah Railway Station (GPS: 5.36435, 100.42174) is a new railway station in Seberang Perai, Penang. It is located off Jalan Baru in Bukit Mertajam. The station is the penultimate on the spur line between the Bukit Mertajam Railway Station, which is a railway interchange, and the Butterworth Railway Station, which is the terminus. The entrance to the station is located near the off ramp of the Bukit Tengah Flyover". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 July 2023.
  3. "Bukit Tengah is an industrial area in Seberang Perai Tengah. It is named after the village of Kampung Bukit Tengah". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 June 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]