உள்ளடக்கத்துக்குச் செல்

ரவாங் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 3°19′08″N 101°34′31″E / 3.31889°N 101.57528°E / 3.31889; 101.57528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KA10 

ரவாங் தொடருந்து நிலையம்
Rawang Railway Station
ரவாங் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்44000, ரவாங், மலேசியா
ஆள்கூறுகள்3°19′08″N 101°34′31″E / 3.31889°N 101.57528°E / 3.31889; 101.57528
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் கிள்ளான் துறைமுக வழித்தடம்
ETS கேடிஎம் இடிஎஸ்
கேடிஎம் கொமுட்டர்
நடைமேடை2 நடை மேடை
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள் கேடிஎம் இண்டர்சிட்டி
கட்டமைப்பு
தரிப்பிடம்KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KA10 
வரலாறு
திறக்கப்பட்டது1892
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்1995
சேவைகள்
முந்தைய நிலையம்   ரவாங்   அடுத்த நிலையம்
பத்தாங்காலி
 
 
குவாங்
தஞ்சோங் மாலிம்
 

  Gold  
 
கெப்போங் சென்ட்ரல்
பத்தாங்காலி
 
  Silver  
 
கெப்போங் சென்ட்ரல்
தஞ்சோங் மாலிம்
 
  Gold  
 
சுங்கை பூலோ
அமைவிடம்
Map
ரவாங் தொடருந்து நிலையம்


ரவாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Rawang Railway Station மலாய்: Stesen Keretapi Rawang); சீனம்: 万挠火车站) என்பது மலேசியா, பேராக், கோம்பாக் மாவட்டம், ரவாங் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். ரவாங் நகரத்தின் பெயரே இந்த தொடருந்து நிலையத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.[1]

மலேசியாவில் மிகப் பழைமையான தொடருந்து நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 1892-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. பின்னர் மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ், 2007 ஏப்ரல் 21-ஆம் தேதி, ராசா; செரண்டா; மற்றும் பத்தாங்காலி நகரங்களில் இருக்கும் கொமுட்டர் நிலையங்களுடன் இதன் சேவைகள் இணைக்கப்பட்டன.[2]

பொது

[தொகு]

2015-ஆம் ஆண்டில் இருந்து, இந்த நிலையத்திற்கு கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் வழியாக, கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் சேவைகள் செய்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டில், ரவாங் - கிள்ளான் துறைமுக வழித்தடம்; ரவாங் - தஞ்சோங் மாலிம் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டது.[3]

ரவாங் தொடருந்து நிலையத்தின் சேவை 2008 சனவரி 5-ஆம் தேதி கோலா குபு பாரு வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் 2009 சூன் 1-ஆம் தேதி இந்த சேவை தஞ்சோங் மாலிம் வரை நீட்டிக்கப்பட்டது.

கிள்ளான் துறைமுக வழித்தடம்

[தொகு]

கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் உள்ள மற்ற பெரும்பாலான நிலையங்களைப் போலவே இந்த நிலையத்திலும் இரண்டு நடைபாதைகள் உள்ளன. அத்துடன் ஒரு தீவும் உள்ளது. (கேடிஎம் கொமுட்டர்; கேடிஎம் இடிஎஸ் ஆகிய இரண்டு தொடருந்துச் சேவைகளும் உள்ளன. பழைய தொடருந்து நிலையம் உடைக்கப்பட்டு விட்டது.

பயணச்சீட்டு வசதிகள்

[தொகு]

இந்த நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகளும் (Ticketing Facilities) உள்ளன. மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாக பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் (Kiosks); கொமுட்டர் பயனர்களுக்குப் பிரத்தியேகமாக ஒரு கால் பாலம் (Foot Bridge) போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.

சேவைகள்

[தொகு]

ரவாங் தொடருந்து நிலையம், ரவாங் நகரத்திற்கும், அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் மற்றும் ரவாங் நகரத்திற்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. ரவாங் நகருக்கான இந்தப் புதிய தொடருந்து நிலையம் 1995-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ்; மற்றும் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் ரவாங் நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.

கோம்பாக் மாவட்டம்

[தொகு]

பேராக், கோம்பாக் மாவட்டத்தில் ரவாங் நகரின் மேற்குப் பகுதியில் இருந்து இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை மலேசியக் கூட்டரசு சாலை 1-இன் வழியாகவும் அணுகலாம். தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை சற்று தொலைவில் உள்ளது. கிள்ளான் துறைமுகம் நிலையத்திற்கான நேரடி சேவைகள் 2017-இல் அறிமுகப்படுத்தப்பட்டன.

ரவாங் நிலைய காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Rawang KTM Komuter station is a railway station in Rawang, Selangor, Malaysia that serves as both the KTM Komuter (of the Rawang – Seremban Route) and KTM Intercity train services". பார்க்கப்பட்ட நாள் 29 July 2023.
  2. "The Serendah KTM Komuter station is a commuter train station stationed roughly 2km northwest from the town of Serendah, Selangor". பார்க்கப்பட்ட நாள் 29 July 2023.
  3. "On April 21, 2007, a shuttle service between Rawang and Rasa was launched. The service, which extends the KTM Komuter network by 22 km, covers three new stations, namely Serendah, Batang Kali and Rasa". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 29 July 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவாங்_தொடருந்து_நிலையம்&oldid=3924192" இலிருந்து மீள்விக்கப்பட்டது