கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம்
கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 42000, கிள்ளான் துறைமுகம், சிலாங்கூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 2°59′57″N 101°23′30″E / 2.99917°N 101.39167°E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
தடங்கள் | கிள்ளான் துறைமுக வழித்தடம் கேடிஎம் கொமுட்டர் | ||||||||||
நடைமேடை | 1 நடை மேடை; 1 தீவு நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KD19 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1890 | ||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Port Klang Commuter Station மலாய்: Stesen Komuter Pelabuhan Klang); சீனம்: 巴生港口) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் துறைமுக நகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் இறுதி நிலையமாக அமைந்துள்ள இந்த நிலையம் 1892-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. நவம்பர் 1995-இல் மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டு மின்மயமாக்கப்பட்டது.[1][2]
இந்த நிலையம் கிள்ளான் துறைமுகத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கிள்ளான் துறைமுகத்தின் பெயர் இந்த கொமுட்டர் நிலையத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் மிகப் பழைமையான தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன், 1890-ஆம் ஆண்டுகளில் ஈயமண் கொண்டு செல்வதற்கும்; கிள்ளான் துறைமுகத்தில் அணையும் கப்பல்களில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் இந்த நிலையம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.[3]
பொது
[தொகு]கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம், கிள்ளான் துறைமுகப் புறநகர் பகுதியில் அதிகரித்து வந்த போக்குவரத்தை நிவர்த்தி செய்வதற்காகக் கட்டப்பட்டது.
1995-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் சேவைக்குப் புதிய கூடுதலான சேவையை வழங்கி வருகிறது. தெற்கு துறைமுகம் கப்பல் முனையம் (South Port, Malaysia), கிள்ளான் துறைமுக குடிவரவு மையம் (Port Klang Immigration Centre) மற்றும் கெத்தாம் தீவு படகு முனையம் (Pulau Ketam Ferry Terminal) ஆகியவை இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.[4]
அடிப்படை வசதிகள்
[தொகு]2015-ஆம் ஆண்டில் இருந்து, கிள்ளான் துறைமுக நிலையத்திற்கு கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் வழியாக, கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் சேவைகள் செய்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டில், ரவாங் - கிள்ளான் துறைமுக வழித்தடம்; ரவாங் - தஞ்சோங் மாலிம் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டது.[5]
கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகளும் (Ticketing Facilities) உள்ளன. மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாக பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் (Kiosks); போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.[6]
சேவைகள்
[தொகு]கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம், கிள்ளான் துறைமுக நகரத்திற்கும், அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் மற்றும் கிள்ளான் துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள புறநகர் வீடுமனைப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. கிள்ளான் துறைமுக நகருக்கான இந்தப் புதிய தொடருந்து நிலையம் 1995-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் கிள்ளான் துறைமு நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Port Klang Komuter Station (GPS: 2.99951, 101.39138) is the western terminus of the KTM Komuter Port Klang Line. It has one side platform and one island platform with three tracks. The preceding station is the Jalan Kastam Komuter Station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 August 2023.
- ↑ "Port Klang KTM station is the last stop on this Klang Valley commuter route and the station is located just across the road from the ferry terminal, making it the best way to travel from KL to Sumatra". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 3 August 2023.
- ↑ "It is the terminus of the KTM Komuter Klang Valley Sector Pelabuhan Klang Line". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 3 August 2023.
- ↑ "Port Klang KTM Komuter Station is the western terminus on the Port Klang Line. The South Port Cruise Ship Terminal, Port Klang Police Station, Poslaju Office and the Port Klang Immigration Centre is located in a walking distance from this Station". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 3 August 2023.
- ↑ "On April 21, 2007, a shuttle service between Rawang and Rasa was launched. The service, which extends the KTM Komuter network by 22 km, covers three new stations, namely Serendah, Batang Kali and Rasa". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 29 July 2023.
- ↑ "KTM Komuter - Kuang Train Station Facilities, Counter Operating Hours". MALAYSIA CENTRAL (ID). 21 December 2010. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Port Klang KTM Komuter Station பரணிடப்பட்டது 2015-09-28 at the வந்தவழி இயந்திரம்
- Port Klang Authority - கிள்ளான் துறைமுக ஆணையம் பரணிடப்பட்டது 2019-01-18 at the வந்தவழி இயந்திரம்
- Northport (Malaysia) Bhd - கிள்ளான் துறைமுக நார்த்போர்ட் நிறுவனம் பரணிடப்பட்டது 2022-06-26 at the வந்தவழி இயந்திரம்
- Westports Malaysia Sdn Bhd - கிள்ளான் துறைமுக வெஸ்ட்போர்ட் நிறுவனம்
- Port Klang Free Zone - கிள்ளான் துறைமுக வரிவிலக்கு மண்டலம்