கேடிஎம் இடிஎஸ்
மலாயா மின்சார தொடருந்து சேவை KTM ETS KTM Electric Train Service | |
---|---|
கம்பார் நிலையத்தில் KTM Class 93 அதிவிரைவு தொடருந்து | |
பொது தகவல் | |
உரிமையாளர் | மலாயா தொடருந்து நிறுவனம் (KTMB) |
முக்கிய இடங்கள் | பாடாங் பெசார் - பட்டர்வொர்த் - ஈப்போ - கோலாலம்பூர் - கிம்மாஸ் - (ஜொகூர் பாரு 2025-இன் மத்தியில்) |
பயண வகை | இண்டர்சிட்டி அதிவிரைவு தொடருந்து |
தடங்களின் எண்ணிக்கை | 2 |
நிறுத்தங்கள் | 36 (15 சனவரி 2022)[1] |
தினசரி பயணிகள் | 11,361 (2018) |
ஆண்டு பயணிகள் | 4.147 மில்லியன் (2019)[1] ( 16.3%) |
இணையதளம் | www |
செயற்பாடு | |
தொடக்கம் | 12 ஆகத்து 2010 |
நடத்துநர்(கள்) | KTM இன்டர்சிட்டி பிரிவு |
பயன்பாட்டு வண்டிகள் |
|
தொழிநுட்பத் தரவுகள் | |
திட்ட நீளம் | தற்போது: 755 km (469 mi) (பாடாங் பெசார்-கிம்மாஸ்) கட்டுமானத்தில் உள்ளது: 197 km (122 mi) (கிம்மாஸ்-ஜேபி சென்ட்ரல்) |
தட அளவி | 1,000 mm (3ft 3.38in) |
மின்வசதி | 25 kV 50 Hz AC |
சராசரி வேகம் | 140 km/h (87 mph) |
அதியுயர் வேகம் | 160 km/h (99 mph) |
மலாயா மின்சார தொடருந்து சேவை அல்லது கேடிஎம் இடிஎஸ் அல்லது இடிஎஸ், (மலாய்: Perkhidmatan Tren Elektrik KTM ஆங்கிலம்: KTM Electric Train Service); என்பது மலேசியத் தீபகற்பத்தில் நகரங்களுக்கு இடையிலான மின்சாரத் தொடருந்து சேவைகளை வழங்கும் மலேசியப் போக்குவரத்து அமைப்பு ஆகும். மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) எனும் நிறுவனத்தினால் இந்தச் சேவை நடத்தப்படுகிறது.[2]
இந்த நிறுவனம் பன்முக மின்சாரத் தொடருந்துகளை (Electric Multiple-Unit) (EMU) பயன்படுத்துகிறது. மலாயா தொடருந்து நிறுவனத்தால் இயக்கப்படும் இரண்டாவது மின்சார தொடருந்து சேவையாகும். இதற்கு முன்னர் மலாயா பயணிகள் தொடருந்து (KTM Komuter) சேவை; மற்றும் மலாயா பன்னகர தொடருந்து (KTM Intercity) சேவை; ஆகிய இரு சேவைகள் பயன்பாட்டில் இருந்தன.
பொது
[தொகு]மலாயா மின்சார தொடருந்து சேவை, மலேசியாவின் வேகமான தொடருந்து சேவையாகும். தீபகற்ப மலேசியாவில் கிம்மாஸ் மற்றும் பாடாங் பெசார் இடையே மின்மயமாக்கப்பட்ட மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தின் இரட்டைப் பாதையில் இது செயல்படுகிறது. இதற்கு முன்பு மலாயா பன்னகர தொடருந்து சேவை வழங்கியது.
இந்தச் சேவை தற்போது மலாயா பன்னகர தொடருந்து பிரிவால் இயக்கப் படுகிறது. இது முன்னர் இடிஎஸ் நிறுவனத்தால் (ETS Sendirian Berhad) இயக்கப்பட்டது. அப்போது மலாயா தொடருந்து நிறுவனம், அதன் முழு உரிமையாளராக இருந்தது.
தொடருந்து சேவைகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "PERKHIDMATAN ETS" (PDF) (in ஆங்கிலம்). KTMB. பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.
- ↑ "KTM ETS currently operates along the electrified and double-tracked stretch of the West Coast Line between Gemas and Padang Besar on the Malaysia-Thai border. The ETS train schedule in Malaysia can be categorized into the Gemas – Padang Besar and Padang Besar – Gemas routes". www.ktmb.com.my. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.