தாபோங் தொடருந்து நிலையம்
கேடிஎம் இண்டர்சிட்டி | ||||||||||||||||||||||||||
தாபோங் தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | தாபோங், கோலா கிராய் மாவட்டம், கிளாந்தான், மலேசியா | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5°22′37.6″N 102°00′35.8″E / 5.377111°N 102.009944°E | |||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | |||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைப்பாதை 1 தீவு மேடை | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | |||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2008 | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
தாபோங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Dabong Railway Station மலாய்: Stesen Keretapi Dabong) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், கோலா கிராய் மாவட்டம், தாபோங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரான கோத்தா பாரு நகரில் இருந்து சுமார் 155 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
இந்த நிலையம் தும்பாட் மற்றும் தாபோங் நகரங்களுக்கு இடையே செல்லும் கிழக்கு நகரிடை சேவையின் முனையமாகும். தாபோங் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. தாபோங் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[2]
பொது
[தொகு]கிளாந்தான் மாநிலத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள முக்கிய நகரங்களுடன் கோலா கிராய் பகுதிகளை இணைக்க 1920-களில் தாபோங் தொடருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. தாபோங் தொடருந்து நிலையத்தின் தொடருந்து பாதை கோலா கிராய் நகரத்தின் வழியாக தாபோங் நகரத்தையும் கடந்து செல்கிறது.தாபோங் நகரத்தின் மையத்தில் தாபோங் தொடருந்து நிலையம் உள்ளது.[3][2]
அந்தக் காலக்கட்டத்தில் தாபோங் நகரின் தொடருந்து பாதையின் இரு மருங்கிலும் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. சாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் உள்ளூர்க் கிராமங்களும் தோன்றின. 20-ஆம் நூற்றாண்டில் சாலைப் போக்குவரத்து இணைப்புகள் மேம்பட்டன. அதனால் தாபோங் நகரத்திற்கு மக்கள் அதிகமாகக் குடிபெயர்ந்தனர். வேளாண்மைக்கு தாபோங் நகரத்தில் கிடைத்த நிலங்களைப் பொதுமக்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். [4]
மீன் குகை
[தொகு]தாபோங் நகருக்கு அருகில் செல்லும் கலாஸ் ஆற்றுப் பகுதியில், புகழ்பெற்ற ’குவா ஈக்கான்’ எனும் மீன் குகை (Fish Cave) அமைந்துள்ளது. இந்த நகர்ப் பகுதி வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. தென்மேற்கில் 1422 மீட்டர் உயரத்தில் செத்தோங் மலை (Gunung Setong) உள்ளது. தாபோங் ஒரு மலைப்பாங்கான நகர்ப் பகுதி ஆகும்.[2]
20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, அதன் முழுப் பகுதியும் வெப்பமண்டல மழைக்காடாக இருந்தது. செத்தோங் மலையில் இருந்து லெபிர் ஆறு கடந்து செல்கிறது.[5]
நிலைய வசதிகள்
[தொகு]- பக்க மேடை
- காத்திருப்புப் பகுதி
- பொது கழிப்பறைகள்
- வாகன நிறுத்துமிடம்
- கடவுச்சீட்டு விற்பனை இயந்திரம்
- வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
- பானங்கள் விற்பனை இயந்திரம்
தொடருந்து சேவைகள்
[தொகு]- ராக்யாட் தீமோரான் விரைவு தொடருந்து - 26/27 தும்பாட் - ஜொகூர் பாரு சென்ட்ரல் - (Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral)
- தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து - 51/52/57/60 தும்பாட் - குவா மூசாங் - (Shuttle Timur 51/52/57/60 Tumpat–Gua Musang)
- தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து - 55/56 தும்பாட் - தாபோங் - (Shuttle Timur 55/56 Tumpat–Dabong)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dabong Railway Station". Transport Malaysia. 3 February 2011. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
- ↑ 2.0 2.1 2.2 "The station itself was named after the town serving locals and travellers train services primarily managed by KTM Berhad". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
- ↑ Shukor Rahman. "Kuala Krai, a town that owes its origin, growth to the railway". scanned local newspaper cutting, probably dating from the early 1970s. பார்க்கப்பட்ட நாள் 5 May 2007.
- ↑ "Info Kuala Krai". Majlis Daerah Kuala Krai. Archived from the original on 27 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "This KTM train ride in Dabong, Kelantan is a surprise hit among locals". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.