பாடாங் தெங்கு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 4°14′1.39″N 101°59′19.79″E / 4.2337194°N 101.9888306°E / 4.2337194; 101.9888306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடாங் தெங்கு தொடருந்து நிலையம்
Padang Tengku Railway Station
  கேடிஎம்  இண்டர்சிட்டி  
பாடாங் தெங்கு தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பாடாங் தெங்கு, லிப்பிஸ் மாவட்டம், பகாங்,  மலேசியா
ஆள்கூறுகள்4°14′1.39″N 101°59′19.79″E / 4.2337194°N 101.9888306°E / 4.2337194; 101.9888306
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
நடைமேடை1 பக்க நடைப்பாதை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
நடைமேடை அளவுகள்2
தரிப்பிடம்Parking இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1914
மின்சாரமயம்இல்லை
சேவைகள்
முந்தைய நிலையம்   பாடாங் தெங்கு தொடருந்து நிலையம்   அடுத்த நிலையம்
Blank
   
Blank
புக்கிட் பெத்தோங்
<<<
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 

கோலா லிப்பிஸ்
புக்கிட் பெத்தோங்
<<<
குவா மூசாங்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 

கோலா லிப்பிஸ்
அமைவிடம்
Map
பாடாங் தெங்கு தொடருந்து நிலையம்

பாடாங் தெங்கு தொடருந்து நிலையம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Padang Tengku Railway Station மலாய்: Stesen Keretapi Padang Tengku) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், லிப்பிஸ் மாவட்டம், பாடாங் தெங்கு நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 252 கி.மீ.;கோலாலம்பூரில் இருந்து 188 கி.மீ.; தொலைவில் உள்ளது.[1]

பாடாங் தெங்கு தொடருந்து நிலையம், பிரித்தானியர்களின் காலனித்துவக் காலத்தில் செல்போர்ன் தோட்ட நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்ட தொடருந்து நிலையமாக இருந்தது. பாடாங் தெங்கு என்ற பெயர், தெங்கு அப்துல் சமா (Tengku Abdul Samah) என்ற அரசர் ஒருவரின் பெயரில் இருந்து உருவானது.[2]

அழகிய காட்சிகளுடன் கூடிய ஒரு பரந்த புல்வெளியில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது இயற்கையின் அழகில் மயங்கி, அந்த இடத்திற்கு அவரின் பெயரையே சூட்டினார். பல நூற்றாண்டுகளான பின்னரும் அவரின் பெயர் அந்த இடத்தில் நிலைத்து நிற்கிறது.[2]

பொது[தொகு]

இந்த நிலையம் பாடாங் தெங்கு மற்றும் லிப்பிஸ் மாவட்ட நகரங்களுக்கு இடையிலான கிழக்கு நகரிடை சேவையில் ஒரு முனையமாக விளங்குகிறது. பாடாங் தெங்கு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. பாடாங் தெங்கு நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

பொது[தொகு]

கோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்[தொகு]

பாடாங் தெங்கு தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பாடாங் தெங்கு நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. 1920 முதல் 1960 வரையிலான காலப்பகுதியில் பல கிராமவாசிகளுக்கு தொடருந்துகள் முதன்மையான போக்குவரத்து முறையாக இருந்ததால், பாடாங் தெங்குவில் உள்ள தொடருந்து நிலையம் மலேசியாவின் சுதந்திரத்திற்கு முன்பே இருந்தே இயங்கி வருகிறது.[2]

தூரப் பயணங்களுக்கு, தனியார் பேருந்துச் சேவைகளைவிட பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் கோலா லிப்பிஸ் - குவா மூசாங் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது.

ஜொகூர் பாரு சென்ட்ரல் சேவை[தொகு]

ஜொகூர் பாரு மற்றும் தும்பாட் இடையிலான தொடருந்துச் சேவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செயல்படுகிறது. அத்துடன் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள தொடருந்துகள், ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள பல தொடருந்து நிலையங்களில் நின்று செல்கிறது.[3]

நிலைய வசதிகள்[தொகு]

  • தீவு / பக்க மேடைகள்
  • காத்திருப்புப் பகுதி
  • பொது கழிப்பறைகள்
  • வாகன நிறுத்துமிடம்
  • கடவுச்சீட்டு விற்பனை இயந்திரம்
  • வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
  • பானங்கள் விற்பனை இயந்திரங்கள்[2]

தொடருந்து சேவைகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padang Tengku Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  2. 2.0 2.1 2.2 2.3 "The name 'Padang Tengku' originated from an old story about a royal blood named Tengku Abdul Samah who was resting on a vast field with beautiful sceneries. Enticed by its beauty, he named the field after himself whereby the area evolved into a town after many centuries". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  3. "Gua Musang station serves as a terminus for Kuala Lipis – Gua Musang route and operates as a first departing station for the route from Gua Musang to Tumpat. The railway route between JB Sentral and Tumpat is served only once per day, stopping at numerous train stations in Johor, Negeri Sembilan, Pahang and Kelantan". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.

வெளி இணைப்புகள்[தொகு]