உள்ளடக்கத்துக்குச் செல்

வாக்காப் பாரு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாக்காப் பாரு தொடருந்து நிலையம்
Wakaf Bharu Railway Station
  கேடிஎம்  இண்டர்சிட்டி  
வாக்காப் பாரு தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வாக்காப் பாரு, தும்பாட் மாவட்டம், கிளாந்தான், மலேசியா
ஆள்கூறுகள்6°07′06″N 102°12′03″E / 6.118422°N 102.200918°E / 6.118422; 102.200918
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
நடைமேடை1 பக்க மேடை
1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
மறுநிர்மாணம்2018
சேவைகள்
முந்தைய நிலையம்   வாக்காப் பாரு தொடருந்து நிலையம்   அடுத்த நிலையம்
Blank
   
Blank
தும்பாட்
(தொடக்கம்)
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
பூனுட் சூசூ
>>>
ஜொகூர் பாரு
தும்பாட்
(தொடக்கம்)
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
பூனுட் சூசூ
>>>
கோலா லிப்பிஸ்
கம்போங் கோக்
<<<
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
பூனுட் சூசூ
>>>
குவா மூசாங்
கம்போங் கோக்
<<<
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
பாசிர் மாஸ்
>>>
தாபோங்
அமைவிடம்
Map
வாக்காப் பாரு தொடருந்து நிலையம்


வாக்காப் பாரு தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Wakaf Bharu Railway Station மலாய்: Stesen Keretapi Wakaf Bharu) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் தும்பாட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் வாக்காப் பாரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]

கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் மிக அருகாமையில் உள்ளது. அத்துடன் மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (KTM East Coast Railway Line) வடக்கு இறுதி முனையில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும்.

பொது

[தொகு]

இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவையை வழங்குகிறது. வாக்காப் பாரு நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், வாக்காப் பாரு நகரத்தின் பெயரில் இந்த நிலையம் அழைக்கப்படுகிறது. இந்த நிலையம் இப்போது பெரும்பாலும் மலாயர்களின் பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

வாக்காப் பாரு தொடருந்து நிலையம் ஒரு சிறிய நிலையமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் இருந்தும் 4 தொடருந்துகளுக்குச் சேவை செய்கிறது. மலேசியா ஒரு பிரித்தானிய காலனியாக இருந்தபோது 1948-ஆம் ஆண்டில் இந்தத் தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.

ஜொகூர் பாருவில் இருந்து ஒவ்வொரு நாளும் பயணிக்கும் ஒற்றைத் தொடருந்து சேவையின் வருகை, இந்த நிலையத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.[3]

தொடருந்து சேவைகள்

[தொகு]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Wakaf Bharu KTM Railway Station is a KTM train station situated at and named after the town of Wakaf Bharu, Kelantan". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 9 April 2024.
  2. "Wakaf Bharu railway station is a railway station located in Wakaf Bharu, Kelantan, Malaysia. This station serves KTM Intercity". Transport Malaysia. 3 February 2011. பார்க்கப்பட்ட நாள் 9 April 2024.
  3. "The station is now largely used by Malay holiday makers and the arrival of the single daily train service travelling all the way to Johor Bharu is the main event at the station each day". 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 9 April 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]