தானா மேரா கிளாந்தான் தொடருந்து நிலையம்
கேடிஎம் இண்டர்சிட்டி | |||||||||||||||||||||||||||||||
தானா மேரா தொடருந்து நிலையத்தின் பழைய வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | தானா மேரா மாவட்டம், கிளாந்தான், மலேசியா | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5°48′23″N 102°08′48″E / 5.80639°N 102.14667°E | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | ||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 வழித்தடங்கள் | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | ||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2008 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
தானா மேரா தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tanah Merah Railway Station மலாய்: Stesen Keretapi Tanah Merah) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், தானா மேரா மாவட்டம், தானா மேரா நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். தானா மேரா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களையும் இந்த நிலையம் இணைக்கிறது. மலாயா தொடருந்து நிறுவனத்தின் கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் உள்ள இரண்டு தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.
பொது
[தொகு]தானா மேரா நகரத்திற்குள் அமைந்துள்ள ஒரே தொடருந்து நிலையம் என்பதால், கிளாந்தானில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தினால் இந்த நிலையமும் பாதிப்பு அடைவது உண்டு. இந்த நிலையத்தில் இன்டர்சிட்டி தொடருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன.[2]
தானா மேரா தொடருந்து நிலையத்தின் வடக்கு முனையில் உள்ள சாலையில் ஒரு தொடருந்துக் கடவை (Railway Crossing) உள்ளது. தொடருந்துகள் வரும்போது அந்தத் தொடருந்துக் கடவை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் இந்தச் சாலை, கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை; மற்றும் பினாங்கு நகருக்குச் செல்லும் சாலை; ஆகிய சாலைகளை இணைக்கும் உள்ளூர் சாலையாகும்.[3]
தொடருந்து சேவைகள்
[தொகு]- ராக்யாட் தீமோரான் விரைவு தொடருந்து - 26/27 தும்பாட் - ஜொகூர் பாரு சென்ட்ரல் - (Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral)
- தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து - 51/52/57/60 தும்பாட் - குவா மூசாங் - (Shuttle Timur 51/52/57/60 Tumpat–Gua Musang)
- தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து - 55/56 தும்பாட் - தாபோங் - (Shuttle Timur 55/56 Tumpat–Dabong)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tanah Merah Railway Station is the main transportation service for the locals to get around nearby cities and towns conveniently. This train station is one of the two minor train stations of KTM East Coast Line". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 13 April 2024.
- ↑ "The Station is often prone to floods in Kelantan because it is the only KTMB railway station located inside a town. Only KTM Intercity trains stop at this station". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 13 April 2024.
- ↑ "There is a railway crossing at the northern end of the station, the crossing always gets busy when there is a train arriving". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 13 April 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Tanah Merah Railway Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Keretapi Tanah Melayu Official Website
- Keretapi.com - Railway Fan website பரணிடப்பட்டது 2009-03-23 at the வந்தவழி இயந்திரம்