உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Expressway 8
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை
East Coast Expressway
Lebuhraya Pantai Timur
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு 1. அனே பெர்காட்
ANIH Berhad (காராக் – ஜாபுர்)
2. பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனம்
PLUS Expressways (ஜாபுர் – கோலா நெருஸ்)
நீளம்:433 km (269 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
2001 – present
வரலாறு:1. காராக் ஜாபுர் சாலைப் பகுதி 2004-இல் முடிவுற்றது
2. ஜாபுர் கோலா நெருஸ் சாலைப்பகுதி 2015-இல் முடிவுற்றது.
முக்கிய சந்திப்புகள்
தென்மேற்கு முடிவு:E8 காராக் நெடுஞ்சாலை = காராக், பகாங்
 2 மலேசியக் கூட்டரசு சாலை 2
236 ஜாலான் லாஞ்சாங்
98 மலேசியக் கூட்டரசு சாலை 98
83 மலேசியக் கூட்டரசு சாலை 83
222 MEC நெடுஞ்சாலை
231 ஜாலான் சுங்கை லெம்பிங்
101 கெபேங் பக்கவழிப் பாதை
14 ஜெரங்காவ் ஜாபுர் நெடுஞ்சாலை
237 மலேசியக் கூட்டரசு சாலை 237
124 மலேசியக் கூட்டரசு சாலை 124
122 கெதெங்கா நெடுஞ்சாலை
132 புக்கிட் பீசி நெடுஞ்சாலை
106 மலேசியக் கூட்டரசு சாலை 106
3 AH18
வடகிழக்கு முடிவு:3 மலேசியக் கூட்டரசு சாலை 3 = கோலா நெருஸ், திராங்கானு
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கோலாலம்பூர், கோம்பாக், கெந்திங் மலை, பெந்தோங், காராக், தெமர்லோ, மாரான் , குவாந்தான், கெமாமான், புக்கிட் பீசி, மாராங், அஜில், கோலா திராங்கானு
நெடுஞ்சாலை அமைப்பு

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (ஆங்கிலம்: East Coast Expressway; மலாய்: Lebuhraya Pantai Timur (LPT) / ) என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை ஆகும். இது காராக் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கோலா திராங்கானு வரை செல்கிறது. இந்தச் சாலையின் நீளம் 433 கி.மீ.

தீபகற்ப மலேசியா, இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவு மேற்கு கடற்கரை தீபகற்ப மலேசியா. மற்றொரு பிரிவு கிழக்கு கடற்கரை தீபகற்ப மலேசியா.

இந்த கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை; தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் இருந்து தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரைக்கு ஒரு பிரதான வழியை வழங்குகிறது. மலாயா தீபகற்பத்தின் முதுகெலும்பாகச் செயல்படும் இந்த விரைவுச்சாலை, தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள பெரும்பாலான நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையாகவும் விளங்குகின்றது.

விளக்கம்

[தொகு]

விரைவுச்சாலை (ஆங்கிலம்: Expressway; மலாய்: Lebuhraya).

மலேசிய விரைவுச்சாலை (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia).

நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Highway; மலாய்: Laluan).

மலேசியக் கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia).

பொது

[தொகு]

இந்த நெடுஞ்சாலை மலாயா தீபகற்பத்தில் உள்ள சிலாங்கூர், பகாங் மற்றும் திராங்கானு எனும் மூன்று மாநிலங்களின் வழியாகச் செல்கிறது. பழைய கோலாலம்பூர் - குவாந்தான் சாலை FT2 (2) (Kuala Lumpur-Kuantan Road FT2) சாலைக்கும்; மற்றும் 14 ஜெராங்காவ் - ஜபோர் நெடுஞ்சாலைக்கும் (Jerangau-Jabor Highway) விரைவான மாற்றுச் சாலையாகவும் அமைகிறது.

இதனால் கிழக்குக் கடற்கரை நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாகக் குறைகிறது. இந்த நெடுஞ்சாலை, எனும் ஆசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் ஒரு பகுதியாகவும் உள்ளது. நெடுஞ்சாலையில் வேக வரம்பு மணிக்கு 110 கி.மீ. (68 மைல்) ஆகும்.

பாதை பின்னணி

[தொகு]

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையானது காராக் நெடுஞ்சாலையில் கிழக்கு முனையின் பகாங் காராக் நகரில் தொடங்கி, லாஞ்சாங், மெந்தகாப் வழியாகச் செல்கிறது.

தெமர்லோ, செனோர், மாரான், ஸ்ரீ ஜெயா, கம்பாங், குவாந்தான், ஜபூர், செனி, சுக்காய், கிஜால், கெர்த்தே, பாக்கா, டுங்குன், புக்கிட் பீசி, அஜில் மற்றும் டெலிமோங் ஆகிய நகரங்களைக் கடந்து திராங்கானு மாநிலத்தின் கோலா நெருஸ் நகருக்கு அருகே உள்ள கம்போங் கெமுருவில் முடிவு அடைகிறது.

தீபகற்ப மலேசியாவில், வடக்கு-தெற்கு விரைவுசாலைக்குப் பிறகு, இரண்டாவது மிக நீளமான விரைவுச் சாலை இதுவாகும்.

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]