மலேசிய தொடருந்து போக்குவரத்து
மலேசிய தொடருந்து போக்குவரத்து Rail Transport in Malaysia Pengangkutan Rel Malaysia | |
---|---|
கண்ணோட்டம் | |
நிகழ்வு இயலிடம் | மலேசியா |
முதல் சேவை | சூன் 1, 1885 |
நடத்துனர்(கள்) | |
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | 71,640,357 (2021) |
வழி | |
ஓடும் தூரம் | 2,783 km (1,729 mi) |
தொழில்நுட்பத் தரவுகள் | |
பாதை | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) |
மலேசிய தொடருந்து போக்குவரத்து (ஆங்கிலம்: Rail Transport in Malaysia மலாய்: Pengangkutan Rel Malaysia); சீனம்: 马来西亚铁路运输) என்பது மலேசியாவின் தொடருந்துகள் போக்குவரத்து சேவையைக் குறிப்பிடுவதாகும். இந்த தொடருந்து போக்குவரத்து 1885-ஆம் ஆண்டு சூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
கனரக தொடருந்துகள் பெரும்பாலும் நகரங்களுக்கு இடையிலான சேவைகள்; சரக்கு போக்குவரத்து; மற்றும் சில நகர்ப்புறப் பொது போக்குவரத்துகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தலைநகர் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நகர்ப்புற பொதுப் போக்குவரத்திற்காக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்கள் (Rapid Transit Rails) பயன்படுத்தப்படுகின்றன.
பொது
[தொகு]கோலாலம்பூர் மாநகரை இணைப்பதற்கு கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இரண்டு வானூர்தி நிலைய தொடருந்து இணைப்பு அமைப்புகள் உள்ளன.
நாட்டிலேயே மிக நீளமான ஒற்றைத் தண்டவாள (Monorail) பாதை; கோலாலம்பூரில் பொதுப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரே இழுவை ஊர்தி (Funicular) தொடருந்து பாதை பினாங்கில் பயன்படுத்தப்படுகிறது.
தாய்லாந்து தொடருந்து சேவை
[தொகு]மலேசிய தொடருந்து போக்குவரத்து அமைப்பு தீபகற்ப மலேசியாவின் 11 மாநிலங்களில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கியது. கிழக்கு மலேசியாவில், சபா மாநிலத்தில் மட்டுமே தொடருந்து போக்குவரத்து உள்ளது.
தீபகற்ப மலேசியாவின் வடக்கில் தாய்லாந்து தொடருந்து வழித்தடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பர்மா தொடருந்து மீண்டும் கட்டப்பட்டால், மியான்மர், இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையிலான தொடருந்துச் சேவைகள் தொடங்கப் படலாம்.
மேற்கோள்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- தொடருந்து
- விரைவுத் தொடருந்து
- மலாயா தொடருந்து நிறுவனம்
- கேடிஎம் இண்டர்சிட்டி
- மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்