கெப்போங் சென்ட்ரல்

ஆள்கூறுகள்: 3°12′31″N 101°37′42″E / 3.20861°N 101.62833°E / 3.20861; 101.62833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KA07   PY08 

கெப்போங் சென்ட்ரல்
Kepong Sentral Station
கெப்போங் சென்ட்ரல் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்52000, கெப்போங், சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்3°12′31″N 101°37′42″E / 3.20861°N 101.62833°E / 3.20861; 101.62833
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் கிள்ளான் துறைமுக வழித்தடம்
கேடிஎம் கொமுட்டர்
ETS கேடிஎம் இடிஎஸ்
நடைமேடை2 நடை மேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள் PY08  செரி டாமன்சாரா தீமோர் புத்ராஜெயா வழித்தடம்
கட்டமைப்பு
தரிப்பிடம்KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KA07   PY08 
(தற்போது)
(சூலை 2021-க்கு பின்னர்)
வரலாறு
திறக்கப்பட்டது1 July 2006
சேவைகள்
முந்தைய நிலையம்   கெப்போங் சென்ட்ரல்   அடுத்த நிலையம்
சுங்கை பூலோ
 
 
கெப்போங் >>> கிள்ளான் துறைமுகம்
சுங்கை பூலோ
 
  Gold  
 
கோலாலம்பூர்
சுங்கை பூலோ
 
  Silver  
 
கோலாலம்பூர்
அமைவிடம்
Map
கெப்போங் சென்ட்ரல் நிலையம்

கெப்போங் சென்ட்ரல் அல்லது கெப்போங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Kepong Sentral அல்லது Kepong Commuter Station மலாய்: Stesen Komuter Kepong); சீனம்: 甲洞中央站) என்பது மலேசியா, கோலாலம்பூர், பெட்டாலிங் மாவட்டம், கெப்போங் நகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். கெப்போங் நகரத்தின் பெயர் இந்த கொமுட்டர் நிலையத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. கெப்போங் நகரில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

2006-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி திறக்கப்பட்ட கேடிஎம் கொமுட்டர் சேவைக்கு இந்த நிலையம் புதிய கூடுதல் நிலையமாகும். கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (Kuala Lumpur Middle Ring Road 2) (MRR2) இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

2008-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, இந்த நிலையம் கேஎல் சென்ட்ரல்-ஈப்போ-கேஎல் சென்ட்ரல் கேடிஎம் இண்டர்சிட்டி வழித்தடத்தில் ஒரு நிலையமாக மாறியது. இருப்பினும், இந்தச் சேவை ஆகத்து 2010-இல் நிறுத்தப்பட்டு, கேடிஎம் இடிஎஸ் சேவைகளுக்கு முழுமையாக மாற்றப்பட்டது.[1]

சுங்கை பூலோ - புத்ராஜெயா வழித்தடம்[தொகு]

எம்ஆர்டி. (Mass Rapid Transit) சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடத்தில் (MRT Sungai Buloh Serdang Putrajaya Line), கெப்போங் சென்ட்ரல் கொமுட்டர் நிலையம் அமைந்துள்ளது.

புத்ராஜெயா வழித்தடம் (MRT Putrajaya Line) அல்லது எம்.ஆர்.டி., (Mass Rapid Transit 2) முன்பு சுங்கை சுங்கை பூலோ - செர்டாங் - புத்ராஜெயா - இரயில் சேவை என அழைக்கப்பட்டது (Sungai Buloh–Serdang–Putrajaya Line (SSP Line). இது பன்னிரண்டாவது இரயில் போக்குவரத்துப் பாதையாகும்.

கோலாலம்பூரில் இது இரண்டாவது விரைவுப் போக்குவரத்து (Mass Rapid Transit) பாதை. கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில், நான்காவது முழுத் தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத சேவை. இந்தச் சேவை கோலாலம்பூரில் உள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு (Kuala Lumpur known as the Klang Valley Integrated Transit System) எனவும் அழைக்கப் படுகிறது.[2][3]

கெப்போங் நகரம்[தொகு]

கெப்போங், (Kepong) நகரம் கோலாலம்பூர் கூட்டாட்சி நிலப்பகுதியில் அமைந்து உள்ள ஒரு பெருநகரம். ’கெப்போங்’ என்பது ஒரு மலாய்ச் சொல். "சூழ்" அல்லது "சுற்று" என்று பொருள். இந்த நகரம் ஒரு மலைத்தொடரால் சூழப்பட்டு உள்ளது. அதனால் அந்தப் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம்.

கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 12 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் இந்த நகரம் அமைந்து உள்ளது. இந்த நகரத்திற்கு அருகாமையில் டாமன்சாரா (சிலாங்கூர்), கெப்போங், குவாங் மற்றும் கோலா சிலாங்கூர் நகரங்கள் உள்ளன.

பொது[தொகு]

2015-ஆம் ஆண்டில் இருந்து, கெப்போங் நிலையத்திற்கு கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் வழியாக, கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் சேவைகள் செய்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டில், ரவாங் - கிள்ளான் துறைமுக வழித்தடம்; ரவாங் - தஞ்சோங் மாலிம் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டது.[4]

கிள்ளான் துறைமுக வழித்தடம்[தொகு]

இந்த நிலையம் காலனித்துவ காலத்தில் பத்து ஆராங் மற்றும் பெஸ்தாரி ஜெயா வரையிலான 23 கி.மீ நீளமுள்ள கிளைப் பாதையின் தொடக்கமாகச் செயல்பட்டது. 1971-ஆம் ஆண்டில், அந்தப் பாதை மூடப்பட்டது.[5]

கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் உள்ள மற்ற பெரும்பாலான நிலையங்களைப் போலவே கெப்போங் நிலையத்திலும் இரண்டு நடைபாதைகள் உள்ளன. பழைய தொடருந்து நிலையம் உடைக்கப்பட்டு விட்டது.

அடிப்படை வசதிகள்[தொகு]

இந்த நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகளும் (Ticketing Facilities) உள்ளன. மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாக பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் (Kiosks); போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.[6]

சேவைகள்[தொகு]

கெப்போங் கொமுட்டர் நிலையம், கெப்போங் நகரத்திற்கும், அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் மற்றும் கெப்போங் நகரத்திற்கு அருகிலுள்ள புறநகர் வீடுமனைப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. கெப்போங் நகருக்கான இந்தப் புதிய தொடருந்து நிலையம் 1995-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் குவாங் நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.

கெப்போங் நிலைய காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Damansara Timur". MRT Corp (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  2. "Twitter @MRTMalaysia". Twitter.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
  3. "Putrajaya Line MRT Phase 1 Expected To Open In November 2021". 2021-07-08.
  4. "On April 21, 2007, a shuttle service between Rawang and Rasa was launched. The service, which extends the KTM Komuter network by 22 km, covers three new stations, namely Serendah, Batang Kali and Rasa". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 29 July 2023.
  5. "Its main importance in older times was the starting of the railway branch to Batu Arang from the mainline of Malayan Railways". பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
  6. "KTM Komuter - Kuang Train Station Facilities, Counter Operating Hours". MALAYSIA CENTRAL (ID). 21 December 2010. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்போங்_சென்ட்ரல்&oldid=3922127" இலிருந்து மீள்விக்கப்பட்டது