உள்ளடக்கத்துக்குச் செல்

செர்டாங் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 3°01′24″N 101°42′58″E / 3.02333°N 101.71611°E / 3.02333; 101.71611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்டாங்
 KB05 
Serdang Railway Station
செர்டாங் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்செரி கெம்பாங்கான், சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்3°01′24″N 101°42′58″E / 3.02333°N 101.71611°E / 3.02333; 101.71611
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர் மலாயா தொடருந்து நிறுவனம் (KTM)
Rapid_KL_Logo ரேபிட் ரெயில் எம்ஆர்டி
தடங்கள் கேடிஎம் கொமுட்டர்
மலாயா மேற்கு கடற்கரை
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KB05 
வரலாறு
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்1995
முந்தைய பெயர்கள்செர்டாங் நிலையம்
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் கொமுட்டர்   அடுத்த நிலையம்
   
தாசேக் செலாத்தான்
பத்துமலை
 
புலாவ் செபாங் வழித்தடம்
 
காஜாங்
புலாவ் செபாங்
அமைவிடம்
Map
செர்டாங் தொடருந்து நிலையம்

செர்டாங் தொடருந்து நிலையம் அல்லது செர்டாங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Serdang Railway Station அல்லது Serdang Komuter Station; மலாய்: Stesen Keretapi Serdang அல்லது Stesen Komuter Serdang) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் செரி கெம்பாங்கான் நகர்ப்பகுதியில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தில், கேடிஎம் கொமுட்டர் தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது. [1][2]

இந்த நிலையம் பெசுராயா விரைவுச்சாலை (Besraya Expressway) E9   சுங்கை பீசி விரைவுச்சாலை (Sungai Besi Expressway); ஆகிய விரைவுச்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

பொது

[தொகு]

இந்த நிலையத்திற்கு மேற்கே 2 கிமீ தொலைவில் உள்ள புத்ராஜெயா வழித்தடத்தின் (MRT Putrajaya Line)  PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையமும் இந்த நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையத்திலிருந்து வரும் பேருந்துகள் இந்த செர்டாங் தொடருந்து நிலையத்தில் நிற்பது இல்லை.[3]

சிரம்பான் வழித்தடம்

[தொகு]

சிரம்பான் வழித்தடம் அல்லது சிரம்பான் தொடருந்து வழித்தடம் (Seremban Line) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.

இந்தச் வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. பத்துமலை; புலாவ் செபாங்; தம்பின் ஆகிய மூன்று நகரங்களை இந்தச் சேவை இணைக்கின்றது.

ரவாங் தம்பின் இணைப்பு

[தொகு]

இந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் சிரம்பான் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன.

15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை கோலாலம்பூர் ரவாங் நகரங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

காட்சியகம்

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "The Serdang KTM Komuter Station is a KTM Komuter train halt forms part of a common KTM Komuter railway line in Seremban Line. The Station was completed and opened to the public on 1995. The Serdang KTM Komuter Station located southern east of Serdang and named after town of Serdang, Selangor". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 13 August 2023.
  2. "KTM Serdang Train Schedule (Jadual) Komuter Route to KL Sentral 2023". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 13 August 2023.
  3. "The Serdang KTM station is a KTM Komuter train station located in Serdang. The station serves KTM Komuter's Batu Caves – Tampin / Pulau Sebang Line and also previously KTM Intercity". klia2.info. பார்க்கப்பட்ட நாள் 13 August 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]