செபுத்தே கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அமைவிடம் | செபுத்தே, கோலாலம்பூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°6′48″N 101°40′53″E / 3.11333°N 101.68139°E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) ரேபிட் ரெயில் (MRT) | ||||||||||
தடங்கள் | சிரம்பான் பத்துமலை-புலாவ் செபாங் (கேடிஎம் கொமுட்டர்) | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KB02 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | KB02 1995 | ||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
செபுத்தே கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Seputeh Komuter Station; மலாய்: Stesen Komuter Seputeh) என்பது மலேசியா, கோலாலம்பூர், செபுத்தே பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]
இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தின் மற்றொரு வழித்தடமான புலாவ் செபாங் வழித்தடத்தில் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது.
பொது
[தொகு]இந்த நிலையம் முன்பு 1999-ஆண்டு தொடங்கி, மிட் வேலி மெகாமால் மற்றும் மிட் வேலி சிட்டி எனும் வணிகப் பகுதியுடன் இணைக்கப்பட்ட ஒரே தொடருந்து நிலையமாக இருந்தது.[2]
இருப்பினும் 2004-இல், புதிய மிட் வேலி நிலையம் திறக்கப்பட்டதும், மிட் வேலி வணிக மையத்திற்கு மிட் வேலி நிலையமே நேரடியாகச் சேவை செய்கிறது. செபுத்தே கொமுட்டர் நிலையத்தின் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் கீழ் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் செபுத்தே நகரத்திற்கான முக்கியத் தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.
அடிப்படை வசதிகள்
[தொகு]செபுத்தே நிலையத்தில் உள்ள வசதிகள் மற்ற நிலையங்களைப் போலவே உள்ளன. இந்த நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகள், டிக்கெட் விற்பனை இயந்திரங்கள், தொட்டு செல் வசதிகள் உள்ளன.[3]
மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாகப் பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. மற்ற கொமுட்டர் நிலையங்களைப் போலவே, தினமும் காலை 6.30 முதல் இரவு 8.30 வரையில் இந்த நிலையம் சேவை செய்கிறது.
மேலும் காண்க
[தொகு]- பத்துமலை கொமுட்டர் நிலையம்
- கம்போங் பத்து நிலையம்
- பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம்
- தாமான் வாயூ கொமுட்டர் நிலையம்
- செந்தூல் கொமுட்டர் நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Seputeh KTM Komuter Station - The Seputeh KTM Komuter Station is a KTM Komuter train station named after and located in Seputeh, Kuala Lumpur, along the KTM Komuter's Seremban Line". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ "Seputeh KTM Station: The Seputeh station was formerly the only train station connected to Mid Valley Megamall and the rest of the adjoining Mid Valley City commercial area since the area begun operation from 1999". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ "KTM Komuter - Seputeh Train Station Facilities, Counter Operating Hours". MALAYSIA CENTRAL (ID). 22 December 2010. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.