உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கை காடுட் பயணிகள் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KB16 

சுங்கை காடுட் பயணிகள் தொடருந்து நிலையம்
Sungai Gadut Komuter Station
பொது தகவல்கள்
அமைவிடம்சுங்கை காடுட், நெகிரி செம்பிலான்,
 மலேசியா
ஆள்கூறுகள்2°39′36.56″N 101°59′49.9″E / 2.6601556°N 101.997194°E / 2.6601556; 101.997194
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர்மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் (கேடிஎம் கொமுட்டர்)
 பத்துமலை-புலாவ் செபாங் 
 மலாயா மேற்கு கடற்கரை 
நடைமேடை1 பக்க தீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KB16 
வரலாறு
திறக்கப்பட்டது KB16  14 மே 2011
மின்சாரமயம்2011
சேவைகள்
முந்தைய நிலையம்   சுங்கை காடுட்   அடுத்த நிலையம்
செனவாங் நிலையம்
<<<
பத்துமலை நிலையம்
 

பத்துமலை புலாவ் செபாங்
 
ரெம்பாவ்
>>>
புலாவ் செபாங்
அமைவிடம்
Map
சுங்கை காடுட் தொடருந்து நிலையம்


சுங்கை காடுட் பயணிகள் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Sungai Gadut Komuter Station; மலாய்: Stesen Komuter Sungai Gadut) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், சுங்கை காடுட் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பயணிகள் தொடருந்து நிலையம் ஆகும். சுங்கை காடுட் நகர்ப்பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், சுங்கை காடுட் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.[1]

பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. 2011-ஆம் ஆண்டில், இந்த நிலையத்தில் கேடிஎம் கொமுட்டர் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 14 மே 2011-ஆம் தேதி முதல் கொமுட்டர் தொடருந்து இந்த நிலையத்தில் இருந்து தன் பயணத்தைத் தொடங்கியது.[2]

பொது

[தொகு]

சிரம்பான் மற்றும் கிம்மாஸ் இடையே இரட்டை தடம் மற்றும் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிலையம் கட்டப்பட்டது. மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[3]

தொடக்கத்தில், 2011-ஆம் ஆண்டில் மட்டுமே சிரம்பான் வழித்தடம் இந்த நிலையம் வரையில் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 2012-ஆம் ஆண்டில், ரெம்பாவ் தொடருந்து நிலையம் வரையில் சிரம்பான் வழித்தடம் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் சுங்கை காடுட் தொடருந்து நிலையத்திலேயே பெரும்பாலான தொடருந்துகள் தங்களின் சேவைகளை நிறுத்திக் கொண்டன.

சிற்றிடைப் போக்குவரத்துச் சேவை

[தொகு]

2015-ஆம் ஆண்டில் சிரம்பான் வழித்தடம் சேவை புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது. அந்தச் சிற்றிடைப் போக்குவரத்துச் சேவை அப்போது ஓர் இடைவழிச் சேவையாக இருந்தது. 2011-ஆம் ஆண்டில் கிம்மாஸ் வரை இருந்த சிற்றிடைப் போக்குவரத்துச் சேவை தம்பின் வரை குறைக்கப்பட்டது.[4]

புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் வரையிலான சிற்றிடைப் போக்குவரத்துச் சேவை மொத்தமாகக் கலைக்கப்பட்டது. இப்போதைய பயணிகள் தொடருந்துகள் கோலாலம்பூரில் இருந்து சுங்கை காடுட் மற்றும் தம்பின் வரை செல்கின்றன. இந்த நிலையம் சுங்கை காடுட்கிற்கு மட்டும் அல்லாமல் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமப்பகுதிகளுக்கும் சேவை செய்கிறது.

சுங்கை காடுட்

[தொகு]

சிரம்பான் நகர மையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுங்கை காடுட் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. அனைத்துலக அளவில் சில நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளன. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் செனவாங் தொழிற்சாலைப் பகுதி, மாநிலத்தின் இரண்டாவது மிக முக்கியமான தொழில்துறைப் பகுதியாக விளங்குகிறது.

சுங்கை காடுட் பயணிகள் தொடருந்து நிலையமும்; அதன் நகரப் பகுதிகளும்; மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (North–South Expressway Southern Route); செனவாங் சந்திப்பு (Senawang Junction); கூட்டரசு சாலை 1 (மலேசியா) 1; மற்றும் சுங்கை காடுட் சாலை N5 வழியாக இணைக்கப்பட்டு உள்ளன.

சுங்கை காடுட் நிலையக் காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sungai Gadut Railway Station is a railway station located in Sungai Gadut, Negeri Sembilan, Malaysia". Transport Malaysia. 4 January 2011. பார்க்கப்பட்ட நாள் 6 April 2024.
  2. "Sungai Gadut KTM station is a station in Sungai Gadut, Negeri Sembilan. It serves KTM Komuter line and started its operations on May 14, 2011. It accommodates an island platform and 3 tracks". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 6 April 2024.
  3. "It is currently in construction as part of the double tracking and electrification project between Seremban and Gemas, both the Senawang and Sungai Gadut stations are located along the 98km Seremban-Gemas rail route". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 6 April 2024.
  4. "Sungai Gadut Komuter on the KTM Komuter Seremban Line in Negeri Sembilan. It is located off Jalan Tampin. The station is between the Senawang Komuter Station and the Rembau Railway Station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 April 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]