பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்
பத்துமலை-புலாவ் செபாங் Batu Caves–Pulau Sebang Line | |||
---|---|---|---|
KL சென்ட்ரலில் KTM 92 ரக இரயில் | |||
கண்ணோட்டம் | |||
நிலை | செயலில் உள்ளது | ||
உரிமையாளர் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||
வழித்தட எண் | (நீலம்) | ||
வட்டாரம் | சிலாங்கூர் கோலாலம்பூர் நெகிரி செம்பிலான் மலாக்கா | ||
முனையங்கள் |
| ||
நிலையங்கள் | 26 + 3 நிலையங்கள் | ||
இணையதளம் | www | ||
சேவை | |||
அமைப்பு | கேடிஎம் பயணிகள் KTM Komuter | ||
சேவைகள் | பத்துமலை - தம்பின் - புலாவ் செபாங் | ||
பாதை எண் | 1 | ||
செய்குநர்(கள்) | மலாயா தொடருந்து நிறுவனம் | ||
பணிமனை(கள்) | சிரம்பான் | ||
சுழலிருப்பு | 37 தொடருந்துகள் (six-car trains) | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 14 ஆகத்து 1995 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 135 km (84 mi) | ||
தட அளவி | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) | ||
மின்மயமாக்கல் | வார்ப்புரு:25 kV 50 Hz | ||
இயக்க வேகம் | Up to 120 km/h (75 mph) | ||
|
பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம் அல்லது சிரம்பான் வழித்தடம் (ஆங்கிலம்: Seremban Line அல்லது Batu Caves–Pulau Sebang Line; மலாய்: Laluan Seremban அல்லது Laluan Komuter Seremban) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.
இந்த வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. பத்துமலை; புலாவ் செபாங்; தம்பின் ஆகிய மூன்று நகரங்களை இந்தச் சேவை இணைக்கின்றது.
இந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் சிரம்பான் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன.
15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை கோலாலம்பூர் ரவாங் நகரங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்த வழித்தட அமைப்பு கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புக் கூறுகளில் ஒன்றாகும். அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில் இந்த பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம்; என நீல நிறத்தில் அடையாளமிடப்பட்டு உள்ளது. அந்த முன்னாள் சிரம்பான் வழித்தடத்திற்கு சிரம்பான் தொடருந்து நிலையத்தின் பெயரிடப்பட்டது.
வரலாறு
[தொகு]கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) என்பது 1995-ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்மயமாக்கப்பட்ட பயணிகள் இரயில் சேவையாகும். குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உள்ள பயணிகளுக்குப் பெரிதும் உதவியது.
கோலாலம்பூரில் பணிபுரியும் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மாநகரத்திற்குச் செல்ல முடியும் என்பதால், இது ஒரு பிரபலமான போக்குவரத்து முறையாக இருந்தது. பெட்டிகள் நவீன மற்றும் குளிரூட்டப் பட்டவை.
சிலாங்கூர் அரசாங்க இரயில் பாதை
[தொகு]1886-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட சிலாங்கூர் அரசாங்க இரயில் பாதையின் ஒரு பகுதியாக இந்தப் பாதை தொடங்கியது. நவீன கால சிரம்பான் பாதையானது 1895-இல் திறக்கப்பட்டது.[1]
கோலாலம்பூர் - கிள்ளான் இரயில் பாதையில் இருந்து சுல்தான் சாலை நிலையம் வழியாக, 1895-இல் சிரம்பானுக்குத் திறக்கப்பட்டது.[2]
1990-களின் முற்பகுதியில் ரவாங் - சிரம்பான் சேவையும்; செந்தூல் - கிள்ளான் துறைமுகச் சேவையும் மின்மயமாக்கப் பட்டன.
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
[தொகு]- பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்
- தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- கிளானா ஜெயா வழித்தடம்
- கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
- கேஎல்ஐஏ போக்குவரத்து
- கோலாலம்பூர் மோனோரெயில்
- காஜாங் வழித்தடம்
- கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
- சா ஆலாம் வழித்தடம்
- புத்ராஜெயா வழித்தடம்
- எம்ஆர்டி சுற்று வழித்தடம்
- சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
நிலையங்கள்
[தொகு]பத்துமலை - சிரம்பான் - தம்பின் ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையில் எந்தெந்த நிலையங்களில் கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) தொடருந்துகள் நின்று செல்கின்றன எனும் விவரங்கள்:
நிலையக் குறியீடு | நிலையத்தின் பெயர் |
KC05 | பத்துமலை கொமுட்டர் நிலையம் |
KC04 | தாமான் வாயூ கொமுட்டர் நிலையம் |
KC03 | கம்போங் பத்து நிலையம் |
KC02 | பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம் |
KC01 | செந்தூல் கொமுட்டர் நிலையம் |
KA04 | புத்ரா கொமுட்டர் நிலையம் |
KA03 | பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் |
KA02 | கோலாலம்பூர் தொடருந்து நிலையம் |
KA01 KS01 |
கோலாலம்பூர் சென்ட்ரல் |
KB01 | மிட் வெளி கொமுட்டர் நிலையம் |
KB02 | செபுத்தே கொமுட்டர் நிலையம் |
KB03 | சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையம் |
KB04 | பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் |
KB05 | செர்டாங் தொடருந்து நிலையம் |
KB06 | காஜாங் தொடருந்து நிலையம் |
KB07 | காஜாங் 2 தொடருந்து நிலையம் |
KB08 | யூகேஎம் கொமுட்டர் நிலையம் |
KB09 | பாங்கி கொமுட்டர் நிலையம் |
KB010 | பத்தாங் பெனார் கொமுட்டர் நிலையம் |
KB011 | நீலாய் கொமுட்டர் நிலையம் |
KB012 | லாபு கொமுட்டர் நிலையம் |
KB013 | திரோய் கொமுட்டர் நிலையம் |
KB014 | சிரம்பான் தொடருந்து நிலையம் |
KB015 | செனவாங் கொமுட்டர் நிலையம் |
KB016 | சுங்கை காடுட் கொமுட்டர் நிலையம் |
KB017 | ரெம்பாவ் தொடருந்து நிலையம் |
KB018 | புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் |
காட்சியகம்
[தொகு]-
மின்தொடருந்து வண்டிகளின் உட்பாகம்
-
காஜாங் 2 தொடருந்து நிலையம் (கட்டுமானத்தின் போது)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History of Railways in Selangor". பார்க்கப்பட்ட நாள் 23 July 2017.
- ↑ "Old Railway Station ~ Places to Visit in Kuala Lumpur". பார்க்கப்பட்ட நாள் 23 July 2017.