திரோய் கொமுட்டர் நிலையம்
KB13 | கொமுட்டர் Tiroi Komuter Station | ||||||||||||||||
திரோய் கொமுட்டர் நிலையம் (2016) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | திரோய், சிரம்பான் மாவட்டம் நெகிரி செம்பிலான் மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 2°44′29″N 101°52′18″E / 2.74139°N 101.87167°E | |||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | |||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து | |||||||||||||||
தடங்கள் | பத்துமலை–புலாவ் செபாங் | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | KB13 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | KB13 1995 | |||||||||||||||
மறுநிர்மாணம் | 1995 | |||||||||||||||
மின்சாரமயம் | 1995 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
திரோய் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Tiroi Komuter Station; மலாய்: Stesen Komuter Tiroi) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், திரோய் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.
லாபு சாலையின் 7-ஆவது கிலோமீட்டரில், தாமான் திரோய் எனும் ஒரு சிறிய வீடமைப்பு பகுதிக்கு அடுத்ததாக இந்த நிலையம் அமைந்துள்ளது. முன்பு இந்த நிலையம் திரோய் தொடருந்து நிலையம் (Tiroi Railway Station) என்று அழைக்கப்பட்டது.
1948-1960 மலாயா அவசரகாலத்தின் போது மலாயா பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளர்களால் அழிக்கப்பட்ட பழைய நிலையத்திற்குப் பதிலாக புதிய நிலையம் கட்டப்பட்டது. அதே நிலையம் 1995-ஆம் ஆண்டில் செப்பனிடப்பட்டது.[1]
பொது
[தொகு]திரோய் நகரப் பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், திரோய் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது. சிரம்பான் வழித்தடம் என்றும்; காஜாங் வழித்தடம் என்றும் அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடத்தில் இந்த நிலையம் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளது.[2]
மிகக் குறைவான பயணிகளுக்கு சேவை செய்யும் பல கொமுட்டர் நிலையங்களில் இந்த நிலையம் ஒன்றாகும். இருப்பினும், அண்மைய காலங்களில், திரோய் நகர்ப்பகுதிக்கு அருகில் புதிய குடியிருப்புகள் உருவாகி வருவதால், இந்த நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.[2]
வழித்தடங்கள்
[தொகு]இந்த நிலையத்தில் 2 பக்க நடைமேடைகள்; 2 வழித்தடங்கள் உள்ளன. பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது.
இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கிடம் மற்றும் இரண்டு பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்களும் உள்ளன.[3]
திரோய் நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்திற்கு கேடிஎம் கொமுட்டர் மூலமாகச் செல்வதற்கு ஒரு மணி நேரம் 15 - 20 நிமிடங்கள் பிடிக்கும்.[4]
மேலும் காண்க
[தொகு]- மலேசிய தொடருந்து போக்குவரத்து
- மலேசியாவில் தொடருந்து மின்மயமாக்கல்
- திரோய்
- லாபு கொமுட்டர் நிலையம்
- கேடிஎம் கொமுட்டர்
திரோய் நிலையக் காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tiroi KTM Station – klia2.info".
- ↑ 2.0 2.1 "The Tiroi KTM Komuter Station is a KTM Komuter train halt forms part of a common KTM Komuter railway line in Seremban Route. The Station was rebuilt and opened on November 1995. It is a KTM Komuter train station located next to the small housing estate of Taman Tiroi, Negeri Sembilan, on the 7th kilometre of Jalan Labu". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
- ↑ "KTM Komuter – Tiroi Station Facilities". MALAYSIA CENTRAL (ID). 23 December 2010. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
- ↑ "The duration of the train journey by Komuter to KL Sentral station from KTM Tiroi station is approximately one hour and 15 - 20 minutes". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.