செனவாங் பயணிகள் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செனவாங் கொமுட்டர் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
 KB15 

செனவாங் பயணிகள் தொடருந்து நிலையம்
Senawang Komuter Station
பொது தகவல்கள்
அமைவிடம்செனவாங், நெகிரி செம்பிலான்,
 மலேசியா
ஆள்கூறுகள்2°41′21.1″N 101°58′20.1″E / 2.689194°N 101.972250°E / 2.689194; 101.972250
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர்மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் (கேடிஎம் கொமுட்டர்)
 பத்துமலை-புலாவ் செபாங் 
 மலாயா மேற்கு கடற்கரை 
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KB15 
வரலாறு
திறக்கப்பட்டது KB15  14 மே 2011
மின்சாரமயம்2011
சேவைகள்
முந்தைய நிலையம்   செனவாங் கொமுட்டர் நிலையம்   அடுத்த நிலையம்
சிரம்பான் நிலையம்
<<<
பத்துமலை நிலையம்
 

பத்துமலை புலாவ் செபாங்
 
சுங்கை காடுட்
>>>
புலாவ் செபாங்
அமைவிடம்
Map
செனவாங் நிலையம்

செனவாங் பயணிகள் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Senawang Komuter Station; மலாய்: Stesen Komuter Senawang) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், செனவாங் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். செனவாங் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், செனவாங் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.[1]

பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. 2011-ஆம் ஆண்டில், இந்த நிலையத்தில் கேடிஎம் கொமுட்டர் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 14 மே 2011-ஆம் தேதி முதல் கொமுட்டர் தொடருந்து இந்த நிலையத்தில் இருந்து தன் பயணத்தைத் தொடங்கியது.[2]

பொது[தொகு]

சிரம்பான் மற்றும் கிம்மாஸ் இடையே இரட்டை தடம் மற்றும் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிலையம் கட்டப்பட்டது. மலாயா தொடருந்து நிறுவனத்தின் மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்தை மின்மயமாக்கல் திட்டம் என அறியப்படுகிறது.

சிரம்பான் - கிம்மாஸ்[தொகு]

7 சனவரி 2008-இல், MYR 3.45 பில்லியன் மதிப்புள்ள சிரம்பான் - கிம்மாஸ் இரட்டைப் பாதை மின்மயமாக்கல் திட்டம், இந்திய நிறுவனமான இர்கான் இன்டர்நேசனல் (Ircon International) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[3] 100 கி.மீ. (62 மைல்) சிரம்பான் - சுங்கை காடுட் இரட்டைப் பாதை திட்டம் 2010-ஆம் ஆண்டிலும், கிம்மாஸ் இரட்டைப் பாதை திட்டம் 2012-ஆம் ஆண்டிலும் முடிக்க திட்டமிடப்பட்டது.[4] இந்தத் திட்டம் 30 அக்டோபர் 2013-இல் நிறைவடைந்தது.[5] [6]

இந்த நிலையம் செனவாங்கிற்கு மட்டுமல்லாமல் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமப்பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. சிரம்பான் மாநகரின் வெளிப்புற புறநகர்ப் பகுதிகளான பாரோய், ரகாங், பாரஸ்ட் அயிட்ஸ், தாமான் சிரம்பான் ஜெயா போன்ற பகுதிகளுக்கும் இந்த நிலையத்தின் சேவை வழங்கப்படுகிறது. அத்துடன் வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அருகிலும் இந்த நிலையம் அமைந்துள்ளது.

சிரம்பான் நிலையக் காட்சியகம்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Senawang KTM station, also known as the Senawang halt, is a Malaysian commuter rail station serving as a halt in the KTM Komuter Seremban line". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
  2. "The Senawang KTM Komuter Station is a KTM Komuter ultra modern train station forms part of Seremban-Gemas rail route. The Station begins revenue service since 14 May 2011". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
  3. "NASDAQ's Homepage for Retail Investors". NASDAQ.com.
  4. "Loh & Loh accepts rail project terms". Business Times. 27 May 2008. http://www.btimes.com.my/Current_News/BTIMES/Tuesday/BizBriefs/loh226.xml/Article/. 
  5. "IRCON gets major Malaysian rail contract". The Economic Times. 14 January 2018. http://economictimes.indiatimes.com/Railways/IRCON_gets_major_Malaysian_rail_contract/articleshow/2680293.cms. 
  6. "Seremban-Gemas Electrified Double Tracking Project To Start In October". Bernama. 31 July 2008. http://www.bernama.com/bernama/v3/news.php?id=349847. 

வெளி இணைப்புகள்[தொகு]