மூவார் ஆறு
மூவார் ஆறு Muar River Sungai Muar | |
---|---|
மூவார் நகரத்தில் மூவார் ஆற்றின் முகத்துவாரம் | |
வானில் இருந்து மூவார் ஆறு | |
அமைவு | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான்; ஜொகூர் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | தித்திவாங்சா மலைத்தொடர், கோலா பிலா மாவட்டம், நெகிரி செம்பிலான் |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | மலாக்கா நீரிணை (அருகில்) மூவார், மூவார் மாவட்டம்; தஞ்சோங் அகாஸ், தங்காக் மாவட்டம், ஜொகூர் |
⁃ ஆள்கூறுகள் | 2°03′N 102°34′E / 2.050°N 102.567°E |
நீளம் | 250 கி.மீ. |
மூவார் ஆறு; (மலாய்: Sungai Muar; ஆங்கிலம்: Muar River) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், கோலா பிலா மாவட்டம், தித்திவாங்சா மலைத்தொடரில் உருவாகி மலாக்கா நீரிணையில் அணையும் ஆறு ஆகும். மலேசியாவின் நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர் மாநிலங்கள் வழியாக பாய்ந்து செல்லும் இந்த ஆற்றின் வடிகால் படுகை பகாங், மலாக்கா மாநிலங்களையும் உள்ளடக்கியது.
இந்த ஆறு ஏறக்குறைய 250 கிமீ (155 மைல்) நீளம் கொண்டது. பகாங் ஆறு மற்றும் பேராக் ஆறு ஆகிய ஆறுகளுக்குப் பிறகு தீபகற்ப மலேசியாவில் மூன்றாவது நீளமான ஆறாகும். கிளாந்தான் ஆற்றை விட சற்று நீளமானது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள இரண்டு பெரிய ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். மற்ற ஆறு லிங்கி ஆறு. இந்த ஆறு ஜொகூர் ஆற்றுக்கு பிறகு, ஜொகூர் மாநிலத்தில் இரண்டாவது மிக முக்கியமான ஆறாகும்.
பொது
[தொகு]கி.பி.200-ஆம் ஆண்டுகளில், மலாயாவில் ஒரு பண்டைய நிலவழிப் பாதை இருந்தது. அதன் பெயர் பெனாரிக்கான் நிலவழிப் பாதை. அந்த நிலவழிப் பாதையை இந்த மூவார் ஆறு உருவாக்கித் தந்தது. அந்தப் பாதை மலாய் தீபகற்பத்தின் மேற்கில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு ஒரு குறுக்குவழியாக இருந்தது.
வழித்தடம்
[தொகு]மூவார் ஆற்றின் மூலாதாரம், நெகிரி செம்பிலான், கோலா பிலா மாவட்டம், தித்திவாங்சா மலைத்தொடரின், தாலாங் பகுதியில் அமைந்துள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Muar River தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- http://www.virtualtourist.com/travel/Asia/Malaysia/Negeri_Johor/Muar-1280913/Things_To_Do-Muar-BR-1.html#0
- S. Durai Raja Singam. 1980. Place-names in Peninsular Malaysia.