தம்பின்

ஆள்கூறுகள்: 2°29′23″N 102°14′15″E / 2.48972°N 102.23750°E / 2.48972; 102.23750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்பின்
நகரம்
Tampin
நெகிரி செம்பிலான்
தம்பின் நகரம் is located in மலேசியா மேற்கு
தம்பின் நகரம்
தம்பின்
நகரம்
தம்பின் நகரம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°29′23″N 102°14′15″E / 2.48972°N 102.23750°E / 2.48972; 102.23750
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
தொகுதிதம்பின்
உள்ளூராட்சிதம்பின் உள்ளூராட்சி மன்றம்
அரசு
 • துங்கு பெசார் தம்பின்துங்கு சையிட் ரஸ்மான் அல் கட்ரி
 • மாவட்ட அதிகாரிரொடுவான் உஜாங்[1]
பரப்பளவு[2]
 • மொத்தம்69.24 km2 (26.73 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்57,506
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு73xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N
இணையதளம்Tampin District Council தம்பின் மாவட்டக் கழகம்

தம்பின் என்பது (மலாய்: Tampin; ஆங்கிலம்: Tampin; சீனம்: 淡边) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள புலாவ் செபாங் நகரின் எல்லையாக உள்ளது. தம்பின் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவிலும்; கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 123 கி.மீ. தொலைவிலும்; தம்பின் நகரம் அமைந்து உள்ளது.

நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா எல்லையில் அமைந்துள்ளது. மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தம்பின் நகரமும் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

இந்த நகரத்தின் ஒரு சிறப்பு அமசம் என்னவென்றால் தம்பின் நகரத்தின் ஒரு பாதி நெகிரி செம்பிலான் மாநிலத்திலும்; மற்றொரு பாதி மலாக்கா மாநிலத்திலும் உள்ளது.

மலாக்கா மாநிலப் பகுதியில் உள்ள தம்பின் நகரத்தை புலாவ் செபாங் என்று அழைக்கிறார்கள். நெகிரி செம்பிலான் மாநிலப் பகுதியில் உள்ள தம்பின் நகரத்தை தம்பின் என்று அழைக்கிறார்கள். ஒரே நகரம் இரு மாநிலங்களில் தன் எல்லையைப் பிரித்துக் கொள்கிறது.[3]

நானிங் போர்[தொகு]

தம்பின் நகரம் முன்பு ரெம்பாவ் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. 1832-ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் நானிங் எனும் இடத்தில் ஓர் உள்நாட்டுப் போர். அதன் பெயர் நானிங் போர்.

அந்தப் போருக்குப் பிறகு, ரெம்பாவ் ஆட்சியாளராக இருந்த ராஜா அலி, தன்னை ஸ்ரீ மெனாந்தியின் ஆட்சியாளராகவும்; அவருடைய மருமகன் சையத் சபான் என்பவரை ரெம்பாவ் மாவட்டத்தின் ஆட்சியாளராகவும் அறிவித்தார். அந்த நிகழ்ச்சியினால், மற்ற நெகிரி செம்பிலான் ஆட்சியாளர்கள் சினம் அடைந்தார்கள்.

தம்பின் பகுதியில் புதிய ஆட்சி[தொகு]

1834-ஆம் ஆண்டில் மீண்டும் ஓர் உள்நாட்டுப் போர். அதன் விளைவாக ராஜா அலி மற்றும் சையத் சபான் இருவரும் தம்பின் பகுதிக்குப் பின்வாங்கினார்கள். அதன் பின்னர் தம்பின் மலையில் இருந்து புத்துஸ் மலை வரையிலான நிலப் பகுதிகள் ரெம்பாவ் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டன.[4]

அவர்கள் பின்வாங்கிய இடங்கள்: ரெப்பா, கெரு, தெபோங் மற்றும் தம்பின் பகுதிகளை உள்ளடக்கியது. அந்த நான்கு இடங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு தம்பின் ஆட்சி எனும் ஒரு புதிய ஆட்சி உருவாக்கப்பட்டது.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தம்பின் ஆளுமை[தொகு]

சையத் சபான் தம்பினின் முதல் ஆட்சியாளரானார். அத்துடன் தன்னை துங்கு பெசார் தம்பின் எனும் பட்டத்துடன் அறிவித்தார். நெகிரி செம்பிலான் என்றால் மலாய் மொழியில் "ஒன்பது மாநிலங்கள்" என்று பொருள்படும். அந்த வகையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அசல் ஒன்பது ஆளுமைகளில் தம்பின் மாவட்டம் ஒன்றாகும்.

1889-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி, மலாயா தொடுவாய்க் குடியிருப்புகளின் ஆளுநராகப் பதவி வகித்தவர் சர் சிசில் ஸ்மித் (Sir Cecil Smith). இவர் செலுபு; சுங்கை ஊஜோங்; ரெம்பாவ்; ஸ்ரீ மெனாந்தி மற்றும் தம்பின் ஆட்சியாளர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.

ஸ்ரீ மெனாந்தி கூட்டமைப்பு[தொகு]

ஆங்கிலேயர் ஆட்சியில் நெகிரி செம்பிலான் மாவட்டங்களை ஒருங்கிணைத்து சிறப்பாக நிர்வகிப்பதே அந்தச் சந்திப்பின் நோக்கமாகும். தம்பின், ரெம்பாவ் மற்றும் ஸ்ரீ மெனாந்தி ஆட்சியாளர்கள் ஒப்புக் கொண்டனர். ஸ்ரீ மெனாந்தி எனும் கூட்டமைப்பு உருவானது.

புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீ மெனாந்தி கூட்டமைப்பு, மார்ட்டின் லிஸ்டர் (Martin Lister) என்பவரை அதன் முதல் பிரித்தானிய ஆலோசகராக (British Resident) ஏற்றுக் கொண்டது.[5]

1957-ஆம் ஆண்டில் மலாயா சுதந்திரம் பெற்ற பின்னர், நெகிரி செம்பிலான் மாவட்டங்கள்; தங்களுக்குள் உள்ளூர் நிர்வாகச் சபைகளை உருவாக்கிக் கொண்டன. முன்பு தம்பின் நகரக் கழகம் என்று அழைக்கப்பட்ட கழகம்; 1980-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல், தம்பின் மாவட்ட மன்றம் என்று புதிதாகப் பெயர் மாற்றம் கண்டது.

தம்பின் இரயில் நிலையம்[தொகு]

தம்பின் இரயில் நிலையம் அதிகாரப்பூர்வமாக புலாவ் செபாங் - தம்பின் இரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது. தம்பின் நகர மையத்தில் இருந்து சில நிமிடங்கள் நடந்தால் அடுத்தப் பகுதி மலாக்காவைச் சேர்ந்ததாக இருக்கும்.

1905-ஆம் ஆண்டில் இருந்து 1942-ஆம் ஆண்டு வரை, புலாவ் செபாங் நகரில் இருந்து மலாக்கா நகருக்கு இரயில் பாதை இருந்தது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, புலாவ் செபாங்கில் இருந்து மலாக்காவிற்கான இரயில் பாதை ஜப்பானியர்களால் அந்த பெயர்க்கப்பட்டு விட்டது.[6] ஏறக்குறைய 32 கி.மீ. நீளம் கொண்ட இரயில் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு விட்டன.

தம்பின் வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

நெகிரி செம்பிலான்; தம்பின் வட்டாரத்தில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 321 மாணவர்கள் பயில்கிறார்கள். 36 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD5029 தம்பின் SJK(T) Tampin[7] தம்பின் தமிழ்ப்பள்ளி 73000 தம்பின் 281 26
NBD4070 ரெப்பா தோட்டம் SJK(T) Ladang Repah[8] ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 73000 தம்பின் 40 10

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பின்&oldid=3557102" இருந்து மீள்விக்கப்பட்டது