கோலா பிலா மாவட்டம்
கோலா பிலா மாவட்டம் Kuala Pilah District Daerah Kuala Pilah | |
---|---|
ஆள்கூறுகள்: 2°45′N 102°15′E / 2.750°N 102.250°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
தொகுதி | கோலா பிலா மக்களவைத் தொகுதி |
உள்ளூராட்சி | கோலா பிலா நகராட்சி |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சாரு நிசாம் சாலே |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,090.40 km2 (421.01 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 64,120 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 72xxx |
தொலைபேசி எண்கள் | +6-06 |
வாகனப் பதிவெண்கள் | N |
இணையதளம் | கோலா பிலா நகராண்மைக் கழகம் |
கோலா பிலா மாவட்டம் என்பது (மலாய்: Daerah Kuala Pilah; ஆங்கிலம்: Kuala Pilah District; சீனம்: 瓜拉庇劳县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.[1] கோலா பிலா மாவட்டத்தின் தலைநகரம் கோலா பிலா நகரம் ஆகும். கோலா பிலா நகரம் ஒரு பழைய பள்ளத்தாக்கு நகரமாகும்.
இப்போதைய சிரம்பான் நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகராக மாறுவதற்கு முன்னர், கோலா பிலா நகரம் தான் தலைநகரமாக இருந்தது.[2]
கோலா பிலா மாவட்டம், சிரம்பான் மாநகருக்கு கிழக்கே 30 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. நெகிரி செம்பிலானின் சுல்தான் யாம் துவான் பெசார் அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ மெனாந்தியும் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசரைச் சுல்தான் என்று அழைப்பது இல்லை. யாம் துவான் பெசார் (Yamtuan Besar;) என்று அழைக்கப் படுகிறார்.
கோலா பிலா மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
[தொகு]கோலா பிலா மாவட்டம், கோலா பிலா உள்ளூராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது. கோலா பிலா மாவட்டம் 11 முக்கிம்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அம்பாங் திங்கி (Ampang Tinggi)
- ஜொகூல் (Johol)
- சுவாசே (Juasseh)
- கெப்பிஸ் (Kepis)
- லங்காப் (Langkap)
- பாரிட் திங்கி (Parit Tinggi)
- பிலா (தலைநகரம்) (Pilah)
- ஸ்ரீ மெனாந்தி (Seri Menanti)
- உலு செம்போல் (Ulu Jempol)
- தெராச்சி (Terachi)
- உலு மூவார் (Ulu Muar)
தேர்தல் முடிவுகள்
[தொகு]மலேசிய மக்களவை
[தொகு]மலேசிய மக்களவையில் (டேவான் ராக்யாட்) கோலா பிலா மாவட்டத்தின் மக்களவைத் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P129 | கோலா பிலா | எடின் சாசலி | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
மாநிலச் சட்டமன்றம்
[தொகு]நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தில் கோலா பிலா மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசிய தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P129 | N15 | சுவாசே | இஸ்மாயில் லாசிம் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P129 | N16 | செரி மெனாந்தி | அப்துல் சாமாட் இப்ராகிம் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P129 | N17 | செனாலிங் | அட்னான் அபு அசான் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P129 | N18 | பிலா | முகமட் சபாருடின் சப்து | பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) |
P129 | N19 | ஜொகூல் | சாய்புல் அசான் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்
[தொகு]- செலுபு மாவட்டம்
- செம்போல் மாவட்டம்
- கோலா பிலா மாவட்டம்
- போர்டிக்சன் மாவட்டம்
- ரெம்பாவ் மாவட்டம்
- சிரம்பான் மாவட்டம்
- தம்பின் மாவட்டம்
கோலா பிலா மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
[தொகு]நெகிரி செம்பிலான்; கோலா பிலா மாவட்டத்தில் (Kuala Pilah District) 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 170 மாணவர்கள் பயில்கிறார்கள். 23 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[3]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD1066 | கோலா பிலா | SJK(T) Kuala Pilah[4] | கோலா பிலா தமிழ்ப்பள்ளி | 72000 | கோலா பிலா | 134 | 15 |
NBD1067 | சுவாசே தோட்டம் | SJK(T) Ldg Juasseh[5] | சுவாசே தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72300 | கோலா பிலா | 36 | 8 |
காட்சியகம்
[தொகு]-
கோலா பிலா ஸ்ரீ மெனாந்தி அரண்மனை
-
கோலா பிலா நகரம்
-
கோலா பிலா நகராண்மைக் கழகம்
-
கோலா பிலா பள்ளிவாசல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Majlis Daerah Kuala Pilah dikenali sebagai Majlis Bandaran Kuala Pilah (MBKP) dan ditubuhkan pada bulan Februari 1957". Portal Rasmi Majlis Daerah Kuala Pilah (MDKP). 4 November 2015. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ "Kuala Pilah was once the capital city of Negeri Sembilan before Seremban". www.heritagemalaysia.my. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
- ↑ "கோலா பிலா தமிழ்ப்பள்ளி - SJKT KUALA PILAH - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "சுவாசே தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]