பெடாஸ்

ஆள்கூறுகள்: 2°37′N 102°04′E / 2.617°N 102.067°E / 2.617; 102.067
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெடாஸ்
Pedas
நெகிரி செம்பிலான்
பெடாஸ் - லிங்கி சுங்கச் சாவடி
பெடாஸ் - லிங்கி சுங்கச் சாவடி
பெடாஸ் is located in மலேசியா
பெடாஸ்
பெடாஸ்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°37′N 102°04′E / 2.617°N 102.067°E / 2.617; 102.067
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்ரெம்பாவ்

பெடாஸ் (ஆங்கிலம்: Pedas; மலாய் மொழி: Pedas) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், ரெம்பாவ் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் சார்ந்த நகரம் ஆகும். சிரம்பான் நகர மையத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

பெடாஸ் நகரம், கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 71 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 82 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 263 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பெடாஸ் என்பது காரமான சுவையைக் குறிக்கும் ஒரு மலாய்ச் சொல் (மலாய் மொழி: Cili Pedas) ஆகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான உணவுப் பொருட்கள் காரமானவை. அதனால் இந்த நகருக்கு இப்படியும் பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

பொது[தொகு]

பெடாஸ் லிங்கி சந்திப்பு

இந்தச் சிறுநகரத்திற்கு அருகில் ஆயர் பனாஸ் (Air Panas) எனும் ஒரு சிறிய கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. அது இப்போது ஒரு நீர் பொழுதுபோக்கு பூங்காவாக (Pedas Hot Spring Water Park) மாற்றம் கண்டுள்ளது.[2]

இந்த நீர் பொழுதுபோக்கு பூங்கா, 1998 டிசம்பர் மாதம் கட்டப்பட்டது. 1999-ஆண்டு முதல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.[3]

இங்கு நிறைய எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள் உள்ளன. அந்தப் பகுதிகளை சிரம்பான் தொடருந்து சேவை (KTM Komuter Seremban Line) கடந்து செல்கிறது. 1920-களில் கட்டப்பட்ட ஒரு பழைய தொடருந்து பாலம், 100 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்றும் நல்ல நிலையில் உள்ளது.

அருகிலுள்ள நகரங்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடாஸ்&oldid=3447263" இருந்து மீள்விக்கப்பட்டது