உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்த்தாங்

ஆள்கூறுகள்: 2°57′40.7″N 102°13′08.0″E / 2.961306°N 102.218889°E / 2.961306; 102.218889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்த்தாங்
Pertang
நெகிரி செம்பிலான்
செலுபு மாவட்டத்தில் பெர்த்தாங்
செலுபு மாவட்டத்தில் பெர்த்தாங்
Map
பெர்த்தாங் is located in மலேசியா
பெர்த்தாங்
      பெர்த்தாங்
ஆள்கூறுகள்: 2°57′40.7″N 102°13′08.0″E / 2.961306°N 102.218889°E / 2.961306; 102.218889
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்செலுபு
லுவாக்செலுபு
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
72300[1]
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 492 0000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N
இணையதளம்mdjelebu.gov.my

பெர்த்தாங் நெகிரி செம்பிலான் மலாய் மொழி: Poghotang; (மலாய்; ஆங்கிலம்: Pertang; சீனம்: 葫蘆頂; ஜாவி: ڤرتڠ) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில், செலுபு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். செலுபு நெடுஞ்சாலை 86 இந்த நகரத்தின் முக்கிய சாலையாகும்.[2][3]

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 118 கி.மீ. (73.3 மைல்); நெகிரி செம்பிலான் தலைநகர் சிரம்பான் நகரத்திலிருந்து 57 கி.மீ. (43.3 மைல்) தொலைவில் பெர்த்தாங் அமைந்துள்ளது. மலைகள் மற்றும் காடுகளுக்குள் மறைந்திருக்கும் இந்த நகரம் 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது.

பெர்த்தாங்கிற்கு அருகில் 5 கி.மீ. தொலைவில் செலுபு தோட்டம் உள்ளது. மேலும் 5 கி.மீ தொலைவில் தித்தி எனும் புதுக்கிராமம் உள்ளது.

வரலாறு

[தொகு]

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், பெர்த்தாங் கிராமப் பகுதி ஈயம் உற்பத்தி செய்யும் பகுதியாக விளங்கியது. அப்போதைய மலாயாவில் வாழ்ந்த சீனர்களைப் பெரிதும் கவர்ந்த இடமாக இருந்தது. ஈயச் சுரங்கங்களில் வேலை செய்ய சீனர்கள் குழுக்கள் குழுக்களாக இங்கு குடியேறினார்கள். நாளடைவில் பெர்த்தாங் நகரம் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் ஈயச் சுரங்க நகரமாக மாறியது.

19-ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் நெகிரி செம்பிலானில் அரச அதிகாரத்தை படிப்படியாகக் கைப்பற்றினார்கள். அதன் பிறகு, பெர்த்தாங்கில் பிரித்தானியர்கள் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். ஈயம் தோண்டும் இரும்புக் கப்பல்களைக் கொண்டு ஈயச் சுரங்க நடவடிக்கைகளைத் தொடங்கினார்கள். காலப்போக்கில், சீன மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

சீன குடியிருப்பாளர்கள்

[தொகு]

அதன் விளைவாக பெர்த்தாங்கில் மக்கள் தொகை பெருகியது. உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளும் வளர்ச்சி பெறத் தொடங்கின. 1920-கள் மற்றும் 1930-களில், ஈயச் சுரங்கத் தொழிலைத் தவிர, உள்ளூர்வாசிகள் வேளாண்மையில் ஈடுபட்டு, கரும்பு, அன்னாசி, வாழை, முள்நாறி மற்றும் பிற பயிர்களைப் பயிரிட்டனர். தற்போது இங்குள்ள சீன குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் பெர்த்தாங் நகரின் புறநகர்ப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.[4]

பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

[தொகு]

நெகிரி செம்பிலான்; செலுபு மாவட்டத்தில் 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. 58 மாணவர்கள் பயில்கிறார்கள். 14 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD0024 பெர்த்தாங் தோட்டம் SJK(T) Ldg Pertang[5] பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72300 சிம்பாங் பெர்த்தாங் 58 14

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Simpang Pertang, Negeri Sembilan Postcode List - Page 1 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  2. "Simpang Pertang, Negeri Sembilan, Malaysia". m.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  3. "Pertang Travel Guide 2024 - Located in Negeri Sembilan, Malaysia". TRIP.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  4. Sumo, Baby (1 August 2011). "Durian Plantation @ Pertang, Negeri Sembilan". GoodyFoodies. பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  5. "பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ldg Pertang". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்த்தாங்&oldid=3880500" இலிருந்து மீள்விக்கப்பட்டது