உள்ளடக்கத்துக்குச் செல்

சிரம்பான் 2

ஆள்கூறுகள்: 2°41′N 101°54′E / 2.683°N 101.900°E / 2.683; 101.900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரம்பான் 2
துணைநகரம்
Seremban 2
நெகிரி செம்பிலான்
சிரம்பான் 2 is located in மலேசியா
சிரம்பான் 2
      சிரம்பான் 2
ஆள்கூறுகள்: 2°41′N 101°54′E / 2.683°N 101.900°E / 2.683; 101.900
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான்
அரசு
 • நகராட்சி சிரம்பான் மாநகராட்சி
மக்கள்தொகை
 (2016)[1]
 • மொத்தம்62,000
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
70300
மலேசியத் தொலைபேசி எண்கள்+06-601 2000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

சிரம்பான் 2 (மலாய்; ஆங்கிலம்: Seremban 2; சீனம்: 芙蓉 2) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் நகரத்திற்கு துணைநகரமாக திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாகும். முன்பு சிரம்பான் நகரத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இருந்த ஒரு செம்பனை தோட்டத்தில் இந்த நகரம் அமைக்கப்பட்டு உள்ளது.

சிரம்பான் நகருக்கு மேற்கே உள்ள மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 218-ஆம் வெளியேற்ற முனையில் (EXIT 218) அமைந்திருக்கும் இந்த நகரத்தை சிரம்பான் மாநகராட்சி நிர்வகிக்கிறது. 2,300 ஏக்கர்கள் (9 km2) பரப்பளவு நிலத்தை உள்ளடக்கியது இந்த சிரம்பான் 2 நகரம்.

சிரம்பான் மாவட்ட நிர்வாக வளாகம், சிரம்பான் நீதிமன்ற வளாகம், சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைமையகம் மற்றும் சிரம்பான் தீயணைப்பு மீட்புத் துறை தலைமையகம் போன்றவை சிரம்பான் 2 துணை நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.[2]

வளர்ச்சி[தொகு]

சிரம்பான் 2-இல் இருந்து போர்டிக்சன் நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலை
சிரம்பான் நகரில் சமூகச் சேவையாளர் டாக்டர் கிருஷ்ணன் பெயரில் ஒரு சாலைக்கு பெயரிடப்பட்டு உள்ளது.

சிரம்பான் 2 துணைநகரம் தன்னகத்தே அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நகரமாகும். இதன் மக்கள்தொகை 62,000. இது ஒரு நவீன நகரத்தின் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. நெகிரி செம்பிலானில் மிகவும் முற்போக்கான மற்றும் வெற்றிகரமான உருவாக்கங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இதன் கட்டுமானங்கள் தற்போது 90% நிலையில் நிறைவடைந்த நிலையில் உள்ளன.[3]

தேசிய கட்டமைப்பு திட்டம்[தொகு]

சிரம்பான் சுங்கச் சாவடியில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும், சிரம்பான் நகரத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் இந்த நகரம் அமைந்துள்ளது. ஏற்கனவே உள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை; ELITE எனும் மத்திய இணைப்பு விரைவுச்சாலை ; மற்றும் LEKAS எனும் காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை போன்ற சாலைகள், கோலாலம்பூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயா போன்ற முக்கியமான இடங்களுக்கு சிரம்பான் 2 துணைநகரத்தை மிகவும் அருகில் கொண்டு வந்துள்ளன.[4]

அண்மைய தேசிய கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு சிரம்பான் 2 நுழைவாயிலாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்பு திட்டத்தில் போர்டிக்சன், நீலாய் மற்றும் லாபு ஆகிய இடங்களும் சேர்க்கப்படுகின்றன. இப்பகுதியில் வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான மத்திய அரசின் முயற்சிகளில் இதுவும் ஒரு பகுதியாகும்.[5]

சுற்றுப்புற குடியிருப்புகள்[தொகு]

 • கிரீன் இசுதிரீட் மனைகள்
 • செரி கார்கோசா
 • செண்ட்ரல் பார்க்
 • எமரால்டு பார்க்
 • கார்டன் ஓம்ஸ்
 • கார்டன் அவென்யூ
 • கார்டன் சிட்டி மனைகள்
 • சிசன் ஓம்ஸ்
 • S2 அயிட்சு
 • பார்க் அவென்யூ
 • பேர்ல் 132
 • சிட்டி பார்க்
 • அகாசியா
 • சிரம்பான் 2 சிட்டி சென்டர்
 • அவிவா கிரீன்
 • சௌஜானா டூத்தா
 • இயோன
 • சௌஜனா பிரைமா
 • சௌஜனா டிராபிக்கா
 • சிம்பொனி
 • மெலடி

மேற்கோள்கள்[தொகு]

 1. Tan, Ai Leng (17 July 2017). "Seremban 2 attracting more buyers from the Klang Valley". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 23 July 2017.
 2. "Seremban 2 attracting more buyers from the Klang Valley". 17 July 2017.
 3. Land, I. J. M. "Seremban 2 is IJM Land's flagship development in Negeri Sembilan. As a self-contained township with a growing population of 62,000 people". IJM Land (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
 4. "Seremban 2 is IJM Land's flagship township, located in Negeri Sembilan. Neighbouring its predecessor, the township was developed with the goal to relocate the administrative, business and education services away from the the state's capital. To date, the township is one of the most progressive and successful in the state, with developments currently at 90% completion". பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
 5. "All".

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரம்பான்_2&oldid=3881648" இலிருந்து மீள்விக்கப்பட்டது