லிங்கி
லிங்கி | |
---|---|
Linggi | |
நகரம் நெகிரி செம்பிலான் | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°29′N 102°01′E / 2.483°N 102.017°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | போர்டிக்சன் |
லிங்கி (ஆங்கிலம்: Linggi; மலாய் மொழி: Linggi) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், போர்டிக்சன் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் சார்ந்த நகரம் ஆகும்.[1]
மலேசிய வரலாற்றில் புகழ் பெற்ற இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நகரின் வரலாற்று முக்கியத்துவம், அண்மைய காலங்களில் மறைந்து போய் வருகிறது. இந்த நகரின் அருகாமையில் லிங்கி ஆறு செல்கிறது. இந்த நகரம் மிகவும் அமைதியான நகரம் ஆகும்.
இந்த ஆற்றின் வழியாகத்தான் பிரித்தானியர்கள் மலாயாவில் காலடி எடுத்து வைத்தனர். மலாக்கா சுல்தானகம் உருவாகிய காலத்தில், லிங்கி கிராமம் மிகவும் புகழ் பெற்று விளங்கியது.
பொது
[தொகு]மலாக்காவை 1400-களில் உருவாக்கிய பரமேஸ்வரா, சில ஆண்டுகள் இங்கே தங்கி உள்ளார். சுமத்திராவின் மினாங்கபாவ் மக்களுடன் பழகி இருக்கிறார். முன்பு காலத்தில் லிங்கி ஒரு வர்த்தக மையமாகவும் விளங்கி உள்ளது.[2]
1840-ஆம் ஆண்டுகளில் ஈயம் கண்டுபிடிக்கப்பட்டதும், நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு, இந்த நகரம் வர்த்தகப் போக்குவரத்துகளின் ஓர் இடைத் தரகராகவும் விளங்கியது.
லிங்கி நகரின் ஆற்றில் நிறைய முதலைகள் உள்ளன. மலேசியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இங்குதான முதலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Stop the slander on 1MDB' - The Rakyat Post - The Rakyat Post". www.therakyatpost.com. Archived from the original on 2015-03-16.
- ↑ "Edisi". 26 December 2018.
- ↑ "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF) (in ஆங்கிலம்). Malaysian National Committee on Geographical Names. 2017. p. 32. Archived from the original (PDF) on May 22, 2021. பார்க்கப்பட்ட நாள் May 29, 2021.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help)