ரெம்பாவ் மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°35′N 102°05′E / 2.583°N 102.083°E / 2.583; 102.083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெம்பாவ்
மாவட்டம்
Rembau District
நெகிரி செம்பிலான்
ரெம்பாவ் மாவட்டம் உட்பிரிவுகள்
ரெம்பாவ் மாவட்டம்
உட்பிரிவுகள்
ரெம்பாவ் மாவட்டம் is located in மலேசியா மேற்கு
ரெம்பாவ் மாவட்டம்
ரெம்பாவ்
மாவட்டம்
ரெம்பாவ் மாவட்டம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°35′N 102°05′E / 2.583°N 102.083°E / 2.583; 102.083
நாடு மலேசியா
மாநிலம்Flag of Negeri Sembilan.svg நெகிரி செம்பிலான்
தொகுதிரெம்பாவ்
உள்ளூராட்சிபோர்டிக்சன் உள்ளூராட்சி மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிஅமினோ அகோஸ் சுயூப்
பரப்பளவு
 • மொத்தம்415.12 km2 (160.28 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்41,325
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு71xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N
இணையதளம்போர்டிக்சன் நகராண்மைக் கழகம்
Map of Rembau District, Negeri Sembilan.svg

ரெம்பாவ் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Rembau; ஆங்கிலம்: Rembau District; சீனம்: 林茂县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். ரெம்பாவ் மாவட்டத்தின் முக்கிய நகரம் ரெம்பாவ் (Rembau) நகரம்.

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 95 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது.

வரலாறு[தொகு]

ரெம்பாவ் மாவட்டம், அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) எனப்படும் தாய்வழி (Matrilineal) மரபைச் சார்ந்தது. அடாட் பெர்பாத்தே என்பது சுமத்திராவின் மினாங்கபாவு மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு வழக்கமான நடைமுறையாகும்.

ரெம்பாவ் இன்னும் பழைய மினாங்கபாவு முறையில் மாவட்ட ஆட்சியாளரை நியமித்து வருகிறது. அதன் மாவட்டத் தலைவர் பெங்குலு (Penghulu) என்று முன்பு அழைக்கப் பட்டார். இப்போது யாங் தெர் அமாட் மூலியா உண்டாங் லுவாக் ரெம்பாவ் (Yang Teramat Mulia Undang Luak Rembau) என்று அழைக்கப் படுகிறார்.

யாங் டி பெர்துவான் பெசார்[தொகு]

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மன்னர் யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar of Negeri Sembilan). நெகிரி செம்பிலான் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப் படுபவர்களில் யாங் தெர் அமாட் மூலியா உண்டாங் லுவாக் ரெம்பாவ் என்பவரும் ஒருவராவார்.

சுங்கை ஊஜோங், செலுபு, சொகோல், தம்பின் ஆகிய மாவட்டங்களின் அரச ஆட்சியாளர்களும் நெகிரி செம்பிலான் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப் படும் தகுதி பெறுகின்றனர்.

ரெம்பாவ் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்[தொகு]

ரெம்பாவ் மாவட்டத்தில் 17 முக்கிம்கள் உள்ளன.

  1. பத்து அம்பார் (Batu Hampar)
  2. பொங்கேக் (Bongek)
  3. செம்போங் (Chembong)
  4. செங்காவ் (Chengkau)
  5. காடோங் (Gadong)
  6. குண்டூர் (Kundur)
  7. லெகோங் ஈலீர் (Legong Hilir)
  8. லெகோங் உலு (Legong Hulu)
  9. மிக்கு (Miku)
  10. நேராசாவ் (Nerasau)
  11. பெடாஸ் (Pedas)
  12. பிலின் (Pilin)
  13. செலெமாக் (Selemak)
  14. செமர்போக் (Semerbok)
  15. செப்ரி (Sepri)
  16. தஞ்சோங் கிளிங் (Tanjung Keling)
  17. தித்தியான் பிந்தாங்கோர் (Titian Bintangor)

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) போர்டிக்சன் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கட்சி
P131 ரெம்பாவ் கைரி சமாலுடின் பாரிசான் நேசனல் (அம்னோ)

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தில் ரெம்பாவ் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[1]

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P131 N26 செம்போங் சைபுல்பாரி இட்ரிஸ் பாரிசான் நேசனல் (அம்னோ)
P131 N28 கோத்தா அவாலுடின் சாயிட் பாரிசான் நேசனல் (அம்னோ)

ரெம்பாவ் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

மலேசியா; நெகிரி செம்பிலான்; ரெம்பாவ் மாவட்டத்தில் (Rembau District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 265 மாணவர்கள் பயில்கிறார்கள். 47 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

ரெம்பாவ் மாவட்டத்தில், ஏற்கனவே 5 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அவற்றுள் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மாணவர் பற்றாக்குறையினால் (7 மாணவர்கள்), 2017 ஜனவரி 3-ஆம் தேதி மூடப்பட்டது.

புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி[தொகு]

இருப்பினும் அந்தப் பள்ளியின் உரிமம் பாதுகாக்கப்பட்டு, ஸ்ரீ செண்டாயான் நகரத்தில், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பள்ளியில், 2017 பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் பயன்படுத்தப் படுகிறது. புதிய பள்ளியை முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் திறந்து வைத்தார்.

புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJK(T) Ladang Bukit Bertam) எனும் பழைய பெயர் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி (SJK(T) Bandar Sri Sendayan) என புதிய பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது அந்தப் புதிய பள்ளியில் 192 மாணவர்கள் பயில்கிறார்கள்.

அந்த வகையில் மலேசியாவில் மேலும் ஒரு தமிழ்ப்பள்ளி காப்பாற்றப்பட்டு உள்ளது. மாணவர் பற்றாக் குறையினால் மூடப்படும் சூழலில் உள்ள மலேசியத் தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்றும் போராட்டங்கள் தொடர்கின்றன.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD3031 ரெம்பாவ் SJK(T) Ladang Batu Hampar[2][3] பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71300 ரெம்பாவ் 60 11
NBD3032 செம்போங் தோட்டம் SJK(T) Ladang Chembong[4] செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71300 போர்டிக்சன் 137 17
NBD3033 மூடப்பட்டு விட்டது SJK(T) Ladang Bukit Bertam[5] புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம்
71150 லிங்கி N/A N/A
NBD3034 சுங்கை பாரு தோட்டம் SJK(T) Ladang Sg Baru சுங்கை பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி 71150 லிங்கி 26 8
NBD3035 சுங்கை காடுட் SJK(T) Ldg Perhentian Tinggi பெர்ஹெந்தியான் திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி
சிரம்பான் தாமான் திவி ஜெயா நகர்ப் பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டது
71450 சுங்கை காடுட் 42 11

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் - 2018". 2018-05-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. "பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Batu Hampar". www.facebook.com (ஆங்கிலம்). 20 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sjk (t) Ladang Batu Hampar, Negeri Sembilan (+60 6-685 4694)". vymaps.com. 20 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. "செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG CHEMBONG". sjktchembong.blogspot.com. 20 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. SINGH, SARBAN. "அன்றைய நிலையில் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil school in state of 'zero' limbo". The Star (ஆங்கிலம்). 20 December 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rembau District
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெம்பாவ்_மாவட்டம்&oldid=3622207" இருந்து மீள்விக்கப்பட்டது