தம்பின் மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°30′N 102°25′E / 2.500°N 102.417°E / 2.500; 102.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்பின்
மாவட்டம்
Tampin District
நெகிரி செம்பிலான்
தம்பின் மாவட்டம் உட்பிரிவுகள்
தம்பின் மாவட்டம்
உட்பிரிவுகள்
தம்பின் மாவட்டம் is located in மலேசியா மேற்கு
தம்பின் மாவட்டம்
தம்பின்
மாவட்டம்
தம்பின் மாவட்டம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°30′N 102°25′E / 2.500°N 102.417°E / 2.500; 102.417
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
தொகுதிதம்பின்
உள்ளூராட்சிதம்பின் உள்ளூராட்சி மன்றம்
அரசு
 • துங்கு பெசார் தம்பின்துங்கு சையிட் ரஸ்மான் அல் கட்ரி
 • மாவட்ட அதிகாரிசகாரி அபான்டி[1]
பரப்பளவு
 • மொத்தம்878.69 km2 (339.26 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்82,545
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாடு இல்லை)
மலேசிய அஞ்சல் குறியீடு
71xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N
இணையதளம்தம்பின் மாவட்டக் கழகம்

தம்பின் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Tampin; ஆங்கிலம்: Tampin District; சீனம்: 淡边县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். தம்பின் மாவட்டத்தின் முக்கிய நகரம் தம்பின் (Tampin) நகரம்.[3]

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 123 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது.

நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா எல்லையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டம், உள்ளாட்சிச் சட்டம் 1976-இன் விதிகள் மூலம் மறு சீரமைக்கப்பட்டது.

அதன் விளைவாக, ஜூலை 1, 1980-இல் தம்பின் மாவட்டக் கழகம் (Tampin District Council) உருவாக்கப்பட்டது. தம்பின் மாவட்டம் முன்பு தம்பின் வாரியம் என்று அழைக்கப்பட்டது.

நிர்வாகப் பகுதிகள்[தொகு]

தம்பின் மாவட்டக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் வரும் பகுதிகள்:-

 1. தம்பின் டவுன்
 2. கிமிஞ்சே நகரம்
 3. கிமிஞ்சே லாமா
 4. கிமிஞ்சே பாரு
 5. பத்தாங் மலாக்கா
 6. ஆயர் கூனிங் செலாத்தான்
 7. கெடோக்
 8. கிம்மாஸ்

தம்பின் முக்கிம்கள்[தொகு]

தம்பின் மாவட்டத்தில் மாவட்டத்தில் 7 முக்கிம்கள் உள்ளன.[4]

 1. ஆயர் கூனிங் (Ayer Kuning)
 2. கிம்மாஸ் (Gemas)
 3. கெமிஞ்சே (Gemencheh)
 4. கெரு (Keru)
 5. ரெப்பா (Repah)
 6. தம்பின் தெங்கா (Tampin Tengah)
 7. திபோங் (Tebong)

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) போர்டிக்சன் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கட்சி
PP133 தம்பின் அசான் பகாரும் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)

தம்பின் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

தம்பின் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்; 2023-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[5]

மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
N34 கிம்மாஸ் ரிசுவான் அகமட் பெரிக்காத்தான் நேசனல் (பெரிக்காத்தான்)
N35 கெமிஞ்சே சுகாய்மிசான் பிசார் பாரிசான் நேசனல் (அம்னோ)
N36 ரெப்பா வீரப்பன் சுப்பிரமணியம் பாக்காத்தான் அரப்பான் (ஜ.செ.க)

தம்பின் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

மலேசியா; நெகிரி செம்பிலான்; தம்பின் மாவட்டத்தில் (Tampin District) 7 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 760 மாணவர்கள் பயில்கிறார்கள். 107 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD5029 தம்பின் SJK(T) Tampin தம்பின் தமிழ்ப்பள்ளி 73000 தம்பின் 281 26
NBD4070 ரெப்பா தோட்டம் SJK(T) Ladang Repah ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 73000 தம்பின் 40 10
NBD5031 ரீஜண்ட் தோட்டம் SJK(T) Ladang Regent ரீஜண்ட் தமிழ்ப்பள்ளி 73200 கெமிஞ்சே 241 26
NBD4072 ஆயர் கூனிங் SJK(T) Air Kuning Selatan ஆயர் கூனிங் செலாத்தான் தமிழ்ப்பள்ளி 73200 கெமிஞ்சே 31 11
NBD5033 புக்கிட் கிளேடேக் தோட்டம் SJK(T) Ladang Bukit Kledek புக்கிட் கிளேடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73200 கெமிஞ்சே 15 8
NBD5034 கிம்மாஸ் SJK(T) Gemas கிம்மாஸ் தமிழ்ப்பள்ளி 73400 கிம்மாஸ் 129 18
NBD5035 சுங்கை கிளாமா தோட்டம் SJK(T) Ladang Sg Kelamah சுங்கை கிளாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி 73400 கிம்மாஸ் 23 8

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
 2. User, Super. "Pejabat Daerah Dan Tanah Tampin - Latarbelakang". pdttampin.ns.gov.my. {{cite web}}: |last= has generic name (help)
 3. "Daerah Adat Negeri Sembilan". பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.
 4. "City Background". Official Portal of Tampin District Council (MDT) (in ஆங்கிலம்). 19 October 2015. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
 5. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Negeri Sembilan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பின்_மாவட்டம்&oldid=3877715" இலிருந்து மீள்விக்கப்பட்டது