உள்ளடக்கத்துக்குச் செல்

பகாவ்

ஆள்கூறுகள்: 2°48′35″N 102°23′59″E / 2.80972°N 102.39972°E / 2.80972; 102.39972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகாவ்
Bahau
நெகிரி செம்பிலான்
பகாவ் நகர் மணிக்கூண்டு
பகாவ் நகர் மணிக்கூண்டு
Map
பகாவ் is located in மலேசியா
பகாவ்
      பகாவ்
ஆள்கூறுகள்: 2°48′35″N 102°23′59″E / 2.80972°N 102.39972°E / 2.80972; 102.39972
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம் செம்போல்
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்36,645
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
72100
மலேசியத் தொலைபேசி எண்கள்+60
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

பகாவ் (மலாய்: Bahau; ஆங்கிலம்: Bahau; சீனம்: 巴豪); என்பது தீபகற்ப மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், செம்போல் மாவட்டத்தில் (Jempol District) அமைந்து உள்ள ஒரு நகரம்.[1] தவிர அந்த மாவட்டத்தின் மிக முக்கியமான நகரமும் ஆகும்.[2]

இந்தப் பகாவ் நகரத்தின் பெயர் சீனச் சொற்றொடரில் இருந்து பெறப்பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. பகாவ் என்றால் சீன மொழியில் "குதிரையின் வாய்" என்று பொருள்.

பொது[தொகு]

இந்த நகரத்திற்கு அருகில் மாசான் (Mahsan) எனும் பெயரில் ஒரு சிறுநகரம் உள்ளது. சீனர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். சீனக் காண்டோனீஸ் மொழியில் மாசான் என்றால் "குதிரையின் உடல்" என்று பொருள்.

பகாவ் நகரம், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் நகரில் இருந்து சுமார் 53 கி.மீ. தொலைவிலும்; மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 88 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

வரலாறு[தொகு]

முன்பு காலத்தில் தீபகற்ப மலேசியாவின் உட்புறத்தில், மலாக்கா நகரத்தையும் பகாங் மாநிலத்தையும் இணைக்கும் ஒரு நீர் நிலப் பாதை இருந்தது. அந்தப் பாதையில் தான் இந்தப் பகாவ் நகரம் அமைந்து இருந்தது.

தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் இருக்கும் மூவார் நிலப் பகுதிகளைக் கிழக்கு கடற்கரையில் உள்ள பகாங், பெக்கான் நிலப் பகுதியுடன் அந்தப் பாதை இணைத்தது.

சீனர்களின் வருகை[தொகு]

இழுக்கின்ற பாதை (லாலுவான் பெனாரிக்கான்) (Laluan Penarikan) என்று அந்தப் பாதையை அழைத்தார்கள். மூவார் ஆற்றையும்; பகாங் ஆற்றையும் இணைக்கும் பாதை. மலாக்கா நீரிணையில் இருந்து தென் சீனக் கடலுக்கு செல்லும் நீர்க் கப்பல்களின் பயணக் காலத்தை அந்த நீர் நிலப் பாதைச் சுருக்கியது.[3][4][5]

1900-ஆம் ஆண்டுகளில், பகாவ், கோலா பிலா பகுதிகளில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சீனக் குடியேற்றவாசிகளின் வருகையும் பெருகியது. பகாவ் நகரம் நகரம் செழிக்கத் தொடங்கியது.

சீனக் குடியேற்றவாசிகள் பகாவ் நகரத்திற்கு அருகில் மாசான் எனும் நகரத்தை நிறுவினார்கள். ரப்பர் தொழில், எண்ணெய்ப் பனை தொழில் மற்றும் காட்டு மர வணிகம் போன்றவற்றில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பகாவ் நகரத்தின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள். பகாவ் நகரமும் வளர்ச்சி அடைந்தது.

இரண்டாம் உலகப் போர்[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது, சிங்கப்பூரில் இருந்து, ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலானுக்கு மக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. சிங்கப்பூரில் அப்போது மக்கள் தொகை அதிகம். உணவு நிலைமை மோசமாக இருந்தது.

இதற்கு முன்னர் மலாயா அதிகாரிகள் பகாங் மாநிலத்தின் எண்டாவ் பகுதிக்கு சீனர்களை மறுக் குடியேற்றம் செய்தனர். வெற்றி கண்டனர். அதன் பிறகு சிங்கப்பூரில் வாழ்ந்த யூரேசியக் குடியேற்றவாசிகள். பகாவ் பகுதிக்கு அழைத்து செல்லப் பட்டனர். இருப்பினும், மலேரியா நோய் அந்தக் குடியேற்றத்திற்கு பெரும் தடையாக அமைந்தது.

மக்கள் தொகையியல்[தொகு]

பகாவ் நகரத்தின் மக்கள் தொகையில் அதிகமானவர்கள் சீனர்கள். இவர்கள் பகாவ் நகரத்தில் வாழ்கின்றனர். மலாய்க்காரர்கள் பெரும்பாலும் புறநகரில் உள்ள பெல்டா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்தியர்கள், நகர்ப் புறங்களிலும் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரப்பர், எண்ணைய்ப் பனை தோட்டங்களிலும் வாழ்கின்றனர்.

அருகாமை நகரங்கள்[தொகு]

  • மாசான் (Mahsan)
  • ஜுவாசே (Juasseh)
  • ரொம்பின் (Rompin)
  • டாங்கி (Dangi)
  • பத்து கிக்கிர் (Batu Kikir)

செம்போல் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

மலேசியா; நெகிரி செம்பிலான்; செம்போல் மாவட்டத்தில் (Jempol District) 11 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 978 மாணவர்கள் பயில்கிறார்கள். 141 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்தப் பள்ளிகள் அனைத்தும் பகாவ் நகரத்தின் சுற்று வட்டாரங்களில் அமைந்து உள்ளன.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD6001 பகாவ் தோட்டம் SJK(T) Ldg Bahau பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 264 23
NBD6002 ஆயர் ஈத்தாம் தோட்டம் SJK(T) Ladang Air Hitam ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72120 பண்டார் ஸ்ரீ செம்போல் 91 14
NBD6003 கெடிஸ் தோட்டம் SJK(T/Te) Ladang Geddes கெடிஸ் தோட்டத் தமிழ் தெலுங்கு பள்ளி 72120 பண்டார் ஸ்ரீ செம்போல் 85 14
NBD6004 சுங்கை செபாலிங் தோட்டம் SJK(T) Ladang Sg Sebaling சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 16 7
NBD6005 கெல்பின் தோட்டம் SJK(T) Ldg Kelpin கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 24 9
NBD6006 செனாமா தோட்டம் SJK(T) Ldg Senama செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 81 10
NBD6007 செயிண்ட் ஹெலியர் தோட்டம் SJK(T) Ladang St Helier செயிண்ட் ஹெலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 171 15
NBD6008 சியாலாங் தோட்டம் SJK(T) Ldg Sialang சியாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 78 10
NBD6009 ஜெராம் பாடாங் தோட்டம் SJK(T) Ldg Jeram Padang ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 24 10
NBD6010 ரொம்பின் SJK(T) Dato' K.Pathmanaban டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 110 21
NBD6011 மிடில்டன் தோட்டம் SJK(T) Ldg Middleton மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 34 8

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bahau in the Malayan state of Negeri Sembilan was established as an agricultural settlement". பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.
  2. "Facts and figures on Bahau at a glance". பார்க்கப்பட்ட நாள் 13 December 2021.
  3. Maps of Malaysia and Borneo: Discovery, Statehood and Progress, By Fr Durand, Richard Curtis
  4. Rizuan Abdul Hamid (4 May 2021). "Laluan Silam: Sejarah, Lagenda dan Rahsia" [Ancient Route: History, Legend and Secret]. Alternatif. Archived from the original on 14 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 12 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Leaves of the Same Tree: Trade and Ethnicity in the Straits of Melaka, By Leonard Y. Andaya

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாவ்&oldid=3878025" இலிருந்து மீள்விக்கப்பட்டது