ராசா

ஆள்கூறுகள்: 2°42′N 101°56′E / 2.700°N 101.933°E / 2.700; 101.933
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசா
Rasah
நெகிரி செம்பிலான்
புக்கிட் ராசா, சிரம்பான்
புக்கிட் ராசா, சிரம்பான்
ராசா is located in மலேசியா
ராசா
ராசா
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°42′N 101°56′E / 2.700°N 101.933°E / 2.700; 101.933
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான்

ராசா (ஆங்கிலம்: Rasah; மலாய் மொழி: Rasah) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் சார்ந்த நகரம் ஆகும். சிரம்பான் நகர மையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 54 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 86 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

சிரம்பான் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்[தொகு]

சிரம்பான் மாவட்டத்தில் மாவட்டத்தில் 8 முக்கிம்கள் உள்ளன. அவற்றுள் ராசாவும் ஒரு முக்கிம் ஆகும்.

  1. அம்பாங்கான் (Ampangan)
  2. லாபு (Labu)
  3. லெங்கெங் (Lenggeng)
  4. பந்தாய் (Pantai)
  5. ராசா (Rasah)
  6. ரந்தாவ் (Rantau)
  7. சிரம்பான் நகரம் (Seremban City)
  8. செத்துல் (Setul)

பொது[தொகு]

18-ஆம் நூற்றாண்டில் ராசா கிராமப்புறப் பகுதி, ஈயச் சுரங்கங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. அதற்கு முன்னர், ஒரு பாரம்பரியக் கிராமமாகவும் இருந்தது. முன்பு காலத்தில் அங்கு ஒரு வர்த்தகப் பயணிகள் பாதையும் இருந்தது.

லிங்கி ஆறு வழியாக சுங்கை ஊஜோங் முக்கிம் பகுதியைக் கோலா லிங்கியுடன் இணைத்த அந்த ஈய வர்த்தகப் பாதைக்கு ராசா முக்கிம் ஒரு முக்கியமான நிறுத்தமாகவும் இருந்தது.

மக்கள் தொகை[தொகு]

ராசாவில் 44.5% சீனர்கள்; 29.4% மலாய்க்காரர்கள்; 21.4% இந்தியர்கள்; 0.4% மற்றவர்கள் உள்ளனர்.

ராசா முக்கிம்: இனக்குழுக்கள் (2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)
இனம் மக்கள் தொகை சதவிதம்
சீனர்கள் 39,558 44.5%
மலாய்க்காரர்கள் 26,149 29.4%
இந்தியர்கள் 19,048 21.4%
மற்றவர்கள் 393 0.4%
குடிமக்கள் அல்லாதவர் 3,783 4.3%
மொத்தம் 88,931 100%

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசா&oldid=3447018" இருந்து மீள்விக்கப்பட்டது