செனவாங்

ஆள்கூறுகள்: 2°42′N 101°59′E / 2.700°N 101.983°E / 2.700; 101.983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனவாங்
Senawang
நெகிரி செம்பிலான்
செனவாங் நிபுணத்துவ மருத்துவமனை[1]
செனவாங் நிபுணத்துவ மருத்துவமனை[1]
Map
செனவாங் is located in மலேசியா
செனவாங்
      செனவாங்
ஆள்கூறுகள்: 2°42′N 101°59′E / 2.700°N 101.983°E / 2.700; 101.983
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான்
லுவாக்சுங்கை ஊஜோங்
அரசு
 • நகராட்சி சிரம்பான் மாநகராட்சி[2]
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு70450[3]
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 679 0000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

செனவாங் (மலாய்; ஆங்கிலம்: Senawang; சீனம்: 葫蘆頂; ஜாவி: ڤرتڠ) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில், சிரம்பான் மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் பெரும் நகர்ப்பகுதி ஆகும். இது சிரம்பான் மாநகருக்கு அருகிலுள்ள ரெம்பாவ் மாவட்டம்; கோலா பிலா மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களுக்கு தெற்கில், சிரம்பான் மாநகரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் செனவாங் அமைந்துள்ளது.

சிரம்பான் மாநகரின் துணை நகரமாகவும் விளங்கும் இந்த புறநகர்ப் பகுதியில் தான் மலேசியாவின் மிகப் பெரிய தொழில் பூங்காக்களில் ஒன்றான செனவாங் தொழில் பூங்கா (Senawang Industrial Park) உள்ளது.[4]

பொது[தொகு]

மலேசிய நாட்டில் செனவாங் ஒரு பெரிய தொழில்துறை மண்டலமாகும். இதன் தொழில் பூங்காக்களில் அதிக எண்ணிக்கையிலான உற்பத்தி ஆலைகள் உள்ளன.

75 மீட்டர் உயரத்தில் உயரமான பீடபூமியில் பரந்து விரிந்து கிடக்கும் செனவாங் தொழில் பூங்கா, ஈரப்பதம் கொண்ட பொருட்களைத் தயாரிப்பதில் சிறந்த தேர்வாக அமைகிறது. அத்துடன் முக்கிய உற்பத்தியாளர்களின் தேர்வாகவும் அதன் புவியியல் அமைப்பு அமைகிறது.[5]

சுற்றுப்புற குடியிருப்புகள்[தொகு]

  • லாவெண்டர் அயிட்சு[6]
  • தாமான் பண்டார் செனவாங்[7]
  • தாமான் மாத்தா அரி அயிட்[8]
  • தாமான் செரி பகி
  • தாமான் தெராத்தாய்
  • தாமான் தாசிக் ஜெயா
  • தாமான் கோபேனா
  • தாமான் தேசா டெலியா
  • தாமான் தேசா இக்சோரா
  • தாமான் தேசா புளோரா
  • தாமான் செனவாங் இண்டா
  • தாமான் நுசா இந்தான்
  • தாமான் அலமண்டா
  • தாமான் செண்டானா
  • தாமான் செனவாங் ஜெயா
  • தாமான் கேட்லியா
  • தாமான் ஸ்ரீ மாவார்
  • தாமான் லில்லி
  • தாமான் பெர்னியாகான் செனவாங்
  • ஆங்சி வில்லா
  • காசியா வில்லா
  • தாமான் மரிடா
  • தாமான் சாஸ்மின்
  • தாமான் தேசா மேலோர்
  • தாமான் தேசா மேலோர் இண்டா
  • தாமான் ராசா சயாங்
  • தாமான் ரோஸ் மேவா
  • தாமான் கியாம்பாங் இண்டா
  • தாமான் சத்ரியா

பொருளாதாரம்[தொகு]

தெமியாங் நகருக்கு அருகிலுள்ள E21 -இன் ஒரு பகுதி; செனவாங் நெடுஞ்சாலையின் தெற்கு முனையமாகும்.
இடமாறல் போக்குவரத்து E2 கூட்டரசு சாலை.
செனவாங் ஜெயண்ட் பேரங்காடி

செனவாங் இலகுவகைத் தொழில்[தொகு]

ஸ்ரீ செனவாங் இலகுவகைத் தொழில் வளாகம் (Senawang Industrial Area) என்பது செனாவாங்கில் உள்ள ஒரு தொழில்துறை பகுதி. இதற்கு அருகில் செனவாங் - பாரோய் விரைவுச்சாலை உள்ளது. மற்றோர் இலகுவகைத் தொழில் வளாகம் துங்கு ஜபார் இலகுவகைத் தொழில் வளாகம் (Tuanku Jaafar Light Industrial Area) ஆகும்.

செனவாங் வணிக மையம்[தொகு]

செனவாங் வணிக மையம் என்பது தைபான் செனவாங் அல்லது டாத்தாரான் செனவாங் என்று அழைக்கப்படுகிறது. இது செனாவாங்கின் மிக முக்கியமான சில்லறை விற்பனை மையமாகும்.[9] |

இந்த மையத்திற்குள் ஜெயண்ட் பேரங்காடி, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி, பிசா அட், டோமினோ பிசா மற்றும் செக்ரட் ரெசபி போன்ற உணவகங்கள் அடங்கும்.

வணிக வங்கிகளில் மே பேங்க், ராக்யாட் வங்கி, சிம்பானான் நேசனல் வங்கி மற்றும் ஆர்எச்பி வங்கி ஆகியவை அடங்கும்.

செனவாங் நகர மையம்[தொகு]

செனவாங் சிட்டி சென்டர் (மலாய்: Pusat Bandar Senawang) புரோட்டோன் சேவை மையம், மலேசிய அஞ்சல் நிறுவனம் (மலேசிய விரைவு அஞ்சல் நிறுவன மையம்) மற்றும் புட்சால் விளையாட்டு வளாகம் போன்ற வசதிகளை உள்ளடக்கியது. இது தைபன் 2 செனவாங் எனப்படும் முக்கிய சில்லறை விற்பனை இடங்களையும் உள்ளடக்கியது.

வணிக வங்கிகளில் மலேசிய இசுலாமிய வங்கி, அபின் வங்கி மற்றும் எஸ்எம்இ வங்கி ஆகியவை அடங்கும்.

பண்டார் பிரிமா செனவாங்[தொகு]

பண்டார் பிரிமா செனவாங் ஒப்பீட்டளவில் புதிய சில்லறை விற்பனை மையம்; செனவாங் வணிக மையத்திற்கு அருகில் உள்ளது. இதன் மையப்பகுதியில் மைடின் பேரங்காடி உள்ளது.

போக்குவரத்து[தொகு]

வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, சிரம்பான்-போர்டிக்சன் நெடுஞ்சாலை, சிரம்பான் மாவட்டம் மற்றும் போர்டிக்சன் ஆகியவற்றை இணைக்கும் நெடுஞ்சாலையுடன் செனவாங் இடைமாற்று வழிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள மற்றொரு நெடுஞ்சாலையான காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை சிலாங்கூர்; நெகிரி செம்பிலான் மாநிலங்களை இணைக்கிறது.

மின்சாரத் தொடருந்து சேவை[தொகு]

கேடிஎம் கொமுட்டர் மின்சாரத் தொடருந்து சேவைகள் செனவாங்கிற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளன. சிரம்பான் தொடருந்து நிலையத்தில் இருந்து செனவாங் மற்றும் சுங்கை காடுட் வரையில் 8.5 km (5.3 mi) நீளம் கொண்ட விரிவாக்கப் பணிகள் 2011-இல் முடிக்கப்பட்டன.

சிரம்பான் - கிம்மாஸ் நகரங்களுக்கு இடையிலான 98 கி.மீ. கேடிஎம் கொமுட்டர் மின்சாரத் தொடருந்து சேவையை உருவாக்கி மேம்படுத்தும் திட்டம், இந்திய நிறுவனமான இர்கோன் இன்டர்நேசனல் நிறுவனத்திற்கு (IRCON International Limited) வழங்கப்பட்டது.[10]

இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது:

  1. சிரம்பான்-சுங்கை காடுட் (11.3 கிமீ)
  2. சுங்கை காடுட்-கிம்மாஸ் (86.8 கிமீ).[10]

சிரம்பான் வழித்தடம் வழியாக செனவாங் கொமுட்டர் நிலையம் மற்றும் சுங்கை காடுட் கொமுட்டர் நிலையம் ஆகிய நிலையங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SALAM Senawang Specialist Hospital". www.salamsenawang.com. பார்க்கப்பட்ட நாள் 2019-06-01.
  2. "Official Portal Seremban City Council (MBS)". www.mbs.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  3. "Senawang, Seremban - Postcode - 70450 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  4. "Location of Senawang". maplandia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-06-01.
  5. "Senawang is a major industrial zone in this country, with a large number of manufacturing plants dotting its Industrial Parks". Senawang Online. பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  6. "About Lavender Heights". propwall.my. பார்க்கப்பட்ட நாள் 2019-06-01.
  7. "Taman Bandar Senawang". www.propwall.my. பார்க்கப்பட்ட நாள் 2019-06-01.
  8. "Taman Matahari Height". www.iproperty.com.my. பார்க்கப்பட்ட நாள் 2019-06-01.
  9. "Dataran Senawang". www.aim.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2019-06-01.
  10. 10.0 10.1 "ETS to reach Sg Gadut by Christmas". Keretapi Tanah Melayu Berhad. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனவாங்&oldid=3880761" இலிருந்து மீள்விக்கப்பட்டது