ரந்தாவ்

ஆள்கூறுகள்: 2°35′N 101°57′E / 2.583°N 101.950°E / 2.583; 101.950
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரந்தாவ்
நெகிரி செம்பிலான்
Rantau
ரந்தாவ் நகரம்
ரந்தாவ் நகரம்
ரந்தாவ் is located in மலேசியா
ரந்தாவ்
ரந்தாவ்
      ரந்தாவ்
      மலேசியா
ஆள்கூறுகள்: 2°35′N 101°57′E / 2.583°N 101.950°E / 2.583; 101.950
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
தொகுதிசிரம்பான் மாவட்டம்
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்78,760
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு71200
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

ரந்தாவ் என்பது (மலாய்: Rantau; ஆங்கிலம்: Rantau; சீனம்: 晏斗) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தின் அமைந்துள்ள ஒரு நகரம்.[1]

சிலியாவ் நகரில் இருந்து 8 கி.மீ.; சிரம்பான் நகரில் இருந்து 16 கி.மீ.; போர்டிக்சன் நகரில் இருந்து 20 கி.மீ.; காஜாங் நகரில் இருந்து 49 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 69 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.[2]

கோலா சாவா, சிலியாவ், பெடாஸ் ஆகிய நகரங்களின் குக்கிராமங்களால் இந்த ரந்தாவ் நகரம் சூழப்பட்டு உள்ளது. தவிர ரந்தாவ் புறநகர்ப் பகுதிகளில் பல எண்ணெய்ப் பனைத் தோட்டங்களும் உள்ளன.

வரலாறு[தொகு]

1870-ஆம் ஆண்டுகளில் நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் தோட்டம் (Linsum Estate); மலாயாவிலேயே மிகப் பழமையான தோட்டமாக விளங்கியது. மலாயாவின் முன்னோடித் தோட்டங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது. கூட்டாட்சி மலாய் மாநிலங்களில் (Federated Malay States) இருந்த காபி ரப்பர் தோட்டங்களில் மிகவும் பிரபலமான தோட்டமாகவும் வரலாறு படைத்து உள்ளது.

முதன்முதலில் ரந்தாவ், லின்சம் தோட்டத்தில் காபி பயிர் செய்தார்கள். லாபகரமாக அமையவில்லை. அதனால் காபி தோட்ட உரிமையாளர்கள் தங்கள் கவனத்தை ரப்பரின் பக்கம் மாற்றிப் பார்த்தார்கள்.[3][4]

ரந்தாவ் லின்சம் காபி தோட்டம்[தொகு]

1878-ஆம் ஆண்டில், நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் காபி தோட்டத்திற்குத் தான் தமிழர்கள் முதன் முதலில் கொண்டு வரப்பட்டார்கள் என்று தெரிய வருகிறது.[5]

மலாக்கா நீரிணையைப் பயன்படுத்திய படகுகள்; கப்பல்கள்; சிங்கப்பூரில் இருந்து பினாங்கிற்குச் செல்லும் போது லிங்கி, லுக்குட், போர்டிக்சன் படகுத் துறைகளை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கின்றன.

லிங்கி முகத்துவாரம்[தொகு]

லிங்கி முகத்துவாரம் அதிக அலைகள் இல்லாத இடமாக இருந்து உள்ளது. பாய்மரக் கப்பல்கள்; நீராவிக் கப்பல்கள்; அதன் பின்னர் வந்த டீசல் கப்பல்கள்; அணைவதற்கு லிங்கி லுக்குட் பகுதிகள் பாதுகாப்பான படகுத் துறைகளாக விளங்கி உள்ளன[6]

1870 - 1900-ஆம் ஆண்டுகளில் அந்தப் பகுதிகளில் நிறையவே மரவெள்ளி, சர்க்கரைவல்லி, காபி, வாழைத் தோட்டங்கள் இருந்தன.

காபி ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் அங்கு மரவெள்ளி, சர்க்கரைவல்லி உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. தென்னை, அன்னாசி, கரும்பு, கொக்கோ, மிளகு தோட்டங்களும் இருந்தன. அந்தத் தோட்டங்களில் மலாயா தமிழர்கள் தான் வேலை செய்து இருக்கிறார்கள்.[7]

ரந்தாவ் வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

ரந்தாவ் வட்டாரத்தில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 355 மாணவர்கள் பயில்கிறார்கள். 42 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD4083 கோம்போக் தோட்டம் SJK(T) Ladang Kombok[8][9] கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71200 ரந்தாவ் 60 14
NBD4084 ரந்தாவ் SJK(T) Rantau[10][11] ரந்தாவ் தமிழ்ப்பள்ளி 71200 ரந்தாவ் 293 28

பிரபலங்கள்[தொகு]

சில பிரபலமான நபர்களை வழங்கிய பெருமை ரந்தாவ் நகரத்திற்கு உள்ளது.

முகமது அசான் (Chief Minister of Negeri Sembilan Mohamad Hasan); நெகிரி செம்பிலான் முன்னாள் முதல்வர்;[12]

டத்தோ வி.எஸ். மோகன்; நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்;[13]

மலர் ராஜாராம்; கனடாவில் மலாய் மொழி வானொலி தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் சேவை செய்து தாயகம் திரும்பி, 2019-ஆம் ஆண்டு ரந்தாவ் இடைத் தேர்தலில் போட்டியிட்டவர்.[14]

மகா சின்னத்தம்பி; ரந்தாவில் பிறந்தவர். தற்சமயம் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பகுதியில் மிகப்பெரிய வீடு கட்டுமானத் தொழில் அதிபர் (Australian developer of Greater Springfield Development in Queensland). இவரின் இப்போதைய சொத்து மதிப்பு $1.78 பில்லியன் அமெரிக்க டாலர்.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF) (in ஆங்கிலம்). Malaysian National Committee on Geographical Names. 2017. p. 32. Archived from the original (PDF) on May 22, 2021. பார்க்கப்பட்ட நாள் December 17, 2021. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Rantau, Malaysia - Facts and information on Rantau - Malaysia.Places-in-the-world.com". malaysia.places-in-the-world.com. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  3. Rathborne, Ambrose (1898). Camping and Tramping in Malaya. John Beaufoy Publishing; 1st edition (December 1, 2011). பக். 232 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1906780395. https://www.amazon.com/Camping-Tramping-Malaya-Peninsula-Stanfords/dp/1906780390. பார்த்த நாள்: 17 December 2021. 
  4. முத்துக்கிருஷ்ணன், மலாக்கா. "ரந்தாவ் லின்சம் தோட்டத் தமிழர்கள் - 1870" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  5. "The Malaysian Plantation Industry: A Brief History to the mid 1980s". www.arabis.org. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  6. admin, Author (5 April 2020). "Coffee planting in colonial Malaya". Coffee Cultures (in கனடிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021. {{cite web}}: |first1= has generic name (help)
  7. "Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources - Southeast Asia Visions". seasiavisions.library.cornell.edu. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  8. "கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  9. "SJK(T)LADANG KOMBOK,71200 RANTAU, NSDK". sjktladangkombok.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  10. "ரந்தாவ் தமிழ்ப்பள்ளி - SJK T RANTAU". பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  11. "SEJARAH SJKT RANTAU - ரந்தாவ் தமிழ்ப்பள்ளி வரலாறு" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  12. Nor, Raja Noraina Raja Rahim dan Mohd Helmi Irwadi Mohd (12 May 2018). "New Negeri Sembilan government praises Tok Mat's leadership, says will do better [NSTTV] | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  13. Kemang, Author Telok (18 February 2018). "Qualities of a True Leader Dato' VS Mogan". 1Malaysia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021. {{cite web}}: |first1= has generic name (help)
  14. "மலர் ராஜாராம்". Archived from the original on 29 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பகுதியில் மிகப்பெரிய வீடு கட்டுமானத் தொழில் அதிபர்". Greater Springfield (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரந்தாவ்&oldid=3569442" இலிருந்து மீள்விக்கப்பட்டது