லிங்கி ஆறு
லிங்கி ஆறு Linggi River | |
---|---|
லிங்கி ஆறு உற்பத்தியாகும் தித்திவாங்சா மலைத்தொடர் | |
அமைவு | |
நாடு | மலேசியா; |
மாநிலம் | நெகிரி செம்பிலான்; மலாக்கா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | தித்திவாங்சா மலைத்தொடர் |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | மலாக்கா நீரிணை |
நீளம் | 83.5 km (51.9 mi) |
லிங்கி ஆறு; (மலாய்: Sungai Linggi; ஆங்கிலம்: Linggi River) என்பது மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரில் (Titiwangsa Range) உற்பத்தியாகி நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வழியாகப் பாய்ந்து மலாக்கா நீரிணையில் கலக்கும் ஆறு ஆகும்.
83 கி. மீ. நீளமுடைய இந்த ஆறு, நெகிரி செம்பிலான்; மலாக்கா மாநிலங்களில் உள்ள ஆறுகளில் மிக முக்கியமான ஆறாகக் கருதப் படுகிறது. நெகிரி செம்பிலான்; மலாக்கா மாநிலங்களுக்கு எல்லையாகவும் அமைகிறது.
பொது
[தொகு]இந்த ஆறு தித்திவாங்சா மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள கம்போங் ஜெர்லாங் (Kampung Jerlang), பந்தாய் (Pantai) எனும் இடத்தில் உருவாகிறது. அங்கு இருந்து சிரம்பான் மாவட்டத்தில் சுற்றியுள்ள ஆற்றுப் படுகைப் பகுதிகளில் முதலில் பாய்கிறது.
பின்னர் அதே சிரம்பான் மாவட்டத்தில் உள்ள அம்பாங்கான் (Ampangan), சிரம்பான், ராசா (Rasah), மம்பாவ் (Mambau), ரந்தாவ் ஆகிய நகரங்கள் வழியாகவும்; போர்ட்டிக்சன் மாவட்டத்தில் உள்ள லிங்கி நகரம் வழியாகவும் பாய்ந்து; மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள கோலா லிங்கி துறைமுகத்தில் முடிவடைகிறது.
வரலாறு
[தொகு]16-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், இந்த லிங்கி ஆறு, மலாக்கா மற்றும் சுங்கை ஊஜோங் ஆட்சிப் பகுதிகளின் முக்கிய வணிகப் பாதையாக இருந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டில், ஈய வர்த்தகம், இந்த ஆற்றின் வழியாகத்தான் நடைபெற்று உள்ளது.[1][2]
சுங்கை ஊஜோங் என்பது நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டது. நெடும் காலமாக, சுங்கை ஊஜோங், நெகிரி செம்பிலான் மாநிலத்தில், ஒரு மாநிலமாகவே கருதப்பட்டு வந்தது.[3]
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், அது ஒரு தனி அரசாங்கமாகவும் இயங்கி வந்தது. சுங்கை ஊஜோங் மிகப் பழமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bendahara, A. (2015). Seremban to usher in new year with a bang - Columnist - New Straits Times. Www2.nst.com.my. Retrieved 15 August 2015, from http://www2.nst.com.my/opinion/columnist/seremban-to-usher-in-new-year-with-a-bang-1.451241
- ↑ http://docslide.us/documents/malaysian-studies-1.html
- ↑ Ahmad Sabri, A. (2014). Raksa Raya Malaysia. Google Books. Retrieved 15 August 2015, from https://books.google.com.my/books?id=IVDUBAAAQBAJ&pg=PA87&lpg=PA87&dq=Parameswara+Sening+ujong&source=bl&ots=ett4URke_F&sig=Ww-RvLcWzEi4hgCKY8Mp4ulzv_U&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=Parameswara%20Sening%20ujong&