நெகிரி செம்பிலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெகிரி செம்பிலான்
Negeri Sembilan
மாநிலம்
நெகிரி செம்பிலான் டாருல் கூசுஸ்
நெகிரி செம்பிலான் Negeri Sembilan-இன் கொடி
கொடி
பண்:
Berkatlah Yang DiPertuan Besar Negeri Sembilan
நெகிரி செம்பிலான் அமைவிடம்
நெகிரி செம்பிலான் அமைவிடம்
தலைநகர்சிரம்பான்
அரச நகரம்
அரசு
 • வகைமக்களாட்சி
 • யாங் டி பெர்துவான் பெசார்துங்கு முஹ்ரிஷ்
 • மந்திரி பெசார்முகமட் ஹாசன்
(பாரிசான் நேஷனல்)
பரப்பளவு[1]
 • மொத்தம்6,686 km2 (2,581 sq mi)
மக்கள்தொகை (2010 மதிப்பீடு)
 • மொத்தம்9,97,071
மனித வளர்ச்சிக் குறியீடு
 • HDI (2010)0.739 (நடு) (5th)
அஞ்சல் குறியீடு70xxx to 73xxx
தொலைபேசிக் குறியீடு06
வாகனப் பதிவுN
மலாய் கூட்டமைப்புடன் இணைவு1895
ஜப்பானிய ஆக்கிரமைப்பு1942
மலாய் கூட்டமைப்புடன் இணைவு1948
இணையதளம்http://www.ns.gov.my

நெகிரி செம்பிலான் (Negeri Sembilan) என்பது மலேசியாவின் 11 மாநிலங்களில் ஐந்தாவது பெரிய மாநிலம். மலேசியத் தீபகற்பத்தின் கிழக்கு கடல் கரையில் அமைந்து உள்ளது. நெகிரி செம்பிலான் என்றால் மலாய் மொழியில் ஒன்பது மாநிலங்கள் என்று பொருள். நெகிரி (Negeri) என்றால் மாநிலம். செம்பிலான் (Sembilan) என்றால் ஒன்பது. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம் சிரம்பான். அரச நகரம் ஸ்ரீ மெனாந்தி.

நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு வடக்கே சிலாங்கூர், பகாங் மாநிலங்கள் உள்ளன. தெற்கே மலாக்கா, ஜொகூர் மாநிலங்கள் உள்ளன. கிழக்கே மலாக்கா நீரிணை உள்ளது. அதற்கு அடுத்து இந்தோனேசியத் தீவான சுமத்திரா இருக்கிறது. அதற்கு அடுத்து இந்து மாக்கடல் பரந்து விரிந்து பரவி உள்ளது.

வரலாறு[தொகு]

இந்தோனேசியாவில் இருந்து 18-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசிய மீனாங்காபாவ் இனத்தவர்கள் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தனர். அவர்கள் நெகிரி செம்பிலானில் புதுக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள். அடுத்து புது மன்னராட்சியையும் தோற்றுவித்தார்கள்.

இவர்களின் மன்னராட்சி முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சற்று மாறு பட்டு இருக்கிறது. ஒரு மன்னரின் மகன் வாரிசாக அமையாமல் ஒரு மாவட்டத்தின் தலைவர் மன்னராகப் பிரகடனம் செய்யப் படுவதே இந்த மாநிலத்தில் காணப்படும் சிறப்புத் தன்மை ஆகும்.

யாங் டி பெர்துவான் பெசார்[தொகு]

நெகிரி செம்பிலான் மாநிலம் நான்கு மாவட்டப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. சுங்கை ஊஜோங், ஜெலுபு, ஜொகூல், ரெம்பாவ் என நான்கு பிரிவுகள். இந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைவர் இருக்கின்றார்.

அந்தத் தலைவரை ‘உண்டாங்’ என்று அழைக்கிறார்கள். மாநிலத்தின் மன்னர் பதவி காலியாகும் போது நான்கு மாவட்டத் தலைவர்களும் ஒன்று கூடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரை மன்னராகத் தெரிவு செய்கின்றனர்.

அப்படி தெரிவு செய்யப் படும் மன்னர், சுல்தான் என அழைக்கப் படுவது இல்லை. அதற்குப் பதிலாக யாங் - டி - பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்று அழைக்கப் படுகின்றார்.

பூகிஸ் படையெடுப்பு[தொகு]

15 ஆம் நூற்றாண்டில் மீனாங்காபாவ் இனத்தவர் சுமத்திராவில் இருந்து மலேசியாவில் குடியேறினர். அவர்களுக்கு மலாக்கா சுல்தான்கள் பாதுகாப்பு வழங்கினர். மலாக்கா சுல்தான்களுக்குப் பின்னர் ஜொகூர் சுல்தான்கள் உதவி வழங்கினர்.

அந்தக் காலகட்டத்தில் சுமத்திராவில் இருந்து வந்த பூகிஸ் எனும் மற்றோர் இனத்தவர் ஜொகூரின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதனால் ஜொகூர் ஆட்சி பலகீனம் அடைந்தது.

ஆகவே, நெகிரி செம்பிலானில் வாழ்ந்து வந்த மீனாங்காபாவ்கள் தங்களின் சொந்த சுமத்திரா சுல்தானின் உதவியைக் கோரினர். அப்போது சுமத்திராவில் மீனாங்காபாவ்களுக்கு சுல்தான் அப்துல் ஜாலில் என்பவர் சுல்தானாக இருந்தார்.[2][3]

ராஜா மெலாவார்[தொகு]

நெகிரி செம்பிலான் மீனாங்கபாவ் மக்களுக்கு உதவி செய்ய ராஜா மெலாவார் என்பவர் சுமத்திராவில் இருந்து அனுப்பப் பட்டார். ஆனால், ராஜா மெலாவார் வந்த போது ராஜா காத்திப் என்பவர் தன்னைத் தானே மன்னராகப் பிரகடனம் செய்து கொண்டு ஆட்சியில் இருந்தார்.

சினம் அடைந்த ராஜா மெலாவார், ராஜா காத்திப் மீது போர் பிரகடனம் செய்தார். போர் நடந்தது. அதில் ராஜா மெலாவார் வெற்றியும் பெற்றார். உடனே ஜொகூர் சுல்தான் புதிய ஆட்சியாளரான ராஜா மெலாவாரை அங்கீகரித்து புதிய யாங் டி பெர்துவான் பெசாராக அறிவித்தார். யாங் டி பெர்துவான் பெசார் என்றால் எல்லா மாநிலங்களுக்கும் தலைவர் என்று பொருள். இது 1773ல் நடந்த நிகழ்ச்சி.

ராஜா மெலாவார் இறந்ததும் அரியணைப் போட்டி தீவிரமானது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆனது போல ஆளாளுக்குத் தங்களைத் தலைவர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர். அதனால், நெகிரி செம்பிலானில் குழப்பம் தான் மிஞ்சியது. இந்தக் கட்டத்தில் பிரித்தானியர்கள் நெகிரி செம்பிலான் ஆட்சியில் தலையிட்டனர்.

பிரிட்டிஷ் ஆளுமை[தொகு]

பிரித்தானியர்களின் முதலீடுகளைப் பாதுகாக்கப் பிரித்தானியர்களுக்குச் சகல உரிமைகளும் உள்ளன எனும் சாக்குப் போக்குகளைச் சொல்லி சுங்கை ஊஜோங் உள்நாட்டுக் கலகத்தில் தலையிட்டனர். அதன்படி 1873ல் சுங்கை ஊஜோங் மாவட்டம் பிரித்தானியர்களின் பாதுகாப்பின் கீழ் வந்தது.

சுங்கை ஊஜோங் மாவட்டத்திற்கு British Resident எனும் பிரிட்டிஷ் கண்காணிப்பாளர் நியமிக்கப் பட்டார். 1886ல் ஜெலுபு மாவட்டம் பிரித்தானியர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. இதர ஜொகூல், ரெம்பாவ் எனும் மாவட்டங்கள் 1897ல் பிரித்தானியர்களின் கைகளுக்கு மாறின.

நெகிரி செம்பிலான் மாநிலத்தை ஜப்பானியர்கள் 1941ல் இருந்து 1945 வரை ஆட்சி செய்தனர். 1948ல் மலாயாக் கூட்டரசில் இணைந்தது. பின்னர் 1963ல் மலேசியாவின் ஒரு மாநிலமாக உறுப்பியம் பெற்றது.[4]

கலாசாரம்[தொகு]

சிரம்பானில் ஒரு முக்கிய சாலை

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மினாங்கபாவ் கலாசாரமே முதன்மை வகிக்கின்றது. மினாங்கபாவ் கலாசாரம் சுமத்திராவில் இருந்து வந்ததாகும்.[5] மினாங்கபாவ் என்பது Menang Kerbau எனும் மலாய்ச் சொல்லில் இருந்து வந்தது. Menang என்றால் வெற்றி. Kerbau என்றால் எருமை.[6] வெற்றி பெறும் எருமை என்று பொருள் படுகிறது.

மினாங்கபாவ் இனத்தவரின் வீட்டுக் கூரைகள் மிக அழகாகவும், ஒய்யாரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கும். அவர்களின் கட்டிடக்கலை தனித்தன்மை வாய்ந்தது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பெரும்பாலான வீடுகள் மினாங்கபாவ் கலாசாரப் பின்னணியைக் கொண்டவை. அதே அமைப்பில் சிரம்பான் நகராண்மைக் கழக இல்லம், மாநில இல்லம், மாநில அரும்பொருள் காட்சியகம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.

பெண்மைக்கு முதன்மை[தொகு]

சிரம்பான் இரயில் நிலையம்

மினாங்கபாவு கலாசாரத்தின்படி ஆண்களைவிட, பெண்களுக்குத்தான் முதன்மையும் முக்கியத்துவமும் வழங்கப்படுகின்றன.[7] பெண்கள் சொல்வதை ஆண்கள் கண்டிப்பாகக் கேட்டு, பணிந்து போக வேண்டும். அதற்கு Adat Perpatih என்று பெயர்.[8] இது மிகவும் பழமை வாய்ந்த பண்பு வழக்கம் ஆகும்.

பல நூற்றாண்டுகளாகப் 'பெண்மைக்கு முதன்மை' எனும் பழக்க வழக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.[9] சமூக குடும்ப நிகழ்ச்சிகள், சமூகக் கலாசார ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பெண்களுக்குத்தான் முதல் வாய்ப்புகள். பெண்களை முன்னுக்கு நிறுத்தி வைத்து, ஆண்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பார்கள்.[10]

விவாகரத்து[தொகு]

சிரம்பான் நகரில் ஒரு நடைபாதை

பெண்களுக்கு முதன்மைத் தன்மை வழங்கப்படுவதை மாற்றி அமைக்க, மலேசியாவில் பிரித்தானியர்களும், இந்தோனேசியாவில் டச்சுக்காரர்களும், பெரும் முயற்சி செய்தார்கள். இருப்பினும் வெற்றி பெற முடியவில்லை. மினாங்கபாவ் மக்களின் இரத்தத்துடன் ஊறிப் போன அந்தக் கலாசாரத்தை மாற்றி அமைக்க அவர்களால் முடியவில்லை.[11]

பொதுவாக, மினாங்கபாவ் பெண்கள் தங்களின் கணவர்களை அவ்வளவு எளிதில் விவாகரத்துச் செய்யவிட மாட்டார்கள். விவாகரத்து என்பது ஒரு தப்பான செயல் என்று மினாங்கபாவ் பெண்கள் கருதுகின்றனர். இந்தக் கலாசாரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தில், இன்னும் பரவலாக இருந்து வருகிறது.

தமிழ்-மினாங்கபாவ் குடும்பங்கள்[தொகு]

அண்மைய காலங்களில் அந்த நிலைமை மாறி விட்டது. மேற்கத்திய கலாசாரத்தின் ஊடுருவல்களால் விவாகரத்து என்பது சாதாரணமாகி வருகிறது. தமிழர்கள் பலர் மினாங்கபாவ் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர்.

கோலாபிலா, பகாவ், ஜெலுபு போன்ற இடங்களில் தமிழ் - மினாங்கபாவ் குடும்பங்களைப் பார்க்கலாம். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பலர் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, கணினித்துறை வல்லுநர்களாகப் பணி செய்கின்றனர். இவர்கள் இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

சின்ன வயதிலேயே தமிழர்கள் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சற்றுக் கூடுதலாக உள்ளது. அப்படி திருமணம் செய்து கொள்ளும் பலருக்கு முறையான பதிவுகள் இல்லை. பெரும்பாலான இளம் தம்பதியினர் சிரம்பான் நகருக்கு குடிபெயர்கின்றனர். இது ஒரு சமுதாய பிரச்னையாகவும் மாறி வருகின்றது.[12]

அரசியலமைப்பு[தொகு]

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத் திட்டங்கள் 1959 மார்ச் 26ல் அமலுக்கு வந்தன. அதன்படி யாங் டி பெர்துவான் பெசார் மாநிலத்தின் ஆட்சி செய்பவராக இயங்குவார். அவர்தான் மாநிலத்தின் மன்னர்.

தற்சமயம் மாட்சிமை தங்கிய துங்கு முஹ்ரிஷ் இப்னி அல்மார்ஹும் துவாங்கு முனாவிர் மாநில மன்னராக விளங்குகின்றார். அவருக்கு முன்பு துங்கு ஜாபார் இப்னி அல்மார்ஹும் துவாங்கு அப்துல் ரஹ்மான் மன்னராக இருந்தார். அவர் 27 டிசம்பர் 2008ல் இயற்கை எய்தினார்.

ஆட்சியாளர் தேர்வு முறை[தொகு]

நெகிரி செம்பிலானில் அதன் சுல்தான் எனும் ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப் படும் முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாறுபட்டு உள்ளது. மாநிலத்தின் உள்ள மாவட்டத் தலைவர்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்கின்றனர். மாவட்டத் தலைவர்களை உண்டாங் என்று அழைக்கின்றனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நான்கு உண்டாங்குகளுக்கு மட்டுமே ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு. அந்த நான்கு உண்டாங்குகள்:

 • சுங்கை ஊஜோங் உண்டாங்
 • ஜெலுபு உண்டாங்
 • ஜொகூல் உண்டாங்
 • ரெம்பாவ் உண்டாங்

ஆட்சியாளர்த் தேர்வில் உண்டாங்குகள் வாக்கு அளிக்கலாம். ஆனால், அவர்கள் ஆட்சியாளர் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது. நெகிரி செம்பிலானின் ஆட்சியாளர் தேர்தலில் நிற்க வேண்டுமானால் அவர் ஒரு மலாய்க்கார ஆணாக இருக்க வேண்டும். ராஜா ராடின் இப்னி ராஜா லெங்காங் பாரம்பரியத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

மாநிலச் சட்டமன்றம்[தொகு]

மலேசியாவின் 12வது பொதுத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் 21 இடங்களைப் பெற்று ஆளும் கட்சியான பாரிசான் நேஷனல் முதன்மை பெற்றது. ஐந்து தமிழர்கள் வெற்றி பெற்றனர். ஆளும் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர். எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்கள் நால்வர்.


2008 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் விவரம்.
பாரிசான் நேசனல் 21 | ஜனநாயக செயல் கட்சி 10 | மக்கள் நீதிக் கட்சி 4 | மலேசிய இஸ்லாமியக் கட்சி 1
எண் சட்டமன்றத் தொகுதி தேர்வு செய்யப் பட்ட உறுப்பினர் தேர்வு செய்யப் பட்ட கட்சி
N1
சென்னா
சியோவ் சென் பின்
பாரிசான் நேசனல்
N2
பெர்த்தாங்
ரசாக் மான்சூர்
பாரிசான் நேசனல்
N3
சுங்கை லூயி
ஜைனல் அபிடின் அகமட்
பாரிசான் நேசனல்
N4
கெலாவாங்
யூனோஸ் ரஹ்மாட்
பாரிசான் நேசனல்
N5
செர்த்திங்
சம்சுல்கார் முமட் டெலி
பாரிசான் நேசனல்
N6
பாலோங்
அசீஸ் சம்சுடின்
பாரிசான் நேசனல்
N7
ஜெராம் பாடாங்
வி.எஸ்.மோகன்
பாரிசான் நேசனல்
N8
பகாவ்
தியோ கோக் சியோங்
ஜனநாயக செயல் கட்சி
N9
லெங்கேங்
முஸ்தபா சலீம்
பாரிசான் நேசனல்
N10
நீலாய்
யாப் இவ் வெங்
ஜனநாயக செயல் கட்சி
N11
லோபாக்
லோக் சியூ பூக்
ஜனநாயக செயல் கட்சி
N12
தெமியாங்
நிங் சின் சாய்
ஜனநாயக செயல் கட்சி
N13
சிக்காமட்
அமினுடின் ஹருன்
மக்கள் நீதிக் கட்சி
N14
அம்பாங்கான்
ரசீட் லத்தீப்
மக்கள் நீதிக் கட்சி
N15
ஜுவாசே
முகமட் ராட்சி காயில்
பாரிசான் நேசனல்
N16
ஸ்ரீ மெனாந்தி
டத்தோ அப்துல் சாமாட் இப்ராஹிம்
பாரிசான் நேசனல்
N17
செனாலிங்
இஸ்மாயில் லாசிம்
பாரிசான் நேசனல்
N18
பிலா
அட்னான் அபு ஹாசன்
பாரிசான் நேசனல்
N19
ஜொகூல்
ர்ரொஸ்லான் முகமட் யூசோப்
பாரிசான் நேசனல்
N20
லாபு
ஹாசிம் ருஷ்டி
பாரிசான் நேசனல்
N21
புக்கிட் கெப்பாயாங்
சா கீ சின்
ஜனநாயக செயல் கட்சி
N22
ரஹாங்
எம்.கே.ஆறுமுகம்
ஜனநாயக செயல் கட்சி
N23
மம்பாவ்
ஓங் மே மே
ஜனநாயக செயல் கட்சி
N24
செனாவாங்
பி.குணசேகரன்
ஜனநாயக செயல் கட்சி
N25
பாரோய்
முகமட் தவுபெக் அப்துல் கனி
மலேசிய இஸ்லாமிய கட்சி
N26
செம்போங்
ஜைபுல்பகாரி இட்ரிஸ்
பாரிசான் நேசனல்
N27
ரந்தாவ்
டத்தோ ஸ்ரீ உத்தாமா முகமட் அசான்
பாரிசான் நேசனல்
N28
கோத்தா
அவாலுடின் சாயிட்
பாரிசான் நேசனல்
N29
சுவா
சாய் தோங் சாய்
மக்கள் நீதிக் கட்சி
N30
லுக்குட்
இயான் தின் சின்
ஜனநாயக செயல் கட்சி
N31
பாகான் பினாங்
டான்ஸ்ரீ முகமட் இசா சாமாட்
பாரிசான் நேசனல்
N32
லிங்கி
இஸ்மாயில் தாயிப்
பாரிசான் நேசனல்
N33
போர்ட்டிக்சன்
ரவி முனுசாமி
மக்கள் நீதிக் கட்சி
N34
கிம்மாஸ்
ஜைனாப் நாசீர்
பாரிசான் நேசனல்
N35
கெமேஞ்சே
முகமட் காமில் அப்துல் அசீஸ்
பாரிசான் நேசனல்
N36
ரெப்பா
வீரப்பன் சுப்ரமணியம்
ஜனநாயக செயல் கட்சி

மக்கள் தொகை[தொகு]

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மூன்று முக்கிய இனத்தவர்கள் உள்ளனர். இவர்களில் அதிகமானோர் மலாய்க்காரர்கள். அடுத்து அதிகமானோர் சீனர்கள். இந்தியர்கள் 16 விழுக்காட்டினர். இந்தியக் குடும்பங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைத் தீவிரமாகக் கடைப் பிடித்து வருவதால், அண்மைய காலங்களில் இந்தியர்களின் மக்கள் தொகை கணிசமான அளவு குறைந்து வருகிறது.

2005 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்கள்:

 • மலாய்க்காரர்கள் - 497,896 (54.96%)
 • சீனர்கள் - 220,141 (24.03%)
 • இந்தியர்கள் - 137,588 (15.18%)
 • மற்றவர்கள் - 50,267 (05.54%)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. p. 27. 27 December 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
 2. http://go2travelmalaysia.com/tour_malaysia/ns_historical.htm
 3. https://museumvolunteersjmm.com/2016/04/04/the-minangkabau-of-negeri-sembilan/
 4. "Colonial Reports--annual, Issues 1570-1599". 1931. 9 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 5. The Minangkabau (also called the Minang) come from West Sumatra Province.
 6. The word Minangkabau can actually be interpreted as a compound of the words menang (win) and kerbau (buffalo).
 7. With no men, this leaves women to take care of the home and economic life of their communities.
 8. "N.Sembilan adalah satu-satunya negeri di Malaysia yang mengamalkan sistem adat perpatih atau dikenali juga sebagai sistem matrilineal". 2012-04-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 9. In their matrilineal culture, the family name and the family wealth is inherited by the daughter.
 10. "The Minangkabau from Sumatra settled in Negeri Sembilan in the 15th century under the protection of the Melaka Sultanate". 2012-07-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 11. "Adat pepatih lebih mementingkan kaum wanita daripada lelaki". 2012-02-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 12. "Child marriages are not uncommon in the Indian community residing at rubber estates in Negeri Sembilan". 2010-11-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிரி_செம்பிலான்&oldid=3344142" இருந்து மீள்விக்கப்பட்டது