உள்ளடக்கத்துக்குச் செல்

கே எப் சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே எப் சி
நிறுவுகை1930 வடக்கு கோர்பின், கென்டக்கி
நிறுவனர்(கள்)ஹார்லண்டு சாண்டர்சு
தலைமையகம்1441 கார்டினர் ஒழுங்கை, லூயிவில் (கென்டக்கி), ஐக்கிய அமெரிக்கா
அமைவிட எண்ணிக்கை18,000 (2012)[1]
முதன்மை நபர்கள்டேவிட் நோவாக்,
ரொஜர் ஈட்டன்
தொழில்துறைவேக உணவுச்சாலை
வருமானம்அமெரிக்க டாலர்15 பில்லியன் (2011)[2]
தாய் நிறுவனம்Yum! Brands
இணையத்தளம்www.kfc.com

கேஎஃப்சி (KFC, Kentucky Fried Chicken) என்பது புகழ்பெற்ற வேக உணவுச்சாலைகளின் கூட்டமைப்பாகும். இதன் தலைமையகம் கென்டக்கி, லூயிவிலில் அமைந்துள்ளது. கேஎப்சி விற்பனை அடிப்படையில் மக்டொனல்டுசிற்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்திலுள்ளது.[1] 2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 120 நாடுகளில் 18,0000 கிளைகளைக் கொண்டுள்ளது.

கேஎப்சி உலகின் முதல் உலகளாவிய உணவுச்சாலைகளின் கூட்டு நிறுவனம் ஆகும். இது தனது கிளைகளை இங்கிலாந்து, மெக்சிக்கோ, ஜமைக்காவில் 1960களின் நடுப்பகுதியில் ஆரம்பித்தது.

கிளைகள்

இந்தியாவில் 350 கிளைகள் உள்ளன. இந்திய உணவுப்பழக்கத்திற்கு ஏற்றவாறான தின்பண்டங்களையும் விற்கின்றனர்.[3] இங்கு கோழிக்கறியில் செய்யப்பட்ட உணவுகளும், கிரஷர்ஸ் எனப்படும் குளிர்பானங்களும் விற்கின்றனர்.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Annual Report 2012". Yum!. பார்க்கப்பட்ட நாள் April 7, 2013.
  2. Lopez, Linette (July 13, 2011). "The 10 Largest Restaurant Chains In America". Business Insider. http://www.businessinsider.com/the-10-largest-restaurnant-chains-in-the-united-states-2011-7?op=1. பார்த்த நாள்: February 27, 2013. 
  3. Saxen, R. (2002). Marketing Management. McGraw Hill Education. p. 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-392-2331-1. பார்க்கப்பட்ட நாள் November 7, 2017.
  4. "KFC Menu, Menu for KFC, Sector 18, Noida". சொமேட்டோ. பார்க்கப்பட்ட நாள் August 27, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே_எப்_சி&oldid=3790949" இலிருந்து மீள்விக்கப்பட்டது