காலனெல் சாண்டர்ஸ்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
காலனெல் ஹார்ட்லேண்ட் டேவிட் சாண்டர்ஸ் (செப்டம்பர் 9, 1890 - டிசம்பர் 16, 1980) ஒரு அமெரிக்க தொழிலதிபர் ஆவார். இவர் சங்கிலித் தொடர் துரித உணவகமானகென்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) என்பதை நிறுவியவர் ஆவார். பின்னர் நிறுவனத்தின் வணிகக் குறியீடாகவும், தூதராகவும் சின்னமாகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்டார். இன்றும் அவரது பெயர் அந்நிறுவனத்தின் பெயராகவும் அவரது உருவப்படம் வணிகக் குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது.[1]
சாண்டர்ஸ் தனது ஆரம்ப வாழ்க்கையில் தீயணைப்புத்துறை, காப்பீடு விற்பனையாளர், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி போன்ற பல வேலைகளைச் செய்திருக்கிறார்.மிகவும் மன அழுத்தத்தில் இருந்த இவர், கென்டக்கியின் வடக்கு கார்பினில் உள்ள தனது சாலையோர உணவகத்தில் பொறித்த கோழியிறைச்சிகளை விற்கத் தொடங்கினார். அந்த நேரத்தில் சாண்டர்ஸ் தனது "ரகசிய செய்முறையை" உருவாக்கினார். மற்றும் வெப்ப அழுத்த முறையில் கோழியிறைச்சியை பொறிக்கும் காப்புரிமை முறையை உருவாக்கினார். அதன் பிறகு காப்புரிமைமுறை உணவகத்தை நிறுவ விரும்பினார். முதல் கே.எஃப்.சி காப்புரிமைமுறை உணவகம் 1952 இல் உட்டாவின் தெற்கு சால்ட் லேக்கில் திறக்கப்பட்டது.பிறகு காப்புரிமை உணவகங்களை நாடு முழுவதும் உருவாக்கும் பணியில் தனது முழு நேரத்தையும் அர்பணித்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "KFC Corporation History". Funding Universe. Archived from the original on August 21, 2016. பார்க்கப்பட்ட நாள் August 23, 2016.