லாபு

ஆள்கூறுகள்: 2°45′N 101°49′E / 2.750°N 101.817°E / 2.750; 101.817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாபு
Labu
நெகிரி செம்பிலான்
லாபு நகரம்
லாபு நகரம்
லாபு is located in மலேசியா
லாபு
லாபு
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°45′N 101°49′E / 2.750°N 101.817°E / 2.750; 101.817
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான்

லாபு (ஆங்கிலம்: Labu; மலாய் மொழி: Labu) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் சார்ந்த நகரம் ஆகும். சிரம்பான் நகர மையத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

லாபு என்பது பூசணி காயைக் குறிக்கும் ஒரு மலாய் சொல் ஆகும். இந்த நகரத்தை 'டத்தோ சியாபண்டார் சுங்கை உஜோங்கின் தாய்நாடு' (ஆங்கிலம்: Datuk Syahbandar Sungai Ujong Motherland; மலாய் மொழி: Telapak Datuk Syahbandar Sungai Ujong) என்றும் அழைப்பதும் உண்டு.

இந்த நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 66 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 102 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 280 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[2]

வரலாறு[தொகு]

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லாபு முக்கிம் நிறுவப்பட்டது. சுங்கை ஊஜோங் (சிரம்பான்) (Datuk Undang of Sungai Ujong) ஆட்சியின் எட்டாவது டத்தோ உண்டாங் பதவி வகித்த, டத்தோ கெலானா பெட்ரா ஸ்ரீ ஜெயா (Dato' Kelana Petra Sri Jaya) என்பவரால் இந்த முக்கிம் உருவாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியர்கள் லாபு நகரத்தைத் தங்களின் தலைமையகங்களில் ஒன்றாகப் பயன்படுத்தினார்கள். நகரத்திற்கு அருகில் பல கோட்டைகளைக் கட்டினார்கள். அவை பெரும்பாலும் 1995-ஆம் ஆண்டில், இரட்டை இரயில்பாதை அமைக்கப் படுவதற்காக இடிக்கப்பட்டு விட்டன.

அமெரிக்க அதிபர் லின்டன் ஜான்சன்[தொகு]

மலாயா அவசர காலத்தின் போது உள்ளூர் சீனத் தொழிலாளர்களைத் தங்க வைப்பதற்காக லாபு நகரத்திற்கு அருகிலேயே புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன.

1966 அக்டோபர் 31-ஆம் தேதி, அமெரிக்க அதிபர் லின்டன் பி. ஜான்சன் இந்த நகருக்குப் பயணம் செய்தார். அவர் சென்ற இடமான லாபு ஜெயாவிற்கு பெல்டா ஜான்சன் (ஆங்கிலம்: FELDA LB Johnson; மலாய் மொழி: Kampung LB Johnson) என்று பெயரிடப்பட்டது.[3][4]

சிரம்பான் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்[தொகு]

சிரம்பான் மாவட்டத்தில் மாவட்டத்தில் 8 முக்கிம்கள் உள்ளன. அவற்றுள் ராசாவும் ஒரு முக்கிம் ஆகும்.

  1. அம்பாங்கான் (Ampangan)
  2. லாபு (Labu)
  3. லெங்கெங் (Lenggeng)
  4. பந்தாய் (Pantai)
  5. ராசா (Rasah)
  6. ரந்தாவ் (Rantau)
  7. சிரம்பான் நகரம் (Seremban City)
  8. செத்துல் (Setul)

போக்குவரத்து[தொகு]

லாபு நகரில் உள்ள லாபு சாலை 362 என்பது லாபு நகருக்கும் திரோய் (Tiroi) நகருக்கும் முதுகெலும்பாக உள்ளது. நீலாய் மற்றும் சிரம்பான் நகரங்களுக்குச் செல்வதற்கு இந்தச் சாலை பயன்படுகிறது.

லாபு நகருக்கு சிரம்பான் தொடருந்து சேவை (KTM Komuter Seremban Line) உள்ளது. இருப்பினும் இந்தத் தொடருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாகப் பழுது பார்க்கப் படாமல் உள்ளது.

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாபு&oldid=3447118" இருந்து மீள்விக்கப்பட்டது