உள்ளடக்கத்துக்குச் செல்

போர்டிக்சன் மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°30′N 101°55′E / 2.500°N 101.917°E / 2.500; 101.917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்டிக்சன் மாவட்டம்
Port Dickson District
Daerah Port Dickson
நெகிரி செம்பிலான்
போர்டிக்சன் மாவட்டம் உட்பிரிவுகள்
போர்டிக்சன் மாவட்டம்
உட்பிரிவுகள்
Map
போர்டிக்சன் மாவட்டம் is located in மலேசியா
போர்டிக்சன் மாவட்டம்
      போர்டிக்சன் மாவட்டம்
ஆள்கூறுகள்: 2°30′N 101°55′E / 2.500°N 101.917°E / 2.500; 101.917
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
தொகுதிபோர்டிக்சன் மக்களவைத் தொகுதி
உள்ளூராட்சிபோர்டிக்சன் உள்ளூராட்சி
அரசு
 • மாவட்ட அதிகாரிகைரி மாமோர்
பரப்பளவு
 • மொத்தம்572.35 km2 (220.99 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,10,617
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
71xxx
தொலைபேசி எண்கள்+6-06
வாகனப் பதிவெண்கள்N
இணையதளம்போர்டிக்சன் நகராட்சி

போர்டிக்சன் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Port Dickson; ஆங்கிலம்: Port Dickson District; சீனம்: 波德申縣) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். போர்டிக்சன் மாவட்டத்தின் முக்கிய நகரம் போர்டிக்சன் (Port Dickson) நகரம்.

போர்டிக்சன் ஒரு பிரபலமான விடுமுறைச் சுற்றுலாத் தளமாக, மலேசியாவில் நன்கு அறியப்பட்ட இடமாகும். கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 90 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. உள்ளூர் மக்களால் பி.டி. (PD) என்று சுருக்கமாக அழைக்கப் படுகிறது.[2]

கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் பெருநகரங்களில் இருந்து முக்கிய நெடுஞ்சாலைகள் மூலமாக எளிதில் அடையக் கூடியதாக இடத்தில் அமைந்து உள்ளது. 10 மைல் நீளத்திற்கு அமைதியான கடற்கரைகள் நீண்டுள்ளன. நெகிரி செம்பிலானில் ஒரே கடற்கரை மாவட்டம்.

வரலாறு

[தொகு]

மீனவர்கள் வசிக்கும் ஒரு சிறிய மலாய்க் கிராமமாகப் போர்டிக்சன், தன் வரலாற்றைத் தொடங்கியது. உள்ளூர் மலாய்க்காரர்கள் தஞ்சோங் என்று அழைத்தார்கள். எனினும் அங்கு வாழ்ந்த சீனர்களும், இந்தியர்களும் ஆராங் (Arang) என்று அழைத்தனர். அந்தப் பெயர் ஓர் உள்ளூர் நிலக்கரி சுரங்கத்தின் பெயராகும்.

1820-களில், போர்டிக்சன் நகரில் இருந்து 7 கி.மீ. வடக்கே உள்ள லுக்குட் எனும் நகரில் ஈயப் படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[3] அதுவே சீனர்களின் வருகைக்கு வழிவகுத்தது. 1840-ஆம் ஆண்டுகளில் போர்டிக்சன் பகுதியில் காபி, மிளகுத் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.

பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில், சர் பிரடெரிக் டிக்சன் (Sir Frederic Dickson) எனும் பிரித்தானிய அதிகாரி, ஈயம் கொண்டு செல்வதற்கான துறைமுகமாகப் போர்டிக்சனை மாற்றி அமைத்தார்.

நிர்வாகம்

[தொகு]

போர்டிக்சன் மாவட்டத்தின் நகர்ப்புறங்கள்

[தொகு]
  1. ஸ்பிரிங்ஹில் நகரம் (Bandar Springhill)
  2. சுங்காலா நகரம் (Bandar Sunggala)
  3. புக்கிட் பாலோங் (Bukit Palong)
  4. ஜிம்மா (Jimah)
  5. கோலா லுக்கு (Kuala Lukut)
  6. லிங்கி (Linggi)
  7. லுக்குட் (Lukut)
  8. பாசிர் பாஞ்சாங் (Pasir Panjang)
  9. பெங்காலான் கெம்பாஸ் (Pengkalan Kempas)
  10. சிலியாவ் (Siliau)
  11. சிருசா (Sirusa)
  12. தெலுக் கெமாங் (Teluk Kemang)

போர்டிக்சன் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்

[தொகு]

போர்டிக்சன் உள்ளூராட்சி மன்றத்தால் போர்டிக்சன் மாவட்டம் நிர்வாகம் செய்யப் படுகிறது. போர்டிக்சன் மாவட்டத்தில் 5 முக்கிம்கள் உள்ளன.

  1. ஜிம்மா (Jimah)
  2. லிங்கி (Linggi)
  3. பாசிர் பாஞ்சாங் (Pasir Panjang)
  4. போர்டிக்சன் (Port Dickson Town)
  5. சிருசா (Si Rusa)

போர்டிக்சன் தேர்தல் முடிவுகள்

[தொகு]




2022-இல் போர்டிக்சன் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[4]

  மலாயர் (44.2%)
  சீனர் (31.4%)
  இதர இனத்தவர் (3.3%)
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
அமினுடின் அருண்
(Aminuddin Harun)
பாக்காத்தான் அரப்பான்42,01352.4018.92
பா. கமலநாதன்
(P. Kamalanathan)
பாரிசான் நேசனல்18,41222.967.23
ரபி முசுதபா
(Rafei Mustapha)
பெரிக்காத்தான் நேசனல்18,23522.7422.74
அகமட் இடாம் அகமட் நசுரி
(Ahmad Idham Ahmad Nazri)
தாயக இயக்கம்1,0841.351.35
அப்துல் ராணி குலுப் அப்துல்லா
(Abdul Rani Kulup Abdullah)
சுயேச்சை4410.550.55
மொத்தம்80,185100.00
செல்லுபடியான வாக்குகள்80,18598.46
செல்லாத/வெற்று வாக்குகள்1,2511.54
மொத்த வாக்குகள்81,436100.00
பதிவான வாக்குகள்/வருகை1,04,45078.0019.40
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [5]

மலேசிய மக்களவையில் போர்டிக்சன் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கட்சி
P132 போர்டிக்சன் அன்வார் இப்ராகிம் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)

மாநிலச் சட்டமன்றம்

[தொகு]

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தில் போர்டிக்சன் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[6]

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P132 N29 சுவா யெக் டியூ சிங் பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்)
P132 N30 லுக்குட் சூ கென் குவா பாக்காத்தான் அரப்பான் (ஜ.செ.க)
P132 N31 பாகன் பினாங் அயிருடின் அபு பக்கார் பாரிசான் நேசனல் (அம்னோ)
P132 N32 லிங்கி ரகுமான் ரெட்சா பாரிசான் நேசனல் (அம்னோ)
P132 N33 ஸ்ரீ தஞ்சோங் ரவி முனுசாமி பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்)

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

[தொகு]

போர்டிக்சன் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

நெகிரி செம்பிலான்; போர்டிக்சன் மாவட்டத்தில் (Port Dickson District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,563 மாணவர்கள் பயில்கிறார்கள். 220 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

இங்குள்ள சில தோட்டங்கள் 1850-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப் பட்டவை. மலேசியாவில் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.[7]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD2034 போர்டிக்சன் SJK(T) Port Dickson[8][9] போர்டிக்சன் தமிழ்ப்பள்ளி 71000 போர்டிக்சன் 323 26
NBD2035 போர்டிக்சன் (தாமான் உத்தாமா) SJK(T) Ldg St Leonard[10] செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி 71010 போர்டிக்சன் 48 9
NBD2037 லுக்குட் SJK(T) Ladang Sendayan[11] செண்டாயான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71010 போர்டிக்சன் 58 11
NBD2038 சிருசா
(SiRusa)
SJK(T) Kem Askar Melayu[12] இராணுவ முகாம் தமிழ்ப்பள்ளி 71050 போர்டிக்சன் 54 10
NBD2039 செங்காங் தோட்டம் பாசிர் பாஞ்சாங் SJK(T) Ladang Sengkang[13] செங்காங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71250 போர்டிக்சன் 56 10
NBD2040 சுங்காலா தோட்டம் SJK(T) Ldg Sungala[14] சுங்காலா தோட்டத் தமிழ்ப்பள்ளி 71050 சிருசா 37 10
NBD2041 சுவா பெத்தோங் தோட்டம் SJK(T) Ldg Sua Betong[15][16] சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72300 போர்டிக்சன் 29 8
NBD2042 தானா மேரா தோட்டம் SJK(T) Ladang Tanah Merah[17][18] தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி 71010 லுக்குட் 93 13
NBD2043 சாலாக் தோட்டம் SJK(T) Ladang Atherton[19] அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 21 8
NBD2044 பிரட்வால் தோட்டம் SJK(T) Ldg Bradwall[20] பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 24 9
NBD2045 ஸ்பிரிங் ஹில் SJK(T) Bandar Spring Hill[21] ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி 71010 லுக்குட் 297 30
NBD2046 லுக்குட் SJK(T) Sungai Salak[22] சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி 71010 லுக்குட் 170 18
NBD2047 சகா தோட்டம் SJK(T) Ldg Sagga[23][24] சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 80 10
NBD2048 சிலியாவ் தோட்டம் SJK(T) Ldg Siliau[25] சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 40 11
NBD2049 லின்சம் தோட்டம் SJK(T) Ladang Linsum லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71200 ரந்தாவ் 71 11
NBD2051 தம்பின் லிங்கி தோட்டம் SJK(T) Ladang Tampin Linggi[26] தம்பின் லிங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி 71200 ரந்தாவ் 34 12
NBD2052 புக்கிட் பிளாண்டோக் SJK(T) Mukundan[27] முகுந்தன் தமிழ்ப்பள்ளி 71960 போர்டிக்சன் 128 14

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pejabat Daerah Dan Tanah Port Dickson - LATAR BELAKANG JABATAN". pdtpd.ns.gov.my.
  2. "Port Dickson is a beach resort destination at Negeri Sembilan in Malaysia". www.portdickson.info. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  3. "Port Dickson History". Official Portal of Port Dickson Municipal Council (MPPD) (in ஆங்கிலம்). 1 September 2015. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  4. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  5. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.
  6. "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் - 2018". Archived from the original on 2018-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
  7. "The Linsum estate, at Rantau, is the oldest estate in Negri Sambilan, and is famous throughout the Federated Malay States because it contains some of the oldest and largest Para trees in the district. Originally it was planted with coffee". பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  8. "WELCOME TO SJKT PORT DICKSON" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  9. "போர்டிக்சன் தமிழ்ப்பள்ளி - SJK (T) Port Dickson". sjk-t-port-dickson.business.site (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  10. "செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி - SJKT LADANG SAINT LEONARD" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  11. "செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி - Acara Jemputan di SJKT Ladang Sendayan". பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  12. "இராணுவ முகாம் தமிழ்ப்பள்ளி". KAZHVINIE. பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  13. "செங்காங் தோட்டம் பாசிர் பாஞ்சாங் - SJK(T) Ladang Sengkang: Tentang Kami". SJK(T) Ladang Sengkang. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  14. "சுங்காலா தோட்டத் தமிழ்ப்பள்ளி - CSR at SJK (T) Ladang Sungala, Port Dickson" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  15. "சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PICTURE GALLERY 1". பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  16. "சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  17. "தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang TANAH MERAH". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  18. "தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  19. "அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PELANCARAN BULAN KEMERDEKAAN PERINGKAT SEKOLAH (TAHUN 2021)" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  20. "பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  21. "ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி - STBS batch 2018". பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  22. "லுக்குட் இராணுவ முகாம் தமிழ்ப்பள்ளி - SJK(T) Sungai Salak Lukut Deserves School Land as promised". LLG Cultural Development Centre. 22 July 2010. பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  23. "சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil School In Negeri Sembilan Remains Unused Upon Completion 5 Years Ago". Varnam MY. 11 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  24. "SJKT LADANG SAGGA ZONE LEVEL SCIENCE FAIR EXPERIMENT" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  25. "சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  26. "தம்பின் லிங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி -Sekolah Jenis Kebangsaan (T) Tampin Linggi, Port Dickson, Negeri Sembilan". ROSE GARDEN. 25 March 2008. பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  27. "முகுந்தன் தமிழ்ப்பள்ளி - Sjk tamil mukundan". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்டிக்சன்_மாவட்டம்&oldid=4049494" இலிருந்து மீள்விக்கப்பட்டது