செம்போல் நகரம்

ஆள்கூறுகள்: 2°54′41.71″N 102°23′28.6″E / 2.9115861°N 102.391278°E / 2.9115861; 102.391278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்போல் நகரம்
(பண்டார் ஜெம்போல்)
Bandar Seri Jempol
நெகிரி செம்பிலான்
பண்டார் ஜெம்போல் பள்ளிவாசல்
பண்டார் ஜெம்போல் பள்ளிவாசல்
Map
ஆள்கூறுகள்: 2°54′41.71″N 102°23′28.6″E / 2.9115861°N 102.391278°E / 2.9115861; 102.391278
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம் செம்போல்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு72120[1]
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 06458 0000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

செம்போல் நகரம் அல்லது பண்டார் ஜெம்போல் (மலாய்; ஆங்கிலம்: Bandar Seri Jempol; சீனம்: 斯里仁保镇) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செம்போல் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம். இந்த நகரம் 1980-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரமாகும்.[2]

இந்த நகரத்தின் பழைய பெயர் செர்த்திங் (Serting). அதிகாரப்பூர்வமாக பண்டார் ஜெம்போல் என்று இந்த நகரம் அழைக்கப்பட்டாலும் இங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் செர்த்திங் என்றே அழைக்கின்றனர்.

பொது[தொகு]

செம்போல் மாவட்டத்தின் இரு முக்கிய நகரங்களில் செம்போல் நகரமும் ஒன்றாகும். மற்றொரு முக்கியமான நகரம் பகாவ்.

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 137 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. மிக அருகாமையில் உள்ள நகரம் பகாவ் நகரம். 21 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

போக்குவரத்து[தொகு]

செம்போல் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

நெகிரி செம்பிலான், செம்போல் மாவட்டத்தின் செம்போல் நகரச் சுற்றுவட்டாரப் பகுதியில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 176 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்: [3]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD6002 ஆயர் ஈத்தாம் தோட்டம் SJK(T) Ladang Air Hitam[4][5] ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72120 பண்டார் ஸ்ரீ செம்போல் 91 14
NBD6003 கெடிஸ் தோட்டம் SJK(T/Te) Ladang Geddes கெடிஸ் தோட்டத் தமிழ் தெலுங்கு பள்ளி 72120 பண்டார் ஸ்ரீ செம்போல் 85 14

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bandar Seri Jempol, Negeri Sembilan". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
  2. Volunteers, Author Museum (3 June 2023). "Jempol was declared a district on 1 January 1980. Then on 29 January 2019, the status was upgraded to a municipal council, the fourth municipal council in Negeri Sembilan". Museum Volunteers, JMM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 January 2024. {{cite web}}: |first1= has generic name (help)
  3. "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
  4. "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Jenis Kebangsaan Tamil Ayer Hitam". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  5. "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்போல்_நகரம்&oldid=3879126" இலிருந்து மீள்விக்கப்பட்டது