ரெப்பா

ஆள்கூறுகள்: 2°30′59″N 102°14′34″E / 2.51639°N 102.24278°E / 2.51639; 102.24278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெப்பா
Repah
நெகிரி செம்பிலான்
ரெப்பா is located in மலேசியா
ரெப்பா
      தம்பின் நகரம்
ஆள்கூறுகள்: 2°30′59″N 102°14′34″E / 2.51639°N 102.24278°E / 2.51639; 102.24278
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்தம்பின்
உள்ளூராட்சிதம்பின் உள்ளூராட்சி மன்றம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு73xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N
இணையதளம்Tampin District Council

ரெப்பா என்பது (மலாய்: Repah; ஆங்கிலம்: Repah; சீனம்: 雷帕) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தம்பின் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம்; ஒரு முக்கிம் ஆகும்.[1]

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 62 கி.மீ. தொலைவிலும்; கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 125 கி.மீ. தொலைவிலும்; தம்பின் நகரத்திற்கு மிக அருகாமையில் அமைந்து உள்ளது.

மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ரெப்பா நகரமும் ஒன்றாகும். ரெப்பா சுற்றுவட்டார மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 17.60% ஆகும். 2008-ஆம் ஆண்டில் இருந்து 2023-ஆம் ஆண்டு வரை, கடந்த 15 ஆண்டுகளாக இந்தியர்களின் கைவசம் உள்ளது. ரெப்பா சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வீரப்பன் சுப்பிரமணியம் பணியாற்றி வருகிறார்.[2]

நகர்ப்பகுதிகள்[தொகு]

  1. பெர்மாய் கிராமப் பூங்கா
  2. ரெப்பா சிறு தொழில் பகுதி
  3. குனோங் இமாஸ் சிறு தொழில்துறை பகுதி

ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி[தொகு]

நெகிரி செம்பிலான், ரெப்பா வட்டாரத்தில் 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. 40 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD4070 ரெப்பா தோட்டம் SJK(T) Ladang Repah[3] ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 73000 தம்பின் 40 10

மேற்கோள்கள்[தொகு]

  1. "The sale of Agro Madani DUN Repah is lively". Negeri Kita. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
  2. "VEERAPAN A/L SUPERAMANIAM". பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
  3. Repah, Sjktladang Repah , Sjktladang (19 August 2015). "ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SUKAN MINI STLR 2015". SJK TAMIL LADANG REPAH. பார்க்கப்பட்ட நாள் 21 January 2022.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெப்பா&oldid=3878017" இலிருந்து மீள்விக்கப்பட்டது