உள்ளடக்கத்துக்குச் செல்

சிலியாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலியாவ்
Siliau
நகரம்
நெகிரி செம்பிலான்
சிலியாவ் is located in மலேசியா மேற்கு
சிலியாவ்
சிலியாவ்
சிலியாவ் நகரம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°35′N 101°54′E / 2.583°N 101.900°E / 2.583; 101.900
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
தொகுதிசிரம்பான் மாவட்டம்
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாடு இல்லை)
மலேசிய அஞ்சல் குறியீடு
71100
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N
இணையதளம்போர்டிக்சன் நகராண்மைக் கழகம்

சிலியாவ் என்பது (மலாய்: Siliau; ஆங்கிலம்: Siliau; சீனம்: 西廖) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தின் அமைந்துள்ள ஒரு நகரம்.[1]

சிரம்பான் நகரில் இருந்து 28 கி.மீ; போர்டிக்சன் நகரில் இருந்து 18 கி.மீ; ரந்தாவ் நகரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. சிலியாவ் புறநகர்ப்பகுதி எண்ணெய் பனை தோட்டங்களினால் சூழப்பட்டுள்ளது.[2]

சிலியாவ் பகுதியில் நிறைய எண்ணெய் பனை தோட்டங்கள் இருப்பதால், தமிழர்களின் நடமாட்டமும் அதிகமாகக் காணப் படுகிறது. தமிழர்கள் 1850-ஆம் ஆண்டுகளில் குடியேறினார்கள். முதன்முதலில் மலாயாவில் தமிழர்கள் குடியேறிய பகுதிகளில் இந்தப் பகுதியும் ஒன்றாகும்.[3][4] தமிழ் எழுத்தாளர்கள்; கவிஞர்கள் பலரை உருவாக்கிய பெருமை இந்த இடத்திற்கு உண்டு.

வரலாறு

[தொகு]

1850-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் நூற்றுக் கணக்கான கரும்பு, காபி, மிளகு தோட்டங்கள் தோற்றுவிக்கப் பட்டன. பெரும்பாலான தோட்டங்கள் பினாங்கு; செபராங் பிறை; பேராக் கிரியான், நெகிரி செம்பிலான் பகுதிகளில் இருந்தன. கரும்பு தோட்டங்கள் தான் மிகுதி. இந்தத் தோட்டங்கள் மலாயாவிலேயே மிக மிகப் பழமையான தோட்டங்கள்.

ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் கரும்புத் தோட்டங்கள் தான் மலாயாவில் பிரதான தோட்டங்களாக இருந்தன. 1896-ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் ரப்பர் தோட்டங்கள் உருவாகின. ஆயிரக்கணக்கான, இலட்சக் கணக்கான தமிழர்கள் வேலை செய்து இருக்கின்றனர்.[5]

சிலியாவ் புறநகர்ப் பகுதியில் தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

சிலியாவ் புறநகர்ப் பகுதியில் 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 165 மாணவர்கள் பயில்கிறார்கள். 38 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD2043 அதர்ட்டன் தோட்டம் SJK(T) Ladang Atherton[6] அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 21 8
NBD2044 பிரட்வால் தோட்டம் SJK(T) Ldg Bradwall[7] பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 24 9
NBD2047 சகா தோட்டம் SJK(T) Ldg Sagga[8][9] சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 80 10
NBD2048 சிலியாவ் தோட்டம் SJK(T) Ldg Siliau[10] சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 40 11

ஸ்ரீ முருகன் ஆலயம் சிலியாவ்

[தொகு]
சிலியாவ் நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலை

சிலியாவ் இரயில் நிலையத்திற்கு அருகில் சிலியாவ் ஸ்ரீ முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வாழ்ந்து வரும் இந்துக்கள் ஆலயத்தைப் பராமரித்து வருகிறார்கள். 1970-ஆம் ஆண்டு முதல் முருகனின் கார்த்திகை திருவிழாவை விமரிசையுடன் கொண்டாடி வருகிறார்கள்.[11]

1967-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரயில்வே நிலத்தில், மலாயா இரயில்வே அதிகாரியாக பணியாற்றிய எஸ். ராமையா என்பவரின் தலைமையில் இந்த ஆலயம் தொடங்கப்பட்டது. எஸ்.எஸ். பக்கிரிசாமி என்பவரும் இந்த ஆலயத்தின் நற்பணிகளுக்கு தலைமை தாங்கி உள்ளார்.

1987-ஆம் ஆண்டில், மறைந்த முருக பக்தர் கிருபானந்த வாரியார், இந்த ஆலயத்திற்கு வருகை தந்து சொற்பொழிவுகள் ஆற்றி உள்ளார். 1997-ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தின் செயலாளர் செல்வராஜ்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Kenali Asal Usul Nama Kampung SILIAU, Negeri Sembilan". The Kipidap. Retrieved 17 December 2021.
  2. ↑ "Siliau - Negeri Sembilan". www.heritagemalaysia.my. Retrieved 17 December 2021.
  3. ↑ முத்துக்கிருஷ்ணன், மலாக்கா. "மலாயா தமிழர்கள்: புக்கிட் மெர்தாஜாம் அல்மா தோட்டம் 1853" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 17 December 2021.
  4. ↑ "Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources". Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources: 374.
  5. ↑ Jain, Ravindra K. (1993). "Tamilian Labour and Malayan Plantations, 1840-1938". Economic and Political Weekly. pp. 2363–2370. Retrieved 17 December 2021.
  6. ↑ "அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PELANCARAN BULAN KEMERDEKAAN PERINGKAT SEKOLAH (TAHUN 2021)" (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021.
  7. ↑ "பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021.
  8. ↑ "சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil School In Negeri Sembilan Remains Unused Upon Completion 5 Years Ago". Varnam MY. 11 January 2021. Retrieved 16 December 2021.
  9. ↑ "SJKT LADANG SAGGA ZONE LEVEL SCIENCE FAIR EXPERIMENT" (in ஆங்கிலம்). Retrieved 16 December 2021.
  10. ↑ "சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி". www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 16 December 2021.
  11. ↑ "ஸ்ரீ முருகன் ஆலயம் Sri Murugan Temple Siliau, Port Dickson Negeri Sembilan Malaysia Murugan Temples". kaumaram.com. Retrieved 17 December 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலியாவ்&oldid=4490140" இலிருந்து மீள்விக்கப்பட்டது