மலாயா வங்கி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலாயா வங்கி நிறுவனம்
Malayan Banking Berhad
வகைபொது நிறுவனம்
நிறுவுகை31 மே 1960
நிறுவனர்(கள்)கூ டெக் புவாத்
தலைமையகம்மேபாங்க் மினாரா
கோலாலம்பூர், மலேசியா
சேவை வழங்கும் பகுதிதென்கிழக்காசியா
ஆங்காங், சீனா, பகுரைன் ஐ.இரா, ஐ.அ, பாக்கித்தான்
முக்கிய நபர்கள்தாதுக் அப்துல் பரீது அலையசு
(தலைவரும் மு.செ.அதிகாரியும்)
மொகமது சுகைல் அமர்
(குழு ம.தொ.அதிகாரி)
ஜெரோம் ஹோன் கா சூ
(குழு மு.இ.அதிகாரி)
தொழில்துறைநிதிச் சேவைகள்
வருமானம்Red Arrow Down.svg RM18.53 பில்லியன்
(US$5.30 பில்லியன்) (2014)[1]
இயக்க வருமானம்Green Arrow Up Darker.svg RM8.98 பில்லியன்
(US$2.57 பில்லியன்) (2014)
நிகர வருமானம்Green Arrow Up Darker.svg RM6.72 பில்லியன்
(US$1.92 பில்லியன்) (2014)[1]
மொத்தச் சொத்துகள்Green Arrow Up Darker.svg RM640.3 பில்லியன்
(US$183.13 பில்லியன்) (2014)[1]
பணியாளர்47,000
இணையத்தளம்www.maybank.com

மலாயா வங்கி நிறுவனம்(Malayan Banking Berhad, பங்கு வர்த்தகத்தில் மேபாங்க், வார்ப்புரு:Myx) மலேசியாவைச் சேர்ந்த அனைத்துச் சேவைளையும் வழங்கும் தனியார் வங்கி நிறுவனமாகும். இது முதன்மையாக மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா பகுதிகளில் இயங்குகின்றது.

பின்னணி[தொகு]

மேபாங்க்கின் மொத்த பங்குகளின் மதிப்பின்படியும் மொத்த சொத்துக்களின் அடிப்படையிலும், இது மலேசியாவின் மிகப் பெரும் வங்கியாக விளங்குகின்றது. 2014ஆம் ஆண்டில் அமெரிக்க$ 183 பில்லியன் மொத்தச் சொத்துக்களையும் நிகர இலாபமாக அமெரிக்க$ 1.92 பில்லியனையும் கொண்டுள்ள இந்த வங்கி தெற்காசியாவில் உள்ள மிகப் பெரும் வங்கிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

உலகளவில் முதல் 1000 வங்கிகளில் 103வது நிலையிலும் (2014) போர்ப்சு குளோபலின் 2000 வங்கிகளின் பட்டியலில் 371வது இடத்திலும் (2015) உள்ளது.

மலேசியப் பங்குச் சந்தையில் (புர்சா மலேசியா) பட்டியலிடப்பட்டுள்ள பெரிய நிறுவனமாகவும் உள்ளது. இதன் மொத்தப் பங்குகளின் மதிப்பு திசம்பர் 31, 2014இல் அமெரிக்க$ 24.4 பில்லியனாக இருந்தது. புளூம்பெர்கு நிறுவனம் இதனை முதல் 20 வலிமையான வங்கிகளில் ஒன்றாக மதிப்பிட்டுள்ளது.[2]

மேபாங்கின் இசுலாமியத் துணை நிறுவனம், மேபாங்க் இசுலாமிக்கு, ஆசியா பசிபிக் மண்டலத்தில் உள்ள இசுலாமிய வங்கிகளில் முதலிடத்தில் மதிப்பிடப்படுகின்றது.[3] [4]

இந்த வங்கியின் கிளைகள் 10 தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளிலும் முக்கிய ஆசிய நாடுகளிலும் பரந்துபட்டுள்ளது. இந்த வங்கி 2400 உலகளாவிய அலுவலகங்களுடனும் 47,000க்கும் கூடுதலான ஊழியர்களுடனும் இயங்கி வருகின்றது.

மலாயா வங்கியின் கிளைகள் உள்ள நாடுகள்[தொகு]

விவரங்களுடனான முழுமையான பட்டியல்:அனைத்து நாடுகள்

ஆசியா[தொகு]

ஆசியாவிற்கு வெளியே[தொகு]

மேற்சான்று[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Maybank
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாயா_வங்கி_நிறுவனம்&oldid=2223024" இருந்து மீள்விக்கப்பட்டது