சிரம்பான் மாநகராட்சி
சிரம்பான் மாநகராட்சி Seremban City Council Majlis Bandaraya Seremban | |
---|---|
![]() சிரம்பான் மாநகராட்சி சின்னம் | |
வகை | |
வகை | மாநகர் மன்றம் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1897 |
முன்பு | 1. பொதுத் தூய்மைக் கழகம் (Sanitary Board) 2. சிரம்பான் நகராட்சி (Seremban Town Council) |
தலைமை | |
நகர முதல்வர் | மசுரி ரசாலின் Dato' Masri bin Razali 23 சூலை 2021 |
கூடும் இடம் | |
![]() | |
சிரம்பான் மாநகராட்சி தலைமையகம் Majlis Bandaraya Seremban, Wisma MBS, Persiaran Forest Heights 1, Jalan Seremban-Tampin 70450 Seremban, Negeri Sembilan சிரம்பான், நெகிரி செம்பிலான் | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 | |
அடிக்குறிப்புகள் | |
2020 சனவரி 1-ஆம் தேதி சிரம்பான் நகராட்சியும்; நீலாய் நகராட்சியும் ஒன்றிணைக்கப் பட்டன.[1][2] |
சிரம்பான் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Seremban; ஆங்கிலம்: Seremban City Council); (சுருக்கம்: MBS) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில்; சிரம்பான் மாநகரத்தையும்; சிரம்பான் மாவட்டத்தையும் நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும்.
இந்த மாநகராட்சி மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க அதிகார வரம்பின் கீழ் செயல்படுகிறது.
வரலாறு[தொகு]
வளர்ச்சிப் படிகள்[தொகு]
- சிரம்பான் பொதுத் தூய்மைக் கழகம் (மலாய்: Lembaga Kesihatan Seremban; ஆங்கிலம்: Seremban Sanitary Board); 1897;
- சிரம்பான் நகரக் கழகம் (மலாய்: Lembaga Bandaran Seremban; ஆங்கிலம்: Seremban Town Board); 1946;
- சிரம்பான் நகராண்மைக் கழகம் (மலாய்: Majlis Bandaran Seremban; ஆங்கிலம்: Seremban Town Council); 1953;
- சிரம்பான் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Seremban; ஆங்கிலம்: Seremban Municipal Council); 1 மார்ச் 1979;
- சிரம்பான் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Seremban; ஆங்கிலம்: Seremban City Council); 1 சனவரி 2020 தொடக்கம்;[3][4]
பொது[தொகு]
சிரம்பான் மாநகராட்சி முதல்வரும்; சிரம்பான் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கு, நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப் படுகின்றனர்.
இந்த மாநகராட்சியின் நோக்கம்; சிரம்பான் மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை இந்த மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[5].
அமைவு[தொகு]
சிரம்பான் மாநகராட்சி, சிரம்பான் மாவட்டத்தை முழுவதுமாக உள்ளடக்கியது. அதன் எல்லைகளாக உள்ள இடங்கள்:
- செலுபு மாவட்டம் (Jelebu)
- கோலா பிலா மாவட்டம் (Kuala Pilah District);
- ரெம்பாவ் மாவட்டம் (Rembau District);
- போர்டிக்சன் மாவட்டம் (Port Dickson District);
- காஜாங் (Kajang) (சிலாங்கூர்);
- சிப்பாங் மாவட்டம் (Sepang District) (சிலாங்கூர்);
சிரம்பான் மாநகராட்சி தமிழ்ப்பள்ளிகள்[தொகு]
சிரம்பான் மாநகராட்சிக்குள் சிரம்பான் மாவட்டம் அமைந்து உள்ளது. அந்த வகையில் 19 தமிழ்ப்பள்ளிகள் சிரம்பான் மாநகராட்சியின் கவனிப்பில் உள்ளன. 4854 மாணவர்கள் பயில்கிறார்கள். 445 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|
சிரம்பான் | SJK(T) Convent Seremban (Kompleks Wawasan) |
சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி மலேசியத் தொலைநோக்கு பள்ளி |
சிரம்பான் | 642 | 43 |
சிரம்பான் | SJK(T) Lorong Java | லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி | சிரம்பான் | 693 | 51 |
சிரம்பான் | SJK(T) Jalan Lobak | ஜாலான் லோபாக் தமிழ்ப்பள்ளி | சிரம்பான் | 389 | 33 |
நீலாய் | SJK(T) Nilai | நீலாய் தமிழ்ப்பள்ளி | நீலாய் | 537 | 40 |
நீலாய் | SJK(T) Ladang Batang Benar | பத்தாங் பெனார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | நீலாய் | 57 | 11 |
கெர்பி தோட்டம் | SJK(T) Ladang Kirby | கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி | லாபு | 38 | 10 |
குபாங் தோட்டம் | SJK(T) Ladang Kubang | குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | சிரம்பான் | 35 | 10 |
நீலாய் | SJK(T) Desa Cempaka | டேசா செம்பாகா தமிழ்ப்பள்ளி | நீலாய் | 99 | 10 |
மந்தின் | SJK(T) Ldg Cairo | கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி | மந்தின் | 163 | 18 |
லாபு | SJK(T) Labu Bhg 1 | லாபு தமிழ்ப்பள்ளி பிரிவு 1 | சிரம்பான் | 45 | 11 |
லாபு | SJK(T) Ladang Labu Bhg 4 | லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரிவு 4 | லாபு | 23 | 10 |
செனவாங் | SJK(T) Ladang Senawang | செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | சிரம்பான் | 543 | 42 |
சிரம்பான் தோட்டம் | SJK(T) Ladang Seremban | சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | சிரம்பான் | 565 | 44 |
கோம்போக் தோட்டம் | SJK(T) Ladang Kombok[7][8] | கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | ரந்தாவ் | 60 | 14 |
ரந்தாவ் | SJK(T) Rantau[9][10] | ரந்தாவ் தமிழ்ப்பள்ளி | ரந்தாவ் | 293 | 28 |
சங்காய் சிரம்பான் தோட்டம் | SJK(T) Ladang Shanghai Seremban | சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி | சிரம்பான் | 169 | 15 |
பாஜம் | SJK(T) Tun Sambanthan[11] | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி | மந்தின் | 229 | 27 |
செமினி Makhota Hills |
SJK(T) Ladang Lenggeng | லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | லெங்கெங் | 82 | 11 |
பண்டார் ஸ்ரீ செண்டாயான் | SJK(T) Bandar Sri Sendayan | பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம் |
பண்டார் ஸ்ரீ செண்டாயான் | 192 | 17 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Seremban Municipal Council" இம் மூலத்தில் இருந்து 11 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191211101054/http://www.mpsns.gov.my/.
- ↑ "Nilai Municipal Council" இம் மூலத்தில் இருந்து 8 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191208134443/http://www.mpn.gov.my/.
- ↑ "Latar Belakang". https://www.mbs.gov.my/ms/mbs/profil/latar-belakang.
- ↑ "Background". https://www.mbs.gov.my/en/mbs/profile/background.
- ↑ Mohd Yahya, N., The local government system in Peninsular Malaysia: with special reference to the structure, management, finance and planning, 1987
- ↑ "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file. பார்த்த நாள்: 2021-11-28.
- ↑ "கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://m.facebook.com/permalink.php?story_fbid=2152913381640236&id=1717183635213215. பார்த்த நாள்: 17 December 2021.
- ↑ "SJK(T)LADANG KOMBOK,71200 RANTAU, NSDK". http://sjktladangkombok.blogspot.com/2009/. பார்த்த நாள்: 17 December 2021.
- ↑ "ரந்தாவ் தமிழ்ப்பள்ளி - SJK T RANTAU". http://devipssrantau.blogspot.com/2014/08/blog-post.html. பார்த்த நாள்: 17 December 2021.
- ↑ "SEJARAH SJKT RANTAU - ரந்தாவ் தமிழ்ப்பள்ளி வரலாறு" (in en). https://www.youtube.com/watch?v=pGguFXQ32x4. பார்த்த நாள்: 17 December 2021.
- ↑ "துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி". https://sjkttunsambanthanpajam.blogspot.com/2017/07/. பார்த்த நாள்: 19 December 2021.
மேலும் காண்க[தொகு]
- சிரம்பான்
- சிரம்பான் மாவட்டம்
- மலேசிய உள்ளாட்சி மன்றங்களின் பட்டியல்
- சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி
- லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி
- செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி