தாயக இயக்கம்
| தாயக இயக்கம் Homeland Movement Gerakan Tanah Air راقن تانه ا | |
|---|---|
| சுருக்கக்குறி | GTA |
| நிறுவனர் | மகாதீர் முகமது |
| குறிக்கோளுரை | மலேசியா புகழ்பெற்றது மரியாதைக்குரியது (Malaysia, eminent and honourable) |
| தொடக்கம் | 4 ஆகஸ்டு 2022[1] |
| சட்ட அனுமதி | - |
| கலைப்பு | - |
| தலைமையகம் | - |
| இளைஞர் அமைப்பு | - |
| உறுப்பினர் (2022) | மலேசிய பூமிபுத்ரா பெர்காசா கட்சி (புத்ரா) அகில மலேசிய இசுலாமிய முன்னணி (பெர்ஜாசா) இந்திய முசுலிம் கூட்டணி கட்சி (இமான்) |
| கொள்கை | மலாய் தேசியவாதம் இசுலாமிய மக்களாட்சி |
| அரசியல் நிலைப்பாடு | வலது சாரி |
| சமயம் | இசுலாம் |
| மேலவை (மலேசியா) | 0 / 70 |
| நாடாளுமன்ற இடங்கள் | 0 / 222 |
| சட்டமன்றத் தொகுதிகள் | 0 / 607 |
| மாநில முதல்வர்கள் | 0 / 13 |
| தேர்தல் சின்னம் | |
கிளாந்தான் தவிர்த்து[2] கிளாந்தான் மட்டும்[2] | |
| இணையதளம் | |
| tanahairku | |
தாயக இயக்கம் (மலாய்:Gerakan Tanah Air; ஆங்கிலம்:Homeland Movement அல்லது Homeland Party) என்பது மலேசியாவில் மலாய் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இந்தக் கூட்டணி ஆகஸ்டு 2022-இல், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் நிறுவப்பட்டது.[3][4]
2022- ஆம் ஆண்டில், இந்தக் கூட்டணியைத் தொடங்கும் போது, அடுத்த மலேசியப் பொதுத் தேர்தலில், தற்போதைய ஆளும் கூட்டணியான பாரிசான் நேசனலுக்கு எதிராகத் தாயக இயக்கம் போட்டியிடும் என்று மகாதீர் முகமது அறிவித்திருந்தார்.[5]
6 செப்டம்பர் 2022 அன்று, இந்தக் கூட்டணியைப் பதிவு செய்ய மலேசிய சங்கங்களின் பதிவாளரிடம் (Registrar of Societies) விண்ணப்பம் செய்யப்பட்டது.[6]
2022 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி எந்த ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை.[7]
பொது
[தொகு]4 ஆகஸ்டு 2022 அன்று, தாயக இயக்கத்தின் தலைவர் மகாதீர் முகமது, தாம் ஒரு கூட்டணியைத் தொடங்குவதாக அறிவித்தார். மலேசியாவில் உள்ள இனங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம் நாட்டை நிலையான பாதுகாப்புடன் வழிநடத்த இயலும் என்றும்; அதனால் இந்தக் கூட்டணி தொடங்கப்படுவதாகவும் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
23 செப்டம்பர் 2022 அன்று, தாயக இயக்கம், அதிகாரப்பூர்வ அரசியல் கூட்டணியாகப் பதிவு செய்யப்பட்டது.[8] 2 நவம்பர் 2022 அன்று, 2022 பொதுத் தேர்தலில் 121 நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிவித்தது.[9] இருப்பினும், தேர்தல் முடிவில் அனைத்து 121 நாடாளுமன்ற இடங்களில் தோல்வி கண்டது.
மலேசியாவில் தோன்றிய அரசியல் கட்சிகளின் காலவரிசை
[தொகு]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rafidah Mat Ruzki (2022-08-04). "Dr Mahathir umum pelancaran Gerakan Tanah Air". BH Online (in மலாய்).
- ↑ 2.0 2.1 Razak, Radzi (2022-10-11). "Dr Mahathir says will defend Langkawi in GE15". Malay Mail (in ஆங்கிலம்).
- ↑ "Dr M unveils Malay-only Gerakan Tanah Air coalition". Free Malaysia Today. Retrieved 5 August 2022.
- ↑ "Dr M announces new coalition of four parties, Gerakan Tanah Air". New Straits Times. Retrieved 5 August 2022.
- ↑ "Gerakan Tanah Air gabungan parti politik Melayu menentang UMNO dalam PRU15 - Tun Mahathir". Astro Awani. Retrieved 5 August 2022.
- ↑ Bernama (September 6, 2022). "Gerakan Tanah Air serah dokumen pendaftaran kepada RoS". MalaysiaNow. Retrieved 6 September 2022.
- ↑ "Dr Mahathir saddened by Pejuang rout in GE15, hopes winning party gets to form new govt". Malay Mail (in ஆங்கிலம்). 2022-11-23. Retrieved 2022-11-27.
- ↑ Zulkifli, Adie (2022-09-23). "Gerakan Tanah Air gets preliminary RoS approval". New Straits Times. Archived from the original on 15 January 2023. Retrieved 15 January 2023.
- ↑ "PRU-15: GTA bertanding 121 parlimen [METROTV]". 2 November 2022.